Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெருவந்தம் | veruvantam n. <>வெருவா-. Fear; அச்சம். (W.) |
| வெருவருநிலை | veruvaru-nilai n. <>id.+. (Puṟap.) Theme describing the attitude of a warrior who does not fall down even when his breast is pierced through and through by the arrows of his enemies; பகைவர் அம்பு தன் மார்பைப் பிளப்பவும் பூமியில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 23, கொளு.) |
| வெருவலர் | veruvalar n. <>id.+ அல் neg.+. Enemies; பகைவர். வெருவலர் புரந்தீய (உபதேசகா. சூராதி. 5). |
| வெருவா - தல்[வெருவருதல்] | veru-vā- v. intr. <>வெரு+வா-. 1. To be fearful; to cause fear; அச்சந்தருதல். வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (பதிற்றுப். 70, பதி.). 2. To be afraid; |
| வெருவு - தல் | veruvu- 5 v. tr. & intr. cf. வெருள்-. 1. To be afraid of; to be alarmed, frightened or startled; அஞ்சுதல், யானை வெரூஉம் புலிதாக் குறின் (குறள், 599). |
| வெருவு | veruvu n. <>வெருவு-. [T. verapu.] Fear, fright; அச்சம். வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் (தொல்.பொ. 111). |
| வெருவெரு - த்தல் | veru-veru-. v. intr. Redupl. of வெரு. To be afraid; பயப்படுதல். உயிர்நடுங்கி . . . வெருவெருத்து நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49). |
| வெருள்(ளு) - தல் | veruḷ- 2 & 5 v. intr. 1. To be startled, perplexed, bewildered; மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3). 2. To be frightened; 3. To shy; to be skittish; |
| வெருள் | veruḷ n. <>வெருள்-. 1. Fear; பயம். 2. Perplexity; 3. That which is fearful; |
| வெருளார் - த்தல் | veruḷār- v. intr. <>வெருள்+. (யாழ். அக.) 1. To be startled; திகைத்தல். 2. To be confused; |
| வெருளி | veruḷi n. <>வெருள்-. 1. Bewilderment, வெருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 2. Bugbear, scare-crow; that which causes terror; 3. Pride of riches; |
| வெருளிப்பிணை | veruḷi-p-piṇai n. <>வெருளி + பிணை4. A kind of doe; பெண்மான் வகை. (பெருங். இலாவண. 15, 31.) |
| வெருனை | veruṉai n. cf. வெருணை. See பாவட்டை, 1, 2. (மலை.) . |
| வெரூஉ | verūu n. <>வெருவு-. See வெருவு. வெரூஉப் பறை (பொருந. 171). . |
| வெரூஉதல் | verūutal n. <>id. Being afraid, startled; மருண்டஞ்சுகை. அலமர லரயிடை வெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137). |
| வெல்(லு) - தல் | vel- 3 v. tr. 1. To conquer, overcome, subdue; செயித்தல். எறிநீர் வையகம் வெல¦இய செல்வோய் (முல்லைப். 57). 2. To destroy, remove; 3. To resemble; 4. To excel, prosper; |
| வெல்புகழ் | vel-pukaḻ n. <>வெல்-+. Fame due to victory in war; போர்க்கண் வெற்றியாலுண்டாங் கீர்த்தி. பாடினார் வெல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8,1). |
| வெல்லச்சீடை | vella-c-cīṭai n. <>வெல்லம்+. Ball-cake of rice-flour made with coarse cane-sugar; அரிசிமாவும் வெல்லமுஞ் சேர்த்துச் செய்த சீடைப்பணியாரம். |
| வெல்லடி | vellaṭi n. A kind of net; வலைவகை. Madr. |
| வெல்லப்பாகு | vella-p-pāku n. <>வெல்லம் + பாகு1. Treacle; கருப்பஞ்சாற்றைக் காய்ச்சியுண்டாக்குங் குழம்பு. |
| வெல்லம் | vellam n. [T. bellamu, K. bella, M. vellam.] Jaggery, unrefined cane-sugar; கருப்பஞ்சாற்றுக் கட்டி. வெல்லச்சொ னாவலர்க்கு (தனிப்பா. i, 305, 1). |
| வெல்லல் | vellal n. perh. வெல்-. Small elliptic cuspidate-leaved windberry. See வாயு விளங்கம், 1. (L.) |
| வெல்லவட்டு | vella-vaṭṭu n. <>வெல்லம்+வட்டு. Circular piece of jaggery; வெல்லத்தைக் காய்ச்சிச் சக்கரமாக ஊற்றிய துண்டு. வெல்லவட்டுப் போல் வார்த்தை சொல்லி (கவிகுஞ். 10). |
| வெல்லவல் | vellaval n. <>id.+அவல். A sweet preparation of aval or parched rice; வெல்லஞ் சேர்த்துத் தயாரித்த அவல். |
| வெல்லி 1 | velli n. cf. bālā. A species of cardamom. See சிற்றேலம். (மலை.) |
