Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெந்திப்பு 2 | ventippu n. <>வெந்தி2-. Bond, union; கட்டு. (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு.) |
| வெந்தியம் | ventiyam n. See வெந்தயம். (பைஷஜ.) . |
| வெந்திறல் | ven-tiṟal n. <>வெம்-மை+. Great strength; பெருவலி. வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய (பதிற்றுப். 86). |
| வெந்து | ventu n. <>bandhu. Relative; சுற்றம். (யாழ். அக.) |
| வெந்துப்பு | ven-tuppu n. <>வெம்-மை+துப்பு1. See வெந்திறல். வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் (குறள், 895). . |
| வெந்துருகல் | venturukal n. prob. வே-+உருகு-. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 138.) |
| வெந்துளி | ven-tuḷi n. <>வெம்-மை+துளி2. Tear-drops of sorrow, as hot; துக்கக்கண்ணீர். வீழ்தரு வெந்துளி விரலி னீக்கி (பெருங். இலாவாண. 10, 63). |
| வெந்தை | ventai n. <>வே-. 1. Anyhting cooked in steam; நீராவியிலே புழுங்கியது. புளிப்பெய்தட்ட வேளை வெந்தை வல்சியாக (புறநா. 246). 2. Meal-cake; |
| வெந்தையம் | ventaiyam n. See வெந்தயம். . |
| வெந்தோன்றி 1 | ven-tōṉṟi n. prob. வெண்-மை+தோன்றி. See வெண்காந்தள். (L.) . |
| வெந்தோன்றி 2 | ven-toṉṟi n. prob. வியன்1+தோன்று-. A climbing shrub. See ஆகாசகருடன். (மூ. அ.) |
| வெந்நிடு - தல் | ven-n-iṭ- v. intr. <>வெந்+. [T. vennidu.] To retreat, as turning one's back; புறங்காட்டுதல். (பு. வெ. 7, 12, உரை.) |
| வெந்நீர் | ven-nīr n. <>வெம்-மை+நீர்1. [T. vennīru, K. bennīr, M. vennīr] Hot water; சுடுநீர். வெந்நீர்... இல்லஞ் சுடுகலாவாறு (பழ. 51). |
| வெந்நீர்விரணம் | vennīr-viraṇam n. <>வெந்நீர்+விரணம்1. Scald caused by boiling water; கொதிநீர் படுதலா லூண்டாம் புண். (M. L.) |
| வெந்நீரூறல் | vennīr-ūṟal n. <>id.+ஊறு-. Decoction; கஷாயம். (பைஷஜ.) |
| வெப்பக்கட்டி | veppa-k-kaṭṭi n. <>வெப்பம்+. See வெப்புக்கட்டி. (W.) . |
| வெப்பசாரம் | veppa-cāram n. <>id.+சார்-. (W.) 1. Grief; மனத்துயர். 2. Indignation; 3. Spite, spleen; |
| வெப்பத்தி | veppatti n. prob. id. Indian snowberry. See வறட்பூலா, 1. (சங். அக.) |
| வெப்பம் | veppam n. <>வெம்பு1-. 1. Heat; உஷ்ணம். நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே (நாலடி, 68). 2. Fever; 3. Indignation; 4. Spite, spleen; 5. Desire; 6. Sorrow; 7. A hell; |
| வெப்பர் | veppar n. <>வெப்பு. 1. See வெப்பம். அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற்றட்ப மாற்றி (சீவக. 1746). . 2. Hot food; |
| வெப்பல் | veppal n. <>வெம்பு1-. An inferior kind of soil, light greyish brown earth, lumpy and free from stones; சாம்பல்நிறங் கலந்த செந்நிறமுள்ளதும் கல்லின்றிக் கட்டிகட்டியாக வுள்ளதுமான நிலவகை. (G. Tn. D. I, 286.) |
| வெப்பி - த்தல் | veppi- 11 v. tr. <>வெம்பு. 1. To heat; சூடாக்குதல். 2. To make one hot with anger; to infuriate; |
| வெப்பியாரம் | veppiyāram n. perh. id.+ஆர்1-. cf. வெப்பசாரம். Grief; மனத்துயர். (யாழ். அக.) |
| வெப்பிராளம் | veppirāḷam n. cf. வெப்பியாரம். Mental agitation; மனக்குழப்பம். Tinn. |
| வெப்பு | veppu n. <>வெப்பு1-. [T. M. veppu, Tu. beppu.] 1. See வெப்பம், 1. . 2. See வெப்பம், 2. மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் (பெரியபு. திருஞான. 1050). 3. The God of fevers; 4. (Astrol.) The 7th or 9th nakṣatra from that with which Jupiter is in conjunction. 5. Feverish feeling, as due to grief, anger, etc; 6. See வெப்பம், 3. வெப்புடைக் கொடிய மன்னன் (கம்பரா. மிதிலைக். 99). 7. See வெப்பம், 4, 5, 6. 8. Severity; 9. Leprosy; |
| வெப்புக்கட்டி | veppu-k-kaṭṭi n. <>வெப்பு+. A swelling in the intestines, occurring after chronic fevers; நாட்பட்ட சுரத்தினால் உண்டாம் வயிற்றுக்கட்டிவகை. (W.) |
