Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெழுமெனல் | veḻum-eṉal n. Expr. of being smooth to the touch; வழுவழுப்புக் குறிப்பு. |
| வெள் 1 | veḷ adj. <>வெண்-மை. [K. biḷ.] 1. White; வெண்மையான. வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 562). 2. Blank; empty; 3. Pure, unadulterated; 4. Shining, bright; |
| வெள் 2 | veḷ n. <>வள்2. Sharpness; கூர்மை (நாமதீப. 427.) |
| வெள்கு - தல் | veḷku- 5 v. intr. [K. beḷku.] 1. To be ashamed; வெட்குதல். வெள்கிட மகுடஞ் சாய்க்கும் (கம்பரா. வாலிவதை. 73). 2. To be coy, bashful; 3. To fear; 4. To shudder; to be perplexed; |
| வெள்யாடு | veḷ-yāṭu n. <>வெள்1+. See வெள்ளாடு. (தொல். சொல். 17, உரை.) . |
| வெள்வங்கம் | veḷ-vaṅkam n. prob. id.+ வங்கம்1. A kind of medicine; மருந்துவகை. (இராசவைத். 102, உரை.) |
| வெள்வரகு | veḷ-varaku n. <>id.+. A species of millet; வரகுவகை. வெள்வரகுழுத கொள்ளுடைக் கரம்பை (பதிற்றுப். 75, 11). |
| வெள்வரி | veḷ-vari n. <>id.+ வரி1. 1. Cowry; பலகறை. (மூ. அ.) 2. Streak in the white of the eye, an eye-disease; 3. See வெள்ளரி. (சிலப். 16, 25, அரும்.) |
| வெள்வரை - த்தல் | veḷ-varai- v. intr. prob. id.+. To dawn; கிழக்கு வெளுத்தல். வெள்வரைப்பதன் முன்னந் துறைபடிந்து (திவ். நாய்ச். 1, 2). |
| வெள்வரைப்பு | veḷvaraippu n. <>வெள்வரை-. Break of dawn; கிழக்கு வெளுக்கை. வெள்வரைப் பின் முன்னெழுந்து (திவ். பெரியாழ். 3, 8, 9). |
| வெள்வவ்வால் | veḷ-vavvāl n. <>வெள்1+. Silver pomfret, greyish neutral tint with purplish reflections, attaining 1 ft. in length, Stromateus cinereus; சாம்பல்நிறமுள்ளதும் ஓரடி வளர்வதுமான வவ்வால் மீன்வகை. (பதார்த்த. 936.) |
| வெள்வளையார் | veḷ-vaḷaiyār n. <>id.+ வளை 3. Women, as wearing white conchbracelets; மகளிர். வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள் விழைந்து (பு. வெ. 9, 24). |
| வெள்வாகை | veḷ-vākai n. <>id.+. White siris, 1. tr., Albizzia procera; வாகைமரவகை. (L.) |
| வெள்வாடை | veḷ-vāṭai n. <>id.+ வாடை 1. Gentle breeze; இளந்தென்றல். (யாழ். அக.) |
| வெள்வாள் | veḷ-vāḷ n. <>id.+ வாள் 1. Shining sword; ஒளியுள்ள வாள். வெள்வாள் வேந்தன் (பு. வெ. 8, 27, கொளு). |
| வெள்விழி | veḷ-viḻi n. <>id.+. White of the eye; வெள்ளைவிழி. (சீவரட். 265.) |
| வெள்விளர் - த்தல் | veḷ-viḷar- 11 v. intr. Redupl. of விளர்-. See வெள்ளவிளர்-. (தொல். எழுத். 482, உரை.) . |
| வெள்விளா | veḷ-viḷā n. <>வெள்1 + விளா1. Ben teak. See வெண்டேக்கு. (L.) |
| வெள்வீச்சு | veḷ-vīccu n. <>id.+. Empty boast; ஆடம்பரப்பேச்சு. Tinn. |
| வெள்வெங்காயம் | veḷ-veṅkāyam n. <>id.+. 1. Onion. See வெங்காயம். 2. Garlic. |
| வெள்வெட்சி | veḷ-veṭci n. <>id.+. 1. Common bottle flower. See பாவட்டை, 2. (M. M. 901.) 2. See வெட்சி. (W.) |
| வெள்வெட்டிவேர் | veḷ-veṭṭivēr n. <>id.+. Cuscus-grass. See இலாமிச்சை. (சங். அக.) |
| வெள்வெடி | veḷ-veṭi n. <>id.+ வெடி2. 1. Blank cartridge; குண்டு இல்லாத தோட்டா. (W.) 2. See வெள்வீச்சு. Loc. 3. See வெள்ளடி3. |
| வெள்வேங்கை | veḷ-vēṅkai n. <>id.+. Siris, 1. tr., Albizzia lebbek; வேங்கைமரவகை. |
| வெள்வேம்பு | veḷ-vēmpu n. <>id.+. A kind of margosa; வேப்பமரவகை. (பரி. அக.) |
| வெள்வேல் | veḷ-vēl n. <>id.+ வேல்2. (L.). 1. Tamarind-like cutch. See பேய்க்கருங்காலி. 2. Panicled babool, m. tr., Acacia leucophloea; |
| வெள்வேலம் | veḷvēlam n. See வெள்வேல், 2. (L.) . |
| வெள்வேலன் 1 | veḷvēlaṉ n. <>வெள்வேலம். See வெள்வேல், 2. . |
| வெள்வேலன் 2 | veḷ-vēlaṉ n. <>வெள்1 + வேல்1. Warrior armed with a bright spear; ஒள்ளிய வேல்தாங்கிய வீரன். (W.) |
