Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்ணத்தை | veṇṇattai n. <>id.+நத்தை1. A kind of snail, Barbus ticto; நத்தைவகை. (M. M. 967.) |
| வெண்ணரி | veṇṇari n. <>id.+ நரி. [K. biḷinari] A kind of fox; நரிவகை. விளரிக்கொட்பின் வெண்ணரி கடிகுலென் (புறநா. 291). |
| வெண்ணலாந்தை | veṇṇalāntai n. See வெண்ணாந்தை. Colloq. . |
| வெண்ணாகம் | veṇṇākam n. <>வெண்-மை + நாகம்2. Tin; வெள்ளீயம். (பைஷஜ.) |
| வெண்ணாங்கு | veṇṇāṅku n. <>id.+ நாங்கு3. 1. Creamy-leaved lancewood, m. tr., pterospermum ruberifolium; மரவகை. 2. Maple-leaved lancewood, l. tr., pterospermum acerifolium; |
| வெண்ணாந்தை | veṇṇāntai n. Python; பெரும்பாம்புவகை. (M. M. 761.) |
| வெண்ணாயுருவி | veṇṇāyuruvi n. <>வெண்-மை + நாயுருவி. White species of Indian burr; நாயுருவிவகை. (W.) |
| வெண்ணாரி | veṇṇāri n. <>id.+ நாரி3. A plant; பூடுவகை. (சங். அக.) |
| வெண்ணாரை | veṇṇārai n. <>id.+ நாரை. Indian crane, Ardea sibirica; நாரைவகை. (சூடா.) |
| வெண்ணாவல் | veṇṇāval n. <>id.+ நாவல். A kind of rose-apple, m. tr., Eugenia hemispherica; நாவல்வகை. வீறுயர் வெண்ணாவற் கனியொன்று (திருவானைக். சம்பு. 5). |
| வெண்ணி | veṇṇi n. An ancient town in Cōḻa-nāṭu; சோணாட்டதோர் ஊர். (பொருந. 147.) |
| வெண்ணிலம் | veṇṇilam n. <>வெண்-மை+நிலம். 1. Bare ground; வெறுந்தரை. (W.) 2. Sandy soil; |
| வெண்ணிலவு | veṇṇilavu n. <>id.+நிலவு. Moonlight; சந்திரிகை. வெண்ணிலவின் பயன்றுய்த்தும் (பட்டினப். 114). |
| வெண்ணிலுவை | veṇṇiluvai n. <>id.+ நிலுவை. 1.Arrears of cash debt; ரொக்கக்கடன் பாக்கி. Loc. 2. Temporary loan without security; |
| வெண்ணிலை | veṇṇilai n. <>id.+நிலை. See வெண்ணிலைக்கடன். (W.) . |
| வெண்ணிலைக்கடன் | veṇṇilai-k-kaṭaṉ n. <>வெண்ணிலை+. Loan obtained without pledge or mortgage; unsecured loan; ஈடுகாட்டாது வாங்குங் கடன். |
| வெண்ணிலைப்பத்திரம் | veṇṇilai-p-pattiram n. <>id.+பத்திரம்1. 1. Simple bond, without pledge or mortgage; ஈடுகாட்டாத கடனைக் குறிக்கும் தஸ்தவேசு. (C. G.) 2. Note-of-hand, as without security; |
| வெண்ணீர் | veṇṇīr n. <>வெண்-மை+நீர்1. Semen; சுக்கிலம். வெண்ணீர் வாயுவினான் மாதர் செந்நீரோடு கூடி ... கருவாகும் (சூத. ஞான. 10, 9). |
| வெண்ணீறு | veṇṇīṟu n. <>id.+நீறு. Sacred ashes; திருநீறு. விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி (தேவா. 811, 2). |
| வெண்ணெட்டி | veṇṇeṭṭi n. <>id.+நெட்டி. See வெண்கிடை. (புறநா. அரும்.) . |
| வெண்ணெய் | veṇṇey n. <>id.+நெய். [T. venna, M. veṇṇa K. beṇṇe.] 1. Butter; தயிரிலிருந்து கடைந்தெடுக்கப்படுஞ் சத்து. சேதாநறு மோர் வெண்ணெயின் (பெரும்பாண். 306). 2. See வெண்ணெய்ப்பதம். |
| வெண்ணெய்க்கல் | veṇṇey-k-kal n. <>வெண்ணெய்+. Ball of rock standing on a hill, rocking stone; மலையின் ஒட்டில் நிற்கும் பெரிய குண்டுக்கல். Loc. |
| வெண்ணெய்ச்சுறா | veṇṇey-c-cuṟā n. prob. id.+சுறா1. 1. Batten fish, silvery shot with purple, attaining 18 in. in length, Callichorous binaculatus; வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமுடையதும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை. 2. Malabar shark, deep greyish brown shot with purple, attaining 20 in. in length, Callichorous malabaricus; |
| வெண்ணெய்த்தாழி | veṇṇey-t-tāḻi n. <>id.+தாழி2. 1. Butter-storing pot; வெண்ணெய் வைக்குஞ் சட்டி. 2. See வெண்ணெய்த்தாழியுற்சவம். |
| வெண்ணெய்த்தாழியுற்சவம் | veṇṇey-t-tāḻi-y-uṟcavam n. <>வெண்ணெய்த்தாழி+. A temple festival in which Krṣṇa's sport of stealing butter is represented; கண்ணபிரான் வெண்ணெய் திருடிய ல¦லைசம்பந்தமாக நடத்தப்பெறும் கோயிற் றிருவிழா. |
| வெண்ணெய்த்தெழி | veṇṇey-t-teḻi n. <>வெண்ணெய்+. Sound produced in shaking the churned butter-milk with the hand; கடைந்த மோரைக் கையால் அலைக்கும் ஓசை. வெண்ணெய்த்தெழி கேட்கு மண்மையால் (கலித்.108). |
