Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெய்துறு - தல் | veytuṟu- v. intr. <>id.+. 1. To be perplexed; மனங்கலங்குதல். (பிங்.) 2. To be distressed; 3. To be angry; |
| வெய்தெனல் | veyteṉal n. <>id.+. Expr. signifying (a) being hot; வெப்பக் குறிப்பு: (b) being in haste; (c) being cruel; |
| வெய்ய | veyya adj. <>வெம்-மை. [K. bisiya.] 1. Hot; வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1). 2. Fierce, cruel; 3. Desirable; |
| வெய்யது | veyyatu n. <>id. [K. bisiyadu.] 1. That which is hot; சூடானது. (யாழ். அக.) 2. That which is cruel; 3. That which is unbearable; |
| வெய்யநட்சத்திரம் | veyya-naṭcattiram. n. <>வெய்ய+. (Astrol.) The 18th and 24th nakṣatra counted from the nakṣatra occupied by Mercury. See உக்கிரநட்சத்திரம், 1. (விதான. குணாகுண. 40, உரை.) |
| வெய்யநீர் | veyya-nīr n. <>id.+நீர்1. Hot water; வெந்நீர். (யாழ். அக.) |
| வெய்யல் | veyyal n. Corr. of வெயில். (W.) . |
| வெய்யவன் | veyyavaṉ n. <>வெம்-மை. 1. See வெய்யன், 1. . 2. See வெய்யோன், 2. வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172). 3. Fire-god; 4. See வெய்யன், 4. |
| வெய்யன் | veyyaṉ n. <>id. 1. Cruel person; கொடியவன். வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3). 2. See வெய்யவன், 3. 3. See மெய்யோன், 2. 4. One how is desirous or eager; |
| வெய்யனீர் | veyyaṉīr n. <>வெய்யல்+நீர்1. Water heated by the rays of the sun; சூரிய கிரணங்களாற் சூடான நீர். Loc. |
| வெய்யில் | veyyil n. <>வெம்-மை. See வெயில். நிழல் வெய்யில் சிறுமை பெருமை (திவ். திருவாய். 6, 3, 10). . |
| வெய்யில்தாழ | veyyil-tāḻa adv. <>வெய்யில்+தாழ்1-. In the evening; மாலையில். வெய்யில் தாழவா. (W.) |
| வெய்யிற்குளிர | veyyiṟ-kuḷira adv. <>id.+குளிர்-. See வெய்யில்தாழ. வெய்யிற்குளிர வா. (W.) . |
| வெய்யிற்சூடு | veyyiṟ-cūṭu n. <>id.+. Sun's heat; சூரியவெப்பம். Loc. |
| வெய்யோன் | veyyōṉ n. <>வெம்-மை. 1. See மெய்யன், 1. ஆர்த்தனர் வெய்யோர் (கந்தபு. முதனாட்போ. 49). . 2. Sun; 3. Right nostril; 4. See வெய்யவன், 3. 5. See வெய்யன், 4. பொன்னறைதான் கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237). 6. The 5th nakṣatra. |
| வெயர் - த்தல் | veyar- 11 v. intr. cf. வியர்-. [K. bemar, Tu. begaru.] 1. To perspire; வேர்வை நீருண்டாதல். புனைநுதல் வெயர்க்க (பாரத. பன்னிரண். 47). 2. To be angry, enraged; |
| வெயர் | veyar n. <>வெயர்-. Sweat, perspiration; வேர்வைநீ£. வெயர்பொடிப்பச் சினங்கடைஇ (பு. வெ. 7, 13, கொளு). |
| வெயர்ப்பு | veyarppu n. <>id. 1, See வெயர்2. குறுவெயர்ப் பொழுக்கென (கல்லா. 16, 5). . 2. Sweating; 3. Anger; |
| வெயர்வு | veyarvu n. See வெயர்2. (திவா.) . |
| வெயர்வை | veyarvai n. See வெயர்2. Colloq. . |
| வெயில் | veyil n. <>வெம்-மை. [K. bisil, M. veyil.] 1. Sunlight, sunshine; சூரியவெளிச்சம். துகில் விரித்தன்ன வெயிலவிருருப்பின் (நற். 43). 2. Heat and glare of the sun, as on a tropical day; 3. The sun; 4. Lustre, brilliance; |
| வெயில்நீக்கி | veyil-nīkki n. <>வெயில்+நீக்கு-. Umbrella; குடை. (தக்கயாகப். 257, உரை.) |
| வெயிலடித்தல் | veyil-aṭittal n. <>id.+. 1. Shining, as the sun; சூரியன் பிரகாசிக்கை. 2. Being hot and bright, as sun-shine; |
| வெயிலுறைத்தல் | veyil-uṟaittal n. <>id.+. See வெயிலடித்தல், 2. (W.) . |
| வெயிலெறித்தல் | veyil-eṟittal n. <>id.+. See வெயிலடித்தல். (W.) . |
| வெயிலோன் | veyilōṉ n. <>id. The sun; சூரியன். வெயிலோனு மேல்பாற்குன்றிற் கிட்ட (பாரத. முதற்போர். 73). |
