Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஷக்கடிவேளை | viṣakkaṭi-vēḷai n. <>விஷக்கடி +. (Astrol.) Inauspicious time; தீயகாலம். (பஞ்.) |
| விஷக்கண் | viṣa-k-kaṇ n. <>விஷம் +. Evil eye; கேடுபயக்கும் பார்வையுள்ள கண். |
| விஷக்கல் | viṣa-k-kal n. <>id.+. 1. A stone supposed to absorb poison; விஷத்தையெடுப்பதாகக் கருதப்படுங் கல். (W.) 2. Poisonous stone that causes pain when it pricks the foot; |
| விஷக்காய்ச்சல் | viṣa-k-kāyccal n. <>id.+. 1. Enteric fever, typhoid; சன்னிபாதசுரம். 2. Pestilential fever; |
| விஷக்காற்று | viṣa-k-kāṟṟu n. <>id.+. 1. Poisonous wind; contaminated air; விஷத்தன்மை பொருந்திய காற்று. 2. Northerly wind; |
| விஷகடி | viṣa-kaṭi n. <>viṣa + கடி2. See விஷக்கடி. (W.) . |
| விஷகடிகை | viṣa-kaṭikai n. <>id.+ கடிகை2. (Astrol.) Inauspicious period in the duration of a nakṣatra; நக்ஷத்திரத் தியாச்சியம். (விதான. குணாகுண. 25, உரை.) |
| விஷகிருமிநியாயம் | viṣa-kirumi-niyāyam n. <>id.+ krmi + nyāya. Nyāya of the worm bred in poison, illustrating the principle that an evil to which a person is accustomed will not appear to him as an evil; விஷத்திலுண்டாகும் புழுப்போல் தீயதிற் பழகுவோர்க்கு அது தீங்காகத் தோன்றாமை குறிக்கும் நெறி. |
| விஷங்கொல்லி | viṣaṅ-kolli n. <>விஷம் + கொல்-. A herb which acts as an antidote to poison; விஷங்களுக்கு மருந்தாக உதவும் பூடுவகை. (W.) |
| விஷசுரம் | viṣa-curam n. <>viṣa + jvara. 1. See விஷக்காய்ச்சல். (சீவரட். 33.) . 2. Rinderpest; |
| விஷதந்தம் | viṣa-tantam n. <>id.+ தந்தம்1. See விஷப்பல். (தக்கயாகப். 155, உரை.) . |
| விஷதோஷம் | viṣa-tōṣam n. <>id.+. Illness of child, attributed to contact with a person who has not bathed after sexual union and is therefore unclean; புணர்ச்சிக்குப்பின் நீராடாதவர் தொடுவதால் உண்டாவதாகக் கருதப்படும் குழந்தைநோய். (சீவரட்.) |
| விஷந்திரும்பல் | viṣan-tirumpal n. <>விஷம் + திரும்பு-. Counteracting a poison; விஷம் போக்குகை. (W.) |
| விஷந்தீண்டல் | viṣan-tiṇṭal n. <>id.+ தீண்டு-. Poisonous bite, as of a snake; பாம்பு முதலிய விஷஜந்துக்களின் கடி. (C.G.) |
| விஷநட்சத்திரம் | viṣa-naṭcattiram n. <>viṣa +. (Astrol.) The 5th, 11th and 13th nakṣatras counted from the nakṣatra occupied by Rāhu; இராகுநின்ற நட்சத்திரத்திற்கு ஐந்து பதினொன்று பதின்மூன்றாவது நட்சத்திரங்கள். (விதான. குணாகுண. 41, உரை.) |
| விஷநாக்கு | viṣa-nākku n. <>விஷம் +. Evil tongue, as of a person whose croaking comes true; தீமைவிளைக்கும் சொற் பயிலும் நா. Loc. |
| விஷநாபி | viṣanāpi n. <>viṣa-nābhi. Nepal aconite. See வச்சநாபி,1. |
| விஷநீர் | viṣa-nir n. <>விஷம் + நீர்1. Malignant humours causing swelling, etc.; தேகத்துள்ள துர்நீர். (W.) |
| விஷநீரேற்றம் | viṣanīr-ēṟṟam n. <>விஷநீர் +. Dropsy; உடல்வீக்க நோய். (W.) |
| விஷப்பல் | viṣa-p-pal n. <>விஷம் +. 1. Poisonous tooth; விஷமுள்ள பல். 2. See நச்சுப்பல், 2. |
| விஷப்பனி | viṣa-p-paṉi n. <>id.+. Dew that is injurious to health; நோயை யுண்டாக்கக் கூடிய பனி. |
| விஷப்பூச்சி | viṣa-p-pūcci n. <>id.+. Poisonous insect; விஷமுள்ள செந்து. |
| விஷபரீட்சை | viṣa-pariṭcai n. <>viṣa + 1. Examining or testing the presence of poison; விஷங்கலந்திருப்பதை யாராய்கை. 2. Testing the strength of a poison, as by letting a snake bite one; |
| விஷபாகம் | viṣa-pākam n. <>id.+ pāka. Sudden swelling of body; தீடீரென்று காணும் உடல் வீக்கம். (W.) |
| விஷபாண்டு | viṣa-pāṇṭu n. <>id.+. Dropsy; உடல்வீக்கநோய். (பைஷஜ. 263.) |
| விஷபானம் | viṣa-pāṉam n. <>id.+. Taking poison; விஷத்தை யுட்கொள்ளுகை. |
| விஷபேதி | viṣa-pēti n. <>id.+. Cholera; வாந்திபேதி. (W.) |
| விஷம் | viṣam n. <>viṣa. 1. Poison; நஞ்சு. 2. That which is injurious or destructive; 3. (Astrol.) See விஷநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.) |
