Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்ணெய்தல் | veṇṇeytal n. <>வெண்-மை+நெய்தல். White Indian water-lily, Nymphaea lotus-alba; ஆம்பல்வகை. (பிங்.) |
| வெண்ணெய்நல்லூர் | veṇṇey-nallūr n. 1. A šiva shrine in the South Arcot District, where Saint Suntarar was claimed by Lord šiva as His slave and devotee and where Meykaṇṭa-tēvar was born; சுந்தரமூர்த்திகளைச் சிவபிரான் தடுத்தாட்கொண்டதும் மெய்கண்டதேவர் அவதரித்ததும் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ளது மான சிவதலம். (தேவா.) 2. A place in the Tanjore District where Caṭaiyaṉ, the patron of the poet Kampar, lived; |
| வெண்ணெய்ப்பதம் | veṇṇey-p-patam n. <>வெண்ணெய்+பதம்1. A stage in the preparation of medicinal oil, when it is in the form of a pulpy mass; தைலமருந்து காய்ச்சும் பக்குவவகை. |
| வெண்ணெய்ப்பாரை | veṇṇey-p-pārai n. prob. id.+. 1. Horse-mackerel, greyish, attaining 1 ft. in length, Caranx ire; சாம்பல் நிறமுள்ளதும் ஓர் அடி நீளம் வளர்வதுமான மீன்வகை. 2. See வெண்ணெய்க்கல். Loc. |
| வெண்ணெய்விரை | veṇṇey-virai n. prob. id.+ விரை5. Arnotto seed; சாப்பிராவிரை. |
| வெண்ணெய்வெட்டி | veṇṇet-veṭṭi n. <>id.+வெட்டு-. Colloq. 1. Anything blunt; கூர்மழுங்கியது. 2. Dullard, worthless fellow; 3. Milksop, coward; |
| வெண்ணெல் | veṇṇel n. <>வெண்-மை+நெல். Mountain paddy, wild rice, Oryza mutica; ஒருவகை மலைநெல். அடுமகண் முகந்த வளவா வெண்ணெல். (புறநா. 399). |
| வெண்ணை | veṇṇai n. 1. See வெண்ணெய்நல்லூர், 1. (சி. சி. சுப. பாயி. 2.) . 2. See வெண்ணெய்நல்லூர், 2. சரராமன் வெண்ணை (கம்பரா. நாகபாச. 263). |
| வெண்ணையூர் | veṇṇai-y-ūr n. <>வெண்ணை+. See வெண்ணெய்நல்லூர், 2. (கம்பரா. திருமுடி. 38.) . |
| வெண்ணொச்சி | veṇṇocci n. <>வெண்-மை+நொச்சி. Five-leaved chaste tree, l. sh., Viteanegundo; மரவகை. (பதார்த்த. 528.) |
| வெண்ணோ | veṇṇō n. <>id.+நோ3. See வெண்ணோவு, 1. (யாழ். அக.) . |
| வெண்ணோக்காடு | veṇṇōkkāṭu n. <>id.+நோக்காடு. False labour-pains; பிரசவமாவதற்கு முன் உண்டாம் வேதனை. (W.) |
| வெண்ணோவு | veṇṇōvu n. <>id.+நோவு. 1. A light form of sore-eyes. See வெக்கடுப்பு. (W.) 2. See வெண்ணோக்காடு. Loc. |
| வெண்துளசி | veṇ-tuḷaci n. <>id.+. See வெண்டுளசி. (மலை.) . |
| வெண்தேக்கு | veṇ-tēkku n. <>id.+தேக்கு3. See வெண்டேக்கு. . |
| வெண்பட்டு | veṇ-paṭṭu n. <>id.+பட்டு2. White silk; வெள்ளைநிறமுள்ள பட்டு. வெண்பட்டுடுத்து (சீவக. 2358). |
| வெண்படலிகை | veṇ-paṭalikai n. <>id.+படலிகை2. Silver tray; வெள்ளித்தட்டு. மணிக்குஞ்சி வெண்படலிகைக் குமரனீப்பது (சீவக. 3031). |
| வெண்படி | veṇ-paṭi n. <>id.+படி3. See வெண்சோறு. இன்று கோவிலுக்கு நாழியரிசி வெண்படிக்காகக் கொடுத்திருக்கிறேன். Loc. . |
| வெண்படை | veṇ-paṭai n. <>id.+. Warp, in weaving; நெய்தற்குரிய நூற்பா. ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று (பழமொ. 125). |
| வெண்பதம் | veṇ-patam n. <>id.+பதம்1. Condition of being heated slightly; இளம்பதம். (W.) |
| வெண்பலி | veṇ-pali n. <>id.+பலி3. Ash; சாம்பல். (பிங்.) |
| வெண்பா | veṇ-pā n. <>id.+பா4. (Pros.) One of the four principal kinds of stanza-forms; நால்வகைப் பாக்களுள் ஒன்று. (தொல். பொ. 417.) |
| வெண்பாசி | veṇ-pāci n. <>id.+ பாசி1. A kind of white bead; பாசிமணிவகை. வெண்பாசி பூண்டு (திருவாலவா. 52, 3). |
| வெண்பாட்டம் | veṇ-pāṭṭam n. <>id.+ பாட்டம்1. 1. Summer shower; கோடையிற் பெய்யு மழை. வெண்பாட்டாம் வெள்ளம் தரும் (பழமொ.300). 2. Lease in which no premium is paid, dist. fr. mārāya-p-pāṭṭam; |
| வெண்பாண்டு | veṇ-pāṇṭu n. <>id.+. Albinism; பிறந்ததுமுதல் மீந்தோல் வெண்மையாதற்குக் காரணமான நோய்வகை. |
| வெண்பாதிரை | veṇ-pātirai n. <>id.+. White-flowered fragrant trumpet tree. See பாதிரி1, 3. |
| வெண்பாப்பாட்டியல் | veṇpā-p-pāṭṭiyal n. <>வெண்பா+. (Pros.) A work on poetics in veṇpā verse, by Kuṇavīra-paṇṭitar; குணவீரபண்டிதரால் வெண்பாவினால் இயற்றப்பட்ட பாட்டியல்நூல். |
