Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்பாப்புலி | veṇpā-p-puli n. <>id.+. 1. Title of poets who are experts in composing veṇpā verse; வெண்பாப்பாடுதலில் வல்லவன் என்னும் பட்டம். (W.) 2. A poet; |
| வெண்பாமாலை | veṇpā-mālai n. <>id.+மாலை3. A treatise on the topic of puṟam in veṇpā verse. See புறப்பொருள்வெண்பாமாலை. புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பாமாலை யெனப் பெயர்நிறீஇ (பு. வெ. சிறப்.). |
| வெண்பார்க்கல் | veṇ-pār-k-kal n. <>வெண்-மை+பார்2+. Calcareous earth; சுக்கான்கல். |
| வெண்பாவுரிச்சீர் | veṇpā-v-uriccīr n. <>வெண்பா+. (Pros.) A metrical foot of three acai, i.e. of the value of three long syllables, chiefly found in veṇpā, of four varieties, viz.., nēr-nēr-nēr ( - - -), nirai-nēr-nēr (o o- -), nēr-nirai-nēr (-o o -), nirai-nirai-nēr ( oo oo - ) நேர்நேர்நேர், நிரைநேர்நேர், நேர்நிரைநேர், நிரைநிரைநேர் என வெண்பாவுக்குரியவாய் வரும் நேரீற்று மூவகைச் சீர் (யாப். வி. 12, 61.) |
| வெண்பாவை | veṇ-pāvai n. <>வெண்-மை+. Sarasvatī; நாமகள். திருப்பூவணர்மேல் வெண்பாவையுலாம் பூவையுலாப் பாடவே (பூவண. உலா, காப்பு). |
| வெண்பிறப்பு | veṇ-piṟappu n. <>id.+. A kind of birth. See வெள்ளியுயீர். (மணி. 27, 152.) |
| வெண்பிறை | veṇ-piṟai n. <>id.+. The bright crescent moon; வெள்ளிய பிறைச்சந்திரன். அந்தி வானத்து வெண்பிறை தோன்றி (சிலப். 4, 23). |
| வெண்பு | veṇ-pu n. <>id.+prob.பூ4 Plain; வெண்ணிலம். (J.) |
| வெண்புணர்ச்சிமாலை | veṇ-puṇarcci-mālai n. <>id.+புணர்ச்சி+மாலை3. A poem of three hundred stanzas in veṇpā metre; முந்நூறு வெண்பாக்கள்கொண்ட பிரபந்தவகை. (W.) |
| வெண்புழுக்கல் | veṇ-puḻukkal n. <>id.+. 1. Under boiling; parboiling; இளம்புழுக்கல். (J.) 2. Rice obtained by husking parboiled paddy; 3. See வெண்சோறு. |
| வெண்புழுக்கு | veṇ-puḻukku n. <>id.+. See வெண்புழுக்கல். (யாழ். அக.) . |
| வெண்புழுங்கல் | veṇ-puḻuṅkal n. <>id.+. See வெண்புழுக்கல். Loc. . |
| வெண்பூம்பட்டு | veṇ-pūm-paṭṭu n. <>id.+பூ3+பட்டு2. A kind of cloth of white silk; வெண்பட்டாடைவகை. வெண்பூம்பட்டிற் றிண்பிணியமைந்த பள்ளிக்கட்டில் (பெருங். இலாவாண. 3, 136). |
| வெண்பூமான் | veṇ-pū-māṉ n. <>id.+ id.+ மான்1. Sarasvatī; நாமகள். (நாமதீப. 56.) |
| வெண்பெருமான் | veṇ-peru-māṉ n. <>id.+பெரு-மை+மான்1. Nilghau, the great antelope, Portax pictus; கடமை என்ற விலங்கு. (M. M. 968.) |
| வெண்பொங்கல் | veṇ-poṅkal n. <>id.+. A preparation of rice boiled with dhal, ghee. etc.; பருப்பு நெய் முதலியன சேர்த்துச்செய்த சித்திரான்னவகை. |
| வெண்பொடி | veṇ-poṭi n. <>id.+. Sacred ash; திருநீறு. வெண்பொடியும் ... அக்கமாமணிகளுமே ... வனைந்தார் (பிரமோத். 20, 17). |
| வெண்பொத்தி | veṇ-potti n. <>id.+prob. பொத்தி1. A kind of garment; துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) |
| வெண்பொன் | veṇ-poṉ n. <>id.+. 1. Silver; வெள்ளி. வெண்பொற் கட்டின்மேல் (சீவக. 2421). 2. Venus; |
| வெண்மட்டக்கருத்து | veṇmaṭṭa-k-karuttu n. <>வெண்மட்டம்+. Superficial judgement; மேலெழுந்தவாரித் தீர்மானம். (W.) |
| வெண்மட்டம் | veṇ-maṭṭam n. <>வெண்-மை+மட்டம்1. 1. Superficiality, shallowness; மேலெழுந்தவாரி. (W.) 2. Plain work; |
| வெண்மட்டவேலை | veṇmaṭṭa-vēlai n. <>வெண்மட்டம்+வேலை1. 1.Plain work; நகாசு முதலியன இல்லாத சாதாரண வேலை. 2. Superficial work; |
| வெண்மண்டை | veṇ-maṇṭai n. <>வெண்-மை+மண்டை1. A kind of beggar's bowl; பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கலவகை. ஊன்கொண்ட வெண்மண்டை. (புறநா. 386). |
| வெண்மணி | veṇ-maṇi n. <>id.+. 1. Pearl; முத்து. (W.) 2. The white ring round the pupil of the eye, the white eye; |
| வெண்மதி | veṇ-mati n. <>id.+மதி3. 1. The moon; சந்திரன். (W.) 2. A kind of Indian kales. |
