Word |
English & Tamil Meaning |
|---|---|
| வினாக்குறிப்பு | viṉā-k-kuṟippu n. <>வினா2+. (Gram.) Interrogative, functioning as a predicate; வினாவுடன் குறிப்புமுற்றுப்பொருளதாய் வருஞ்சொல். எவன், யாது. |
| வினாசம் | viṉācam n. <>vi-nāša. Annihilation; கேடு. வினாச காலத்தில் விபரீத புத்தி. |
| வினாடி | viṉāṭi n. <>vi-nādi. A minute portion of time. See விநாடிகை. |
| வினாதலிறை | viṉātal-iṟai n. <>வினா-+இறை2. (Gram.) Interrogation serving as a reply to a question; வினாவடிவமான உத்தரம். (நன். 386.) |
| வினாப்பெயர் | viṉā-p-peyar n. <>வினா2+. (Gram.) Interrogative pronoun; வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல். (நேமிநா. சொல். 31.) |
| வினாபூதகற்பனை | viṉāpūta-kaṟpaṉai n. <>வினாபூதம்+. Obscure precept; தெளிவில்லாத நீதிவாக்கியம். (W.) |
| வினாபூதம் | viṉāpūtam n. prob. vinābhūta. That which is obscure or doubtful; சந்தேகத்திற்கு இடங்கொடுப்பது. (W.) |
| வினாமுதற்சொல் | viṉā-mutaṟ-col n. <>வினா2+. (Gram.) Interrogative word, having an initial viṉāveḻuttu; வினாவெழுத்தை முதலிற் பெற்றுவந்துள்ள சொல். (தக்கயாகப். 585, உரை.) |
| வினாயகத்தாளம் | viṉāyaka-t-tāḷam n. <>vināyaka+. (Mus.) A time-measure, commonly used for the song in praise of Gaṇēša, at the beginning of dance; நாட்டியத் தொடக்கத்தில் விநாயகர்துதிப்பாடற்குக் கொட்டும் தாளவிசேடம். (கோயிலொ. 95.) |
| வினாயகன் | viṉāyakaṉ n. <>Vināyaka. Ganeša. See விநாயகன், 1. (பொதி. நி.) |
| வினாவழு | viṉā-vaḻu n. <>வினா2+. (Gram.) Incorrect use of an interrogative; வினாவைப் பொருளியைபில்லாதபடி வழங்குகை. (தொல். சொல். 14, சேனா.) |
| வினாவழுவமைதி | viṉāvaḻu-v-amaiti n. <>வினாவழு+. (Gram.) Sanction by usage of an incorrect use of an interrogative; வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது. (தொல். சொல். 14, சேனா.) |
| வினாவறி - தல் | viṉā-v-aṟi- v. intr. <>வினா2+. To begin to have powers of understanding; அறியுந்திறமை யுண்டாதல். (W.) |
| வினாவறிபருவம் | viṉāvaṟi-paruvam n. <>வினாவறி-+. Age of discretion, when a child is capable of understanding the meaning of questions put; பகுத்தறிவு உண்டாம் பருவம். |
| வினாவிசைக்குறி | viṉā-v-icai-k-kuṟi n. <>வினா2+இசை4-+. Mark of interrogation (?); கேள்விக் குறி. |
| வினாவிடை | viṉā-viṭai n. <>id.+. 1. Reply in the form of a question; வினாரூபமான விடைவகை. (நன். 386, உரை.) 2, Question and answer; 3. See வினாவிடைப்புத்தகம். |
| வினாவிடைப்புத்தகம் | viṉāviṭai-p-puttakam n. <>வினாவிடை+. Catechism; வினாவும் விடையுமாக அமைந்த நூல். (W.) |
| வினாவு - தல் | viṉāvu- 5 v. tr. See வினவு-. ஆக்க மதர்வினாய்ச் செல்லும் (குறள், 594). |
| வினாவுத்தரம் | viṉā-v-uttaram n. <>வினா2+உத்தரம1¢. A kind of composition in which a word having a particular significance is split into a number of words, each serving as a reply to a question set before; ஒரு பொருளைக் காட்டும் ஒரு மொழியினைப்பிரித்து ஒருவனுடைய பல்வேறுவகை வினாவிற்கும் விடையாகுமாறு அமைக்குஞ் சொல்லணிவகை. (மாறனலங். 280.) (பிங்.) |
| வினாவுள்ளவன் | viṉā-v-uḷḷavaṉ n. <>id.+உள்2. Man of judicious temperament; நிதானபுத்தியுள்ளவன். (W.) |
| வினாவெண்பா | viṉā-veṇpā n. <>id.+. A text-book on šaiva Siddhānta philosophy by Umāpati-civācāriyar, in veṇpā metre and in the form of questions, one of 14 meykaṇṭa-cāttiram, q.v.; மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் வினாரூபமாய் வெண்பாக்களால் அமைந்ததும் உமாபதி சிவாசாரியர் இயற்றியதுமான சைவசித்தாந்த நூல். |
| வினாவெதிர்வினாதல் | viṉā-v-etir-viṉātal n. <>id.+. (Gram.) Reply in the form of a counter-question; ஒருவனது வினாவுக்கு எதிர் வினா ரூபமாகக் கூறும் உத்தரம். (தொல். சொல். 14, இளம்.) |
| வினாவெழுத்து | viṉā-v-eḻuttu n. <>id.+. (Gram.) Initial or final letter of a word, indicating interrogation; சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்து. (நன். 67.) |
| வினிதை | viṉitai n. <>Vinītā. Ayodhyā; அயோத்தி. (திவா.) வினிதை வேந்தன் (சீவக. 2181). |
| வினியோகக்காரன் | viṉiyōka-k-kāraṉ n. <>வினியோகம்+காரன்1. Munificent man; கொடையாளி. (W.) |
