Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்டாழை | veṇṭāḻai n. <>id.+தாழை. A kind of tāḻai; தாழைவகை. வெண்டாழை பூத்து விளக்கெரிய (தனிப்பா. i, 153, 62). |
| வெண்டாளி 1 | veṇṭāḷi n. <>id.+தாளி3. White catamaran tree, m. tr., Givotia rottleri formis; தாளிவகை. (திருமுரு.192, உரை.) |
| வெண்டாளி 2 | veṇṭāḷi n. A poem of the middle Sangam, not now extant; இறந்துபட்ட ஓர் இடைச்சங்கநூல். (இறை. 1, உரை, பக். 5.) |
| வெண்டான் | veṇṭāṉ n. <>வெண்-மை. See வெண்டேக்கு. (L.) . |
| வெண்டி 1 | veṇṭi prob. வெண்டு-.n. One who is in great want; இன்மையால் வருந்துபவன். -adj. Useless; |
| வெண்டி 2 | veṇṭi n. (Weav.) Warp after it has been sized; ஆடை நெய்யும் பாவகை. Loc. |
| வெண்டி 3 | veṇṭi n. See வெண்டை. (W.) . |
| வெண்டிக்காய் | veṇṭi-k-kāy n. <>வெண்டி3+. See வெண்டை. . |
| வெண்டிரை | veṇṭirai n. <>வெண்-மை+திரை4. Sea; கடல். தகைபெற்ற வெண்டிரை (கலித். 124). |
| வெண்டு 1 - தல் | veṇṭu- 5 v. intr. [T. beṇdu.] 1. To dry, as in the sun; to become withered; வற்றிப்போதல். வெண்டிப்பழுத் தெழும்பிய முதுகும் (திருப்பு. 802). 2. To be exhausted; 3. To be in great want; to hanker; |
| வெண்டு 2 | veṇṭu n. perh. வெண்டு-. 1. Hollowness, as of a pipe; உட்டுளை. (W.) 2. A disease which causes hollowness in trees; 3. Sugarcane; 4. [T. beṇdu.] Sola pith. 5. Twist of an ear-ring; |
| வெண்டுக்காய் | veṇṭu-k-kāy n. <>வெண்டி3+. [T. beṇdakāya.] See வெண்டை. (பதார்த்த. 689). . |
| வெண்டுகில் | veṇṭukil n. <>வெண்-மை+துகில். White cloth; வெள்ளைத் துணி. (W.) |
| வெண்டுத்தம் | veṇṭuttam n. <>id.+துத்தம்2. Sulphate of copper. See மயிற்றுத்தம். (யாழ். அக.) |
| வெண்டுளசி | veṇṭuḷaci n. <>id.+துளசி. 1. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. 2. Large basil, l.sh., Ocimum gratissimum; |
| வெண்டுறை | veṇṭuṟai n. <>id.+துறை. 1. (Pros.) A kind of stanza consisting of three to seven lines of unequal length; மூன்றடி முதல் ஏழடியீறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.) 2. A class of composition adapted to dancing, dist. fr. centuṟai; |
| வெண்டேக்கு | veṇṭēkku n. <>id.+ தேக்கு3. [K. beṇtēkku.] Ben-teak, l. tr., Lagersiroemia lanceolata; நீண்ட மரவகை. (L.) |
| வெண்டேர் | veṇṭēr n. <>id.+தேர்3. Mirage; கானல். வெண்டே ரோடுங் கடங்காய் மருங்கில் (அகநா.179). |
| வெண்டேர்ச்செழியன் | veṇṭēr-c-ceḻiyaṉ n. <>id.+id.+. A Pāṇdya king who is said to have reigned at the beginning of the middle Sangam; இடைச்சங்கத்தொடக்கத்தில் இருந்தவனாகக் கூறப்படும் பாண்டியன். (இறை. 1, உரை, பக். 5.) |
| வெண்டை | veṇṭai n. [T. beṇda, K beṇde, M. veṇda.] 1. Okra, s, sh., Hibiscus esculentus; செடிவகை. 2. Esculent okra, s. sh., Abolmoselim esculentus; |
| வெண்டையம் | veṇṭaiyam n. [T. peṇdiyamu.] 1. Warrior's anklet; வீரர் காலணி. வீரவெண்டைய முழங்க (திரும்பு. 750). 2. Hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants; 3. Thumb-ring; |
| வெண்டொழுநோய் | veṇṭoḻunōy n. <>வெண்-மை + தொழுநோய். See வெண்குட்டம். கருஞ்சிரங்கு வெண்டொழுநோய் (ஏலாதி, 57). . |
| வெண்டோடு | veṇṭōṭu n. <>id.+தோடு. Calyx-leaf of palmyra; பனந்தோடு. வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமம். (பதிற்றுப், 40, 10) . |
| வெண்டோன்றி | veṇṭōṉṟi n. <>id.+தோன்றி. See வெண்காந்தள். (W.) . |
| வெண்ணகை | veṇṇakai n. <>id.+நகை. 1. Clean, white tooth; வெள்ளிய பல். முத்தன்ன வெண்ணகையாய் (திருவாச. 7, 3). 2. Smile; |
| வெண்ணஞ்சு | veṇṇacu n. <>id.+ நஞ்சு. 1. A kind of fleshy substance; ஊன்விசேடம். விழுக்கொடு வெண்ணஞ்சு (சீவக. 1584). 2. Marrow in the bone; |
