Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெல்லி 2 | velli n. Prob. வெல்-. Clever woman; சமர்த்தி. Nā. |
| வெல்லுமா | vellu-mā n. <>id.+ மா2. Tiger; புலி. (W.) |
| வெல்லை | vellai n. <>வெள்ளை. [T. vella.] Whiteness; வெள்ளைநிறம். வெல்லை யறுவை நீக்கி (சிவதரு. சிவஞானதான. 36). |
| வெல்வெட்டு | velveṭṭu n. <>E. Velvet; பளபளப்புள்ள துணிவகை. |
| வெலத்தி | velatti n. See வெலித்தி, 2. Loc. . |
| வெலவெல - த்தல் | velavela- 11 v. intr. cf. bil. 1. To be faint with fatigue; களைத்தல். பசியால் வெலவெலத்துப்போனான். 2. To quake, tremble, as one's limbs; 3. To be dazed, astonished, |
| வெலி 1 | veli n. perh. வெளி1. [T. veli.] 1. Banishment, excommunication; புறம்பாக்குகை. (W.) 2. Expunging; |
| வெலி 2 | veli n. Corr. of பலி3. See பலி3, 1, 2. Nā. . |
| வெலிகம் | velikam n. Aloe. See கற்றாழை, 1. (மலை.) |
| வெலிகாரம் | velikāram n. <>வெண்காரம். [K. biligāra.] Borax. See வெண்காரம். (யாழ். அக.) |
| வெலிசாத்து | veli-cāttu n. <>Fr. bailli+ சார்த்து. Warrant, as of arrest or attachment; ஆளைப்பிடிக்கவேனும் சொத்தைக் கட்டுப்படுத்த வேனும் இடுங் கட்டளை. வெலிசாத்து விட்டு வீட்டைத் தடைப்படுத்தி யிருக்கிறேன். |
| வெலித்தி | velitti n. <>T. veliti. (W.) 1. Anything thin; lean person; ஒல்லி. 2. Being lose in texture; 3. (Mus.) See வெள்ளோசை, 1, 2. Loc. |
| வெல¦இயோன் | velīiyōṉ n. <>வெல்-. One who caused victory; வெல்வித்தோன். நிற்கூறும்மே வெல¦இயோ னிவனென (புறநா. 125). |
| வெவ்வர் | vevvar n. <>வெம்-மை. Heat; வெம்மை. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20). |
| வெவ்விடாய் | vev-viṭāy n. <>id.+. Intense thirst; கடுந் தாகம். வெவ்விடாய் தணிவுற (பாரத. நாலாம்போர். 46). |
| வெவ்விது | vevvitu n. <>id. 1. That which is hot; சூடானது. 2. That which is harsh, cruel or severe; |
| வெவ்வினை | vev-viṉai n. <>id.+. 1. Relentless karma; கொடியவினை. 2. Battle. |
| வெவ்வுயிர் - த்தல் | vev-v-uyir- v. intr. <>id.+ உயிர்-. See வெய்துயிர்-. உள்ளமலங்க வெவ்வுயிர்க்கும் (திவ். திருவாய். 2, 4, 4). . |
| வெவ்வுயிர்க்கொள்(ளு) - தல் | vevvuyir-k-koḷ- v. intr.<>வெவ்வுயிர்-+. See வெய்துயிர்-. வெவ்வுயிர்க்கொண்டு (திவ். திருவாய். 10, 3, 3). . |
| வெவ்வுரை | vev-v-urai n. <>வெம்-மை+உரை6. Severe, harsh language; கடுஞ்சொல். வெவ்வுரை யெங்கட்கு விளம்பினிர் (மணி. 25, 53). |
| வெவ்வுழவு | vev-v-uḻavu n. <>வெறு-மை+. Superficial ploughing; மேலுழவு. (J.) |
| வெவ்வெஞ்செல்வன் | vev-ve-celvaṉ n. <>வெம்-மை+வெம்-மை+. The rising sun, as one whose warmth is welcome or pleasing; வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு. வெவ்வெஞ்செல்வன் விசும்பு படர்ந்தாங்கு (பொருந. 136). |
| வெவ்வேகம் | ve-v-vēkam n. <>id.+. Virulent poison; கொடிய நஞ்சு. வெவ்வேகங்கொதித் தெழுந்து (திருக்காளத். பு. காளன்.7). |
| வெவ்வேறாக | vevvēṟāka adv. <>வெவ்வேறு+. Separately; distinctly; தனித்தனியாக. மூவரையும் வெவ்வேறாக நினையாத (கலித். 9, உரை). |
| வெவ்வேறு | vevvēru n. <>வேறு+வேறு. [T. vevvēru, M. vevvērē.] Separateness; தனித்தனி. |
| வெவிச்சைக்கெண்டை | veviccai-k-keṇṭai n. cf. வெளிச்சைக்கெண்டை. Carp, silvery, attaining 6 in. in length, Chela argentea; வெண்மை நிறமுடையதும் ஆறங்குலம் வளர்வதுமான மீன்வகை. |
| வெழுமூட்டு - தல் | veḻumūṭṭu- v. tr. Caus. of வெழுமூள்-. cf. வழுமூட்டு-. 1. To smooth; to polish; வழுவழுப்பாக்குதல். தீற்றிய சுண்ணாம்பை வெழுமூட்டு. 2. To smooth over, as a fault; to whitewash; 3. To be excoriated, wear off. |
| வெழுமூண்டகாயம் | veḻumūṇṭa-kāyam n. <>வெழுமூள்-+காயம்2. Abrasion; தோலுரிந்த புண். |
| வெழுமூள்(ளு) - தல் | veḻu-mūḷ- v. intr. prob. வழு + மூள்-. 1. To be covered with skin; தோல் மூடுதல். 2. To be smooth or soft; 3. To be silent; 4. See வெழுமூட்டு-. |
