Word |
English & Tamil Meaning |
---|---|
ஈடுகட்டு - தல் | īṭu-kaṭṭu- v. <>ஈடு+. tr. To give as security; பிணைகொடுத்தல். 1. To make amends, to make good; to indemnify; 2. To be appropriate security; 3. To feel ardent devotion; |
ஈடுகொடு - த்தல் | īṭu-koṭu- v. <>id.+. intr. 1. To give an equivalent, bestow a reward; பிரதியளித்தல். 2. To be equal; 3. To compete; 4. To bear the brunt;-tr To give satisfaction; |
ஈடுகொள்ளு - தல் | īṭu-koḷḷu- v. intr. <>id.+. To soften; to melt, as the heart; மனங்கனிதல். திருமுக மிறைஞ்சி யீடுகொண்டு (திருவாலவா. 55, 20.) |
ஈடுபடு - தல் | īṭu-paṭu- v. intr. <>id.+. 1. To become weak, feeble; வலியழிதல். (பிரபோத. 19,11.) 2. To be ensnared, entangled; 3. To be absorbed, engrossed; 4. To be oppressed; |
ஈடுபாடு | īṭu-pāṭu n. <>id.+. 1. Trouble, suffering; சங்கடம். ஈடுபா டித்தனையும் பட்டு (அரிச். பு. மயான. 34.) 2. State of being absorbed, engrossed; 3. Profit and loss; |
ஈடுமுப்பத்தாறாயிரம் | īṭu-muppattāṟāyiram n. <>id.+. An exhaustive commentary on the Tiru-vāy-moḻi, said to have been written by Vaṭakku-t-tiru-vīti-p-piḷḷai after hearing it given out by his guru Nam-piḷḷai, consisting of 36,000 granthas of 32 syllables each; திருவாய்மொழி வியாக்கியானங்களு ளொன்று. (உபதேசரத். 44.) |
ஈடேற்றம் | īṭēṟṟam n. <>id.+ ஏற்றம். [M. idēṟṟam.] Deliverance, emancipation, liberation, redemption; உய்வு. |
ஈடேற்று - தல் | īṭēṟṟu- v. tr. <>id.+ ஏற்று-. To deliver, redeem, liberate; உய்வித்தல். |
ஈடேறு - தல் | īṭēṟu- v. intr. <>id.+ ஏறு-. [M. idēṟu.] To be liberated from a worldly life, saved from ruin, rescued from danger, difficulty or disease; உய்வடைதல். தொண்டர்குழாமீடேற (குற்றா. தல. கடவுள். 13). |
ஈண்டு 1 | īṇṭu adv. <>இ3. 1. Here, in this place; இவ்விடத்தில். (திவா.) 2. In this world, in the present birth; 3. In this way; 4. Now; |
ஈண்டு 2 - தல் | īṇṭu - 5 v. intr. 1. To gather, come together; கூடுதல். ஈண்டிய வடியவ ரோடும் (திருவாச. 2, 144). 2. To be close together; to get to be a compact mass, as the atoms of earth; 3. To abound, to be numerous; 4. To speed, haste; -tr. To gouge, extract, pluck out, dig out; |
ஈண்டு 3 | īṇṭu n. <>ஈண்டு-. Haste, speed, despatch; விரைவு. (திவா.) |
ஈண்டு 4 | īṇṭu n. <>இண்டு. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) . |
ஈண்டுநீர் | īṇṭu-nīr n. <>ஈண்டு-+. Sea, literally a large collection of water; கடல். ஈண்டுநீர் மிசைத்தோன்றி (கலித். 100). |
ஈண்டென | īṇṭeṉa adv. <>id. Expeditiously, promptly, speedily; விரைவாக. நீயே ஈண்டெனத் தந்தருள வேண்டு மென்கிறார் (திவ். திருவாய். 2, 9, 2, ஆறா). |
ஈண்டை | īṇṭai adv. <>ஈண்டு1. [T. īdu.] Here, in this world; இங்கு. ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் (நாலடி, 331). |
ஈண்டையான் | īṇṭaiyāṉ n. <>ஈண்டை. Man of this place; இவ்விடத்தான் ஈண்டையாரல்லர் (கம்பரா. தைல. 75.) |
ஈத்து | īttu n. <>Arab. id. Festival; பண்டிகை. Muham. |
ஈதா | ītā int. <>இந்தா. An exclamation inviting attention; lo, see here; இந்தா. அறிந்திலேனீதா (பரிபா. 8, 60). |
ஈதி | īti n. <>īti. Disaster which may befall the land, scourge in six forms, viz., மிக்கபெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி,அரசண்மை; நாட்டுக்குவருங் கேடு. (குறள், 732, உரை.) |
ஈதிபாதை | īti-pātai n. <>id.+bādhā. 1. Pestilence. See ஈதி. 2. Perplexity, quandary, dilemma; தருமசங்கடம். இந்த விஷயம் ஈதிபாதையாயிருக்கிறது. Colloq. |
ஈதிவாதை | īti-vātai n. <>id.+. See ஈதிபாதை. (இரகு. தசரத. 6.) . |