Word |
English & Tamil Meaning |
|---|---|
| வினைத்தலை | viṉai-t-talai n. <>id.+. Field of battle; போர்க்களம். வினைத்தலையிலே வந்தவாறே (ஈடு, 4, 6, 1). |
| வினைத்திட்பம் | viṉai-t-tiṭpam n. <>id.+. Firmness, resoluteness in action; தொழில்செய்வதில் மனத்திண்மை. வினைத்திட்பமென்பது (குறள், 666). |
| வினைத்திரிசொல் | viṉai-t-tiricol n. <>id.+. 1. (Gram.) Verb in an abnormal form; திரிந்த வினைச்சொல். (சீவக. 223, உரை.) 2. (Gram.) Verb not in common use and not easily understood; |
| வினைதூய்மை | viṇai-t-tūymai n. <>id.+. Purity in action which brings in not merely wealth but also religious merit and fame; செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும் புகழும் பயந்து நல்லவாகை. (குறள், அதி. 66.) |
| வினைத்தொகை | viṉai-t-tokai n. <>id.+. (Gram.) Elliptical compound in which a verbal root forms the first component; காலங்கரந்த பெயரெச்சத்தொடர். (நன். 364.) |
| வினைத்தொடர்ச்சி | viṉai-t-toṭarcci n. <>id.+. Effect of evil deeds upon the soul; தீவினையின் பயன். (நாமதீப. 291.) |
| வினைதீயார் | viṉai-tīyār n. <>id.+. Sinners, men of evil deeds; தீவினையோர். வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி, 172). |
| வினைதீர் - த்தல் | viṉai-tīr- v. intr. <>id.+. 1. To end the bondage of karma; பூர்வகர்மத்தைப் போக்குதல். வினையேன் வினைதீர் மருந்தானாய் (திவ். திருவாய். 1, 5, 6). 2. To remove obstacles; |
| வினைதீர்த்தான் | viṉaitīrttāṉ n. <>வினைதீர். Gaṇēša; விநாயகக்கடவுள். (யாழ். அக.) |
| வினைநர் | viṉaīnar n. <>வினை. Workmen. See வினைஞர், 1. அரிய லார்கை வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). |
| வினைப்பகுதி | viṉai-p-pakuti n. <>id.+. (Gram.) Verbal base of a derivative word; பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி. (நன். 137, சங்கர.) |
| வினைப்பயன் | viṉai-p-payaṉ n. <>id.+. Result of karma, fruit of actions in previous birth; பூர்வகருமத்தின் விளைவு. பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் (மணி. 24, 107). |
| வினைப்பெயர் | viṉai-p-peyar n. <>id.+. 1. (Gram.) Verbal noun; தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை). 2. (Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள் மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து (சிலப். 4, 47-57, உரை). 3. (Gram.) Name given to a person from his action or vocation; |
| வினைபாராட்டு - தல் | viṉai-pārāṭṭu- v. intr. <>id.+. See வினைவளர்-. (யாழ். அக.) . |
| வினைமாற்று | viṉai-māṟṟu n. <>id.+. (Gram.) Signification of the introduction of an alternative verb in a sentence; முன்சொன்ன தொழிலொழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை. வினைமாற் றசைநிலை (தொல். சொல். 264) |
| வினைமாற்றுச்சொல் | viṉaimāṟṟu-c-col n. <>வினைமாற்று + சொல்3. (Gram.) An expletive word in a sentence, introducing an alternative verb, as maṟṟu; வினைமாறுவதைத் தெரிவிக்கும் 'மற்று' முதலிய இடைச்சொல். |
| வினைமுதல் | viṉai-mutal n. <>வினை +. (Gram.) Subject; கருத்தா. வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே (நன். 321). |
| வினைமுதற்றொழில் | viṉaimutaṟṟoḻil n. <>வினைமுதல் + தொழில். (Gram.) Object; செயப்படுபொருள். (W.) |
| வினைமுற்று | viṉai-muṟṟu n. <>வினை +. (Gram.) Finite verb; முற்றுவிகுதி கொண்ட வினைச்சொல். (நன். 323, மயிலை.) |
| வினைமுறுகுதல் | viṉai-muṟukutal n. <>id.+ முறுகு1-. Maturation of one's past karma; ஊழ்வினை முதிர்ந்து பயன்றரு நிலையிலாகை. (யாழ். அக.) |
| வினைமூளுதல் | viṉai-mūḷutal n. <>id.+ மூள்-. See வினைமுறுகுதல். . |
| வினைமை | viṉaimai n. <>id. 1. Nature of a deed; செய்தொழிலின் தன்மை. 2. Property of functioning; |
| வினையம் 1 | viṉaiyam n. <>id. 1. Action, deed; செய்தொழில். (பிங்.) வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி (கந்தபு. ஏமகூடப். 30). 2. Past karma; 3. Device, means; 4.Cunning, deceit; 5. Deceptive workmanship; 6. See வினயம்1, 3. 7. Happening, event; |
