Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளாடு | veḷ-ḷ-āṭu n. <>வெள்1+. Goat; ஆடுவகை. (நன். 266, உரை.) மனிதர் காராட்டை வெள்ளாடடென்ப தொக்குமால் (பிரபுலிங், பிரபுதேவர் வந்த. 59). |
| வெள்ளாண்செட்டி | veḷḷāṇ-ceṭṭi n. <>வெள்ளான் + செட்டி1. See வெள்ளாஞ்செட்டி. . |
| வெள்ளாண்பிள்ளை | veḷḷāṇ-piḷḷai n. <>id.+. 1. Vēḷāḷa boy; வேளாளச் சிறுவன். (தொல். எழுத. 338.) 2. See வேளாளன். (W.) |
| வெள்ளாண்மரபு | veḷḷāṇ-marapu n. <>id.+. The Vēḷāḷa caste; வேளாள சாதி. வெள்ளாண்மரபுக்கு வேதமென (நாலடி, தனிப்பா.). |
| வெள்ளாண்மை | veḷḷāṇmai n. prob. id. Cultivation; வேளாண்மை. (M. M. 969.) |
| வெள்ளாண்வாழ்க்கை | veḷḷāṇ-vāḻkkai n. <>வெள்ளாண்மை+. Calling of a Vēḷāḷa; வேளாளனது சீவனம். |
| வெள்ளாத்திபோளம் | veḷ-ḷ-ātti-pōḷam n. <>வெள்1 + perh. ஆத்தி1 + போளம்1. White myrrh. See வெள்ளைப்போளம். (இங். வை.) |
| வெள்ளாந்தை | veḷḷāntai n. cf. வெண்ணாந்தை. A species of rock snake; மலைப்பாம்பு வகை. (W.) |
| வெள்ளாப்பு | veḷ-ḷ-āppu n. <>வெள்1 + ஆப்பு3. White awning or canopy; வெள்ளைமேற்கட்டி. Loc. |
| வெள்ளாம்பல் | veḷ-ḷ-āmpal n. <>id.+. 1. White Indian water-lily. See வெண்ணெய்தல். (பிங்.) 2. Esculent white water-lily, Nymphaca edulis; |
| வெள்ளாம்பிள்ளை | veḷḷām-piḷḷai n. <>வெள்ளான்+. See வெள்ளாண்பிள்ளை, 1. (W.) . |
| வெள்ளாமணக்கு | veḷ-ḷ-āmaṇakku n. <>வெள்1+. Common physic nut. See காட்டாமணக்கு, 1. (பதார்த்த. 530.) |
| வெள்ளாமை 1 | veḷḷāmai n. <>வேளாண்மை. Cultivation. See வேளாண்மை. (C. G.) |
| வெள்ளாமை 2 | veḷ-ḷ-āmai n. <>வெள்1 +. (W.) 1. White sea turtle; கடலாமைவகை. 2. A fresh-water tortoise. |
| வெள்ளாரல் | veḷ-ḷ-āral n. <>id.+ ஆரல்1. A kind of fish; மீன்வகை. தகுவெள்ளாரல் தும்பையன் (பறாளை. பள்ளு. 16). |
| வெள்ளால் | veḷ-ḷ-āl n. <>id.+ ஆல்1. Java fig, l.tr., Ficus benjamina; நீண்டமரவகை. (L.) |
| வெள்ளாவி | veḷ-ḷ-āvi n. <>id.+ ஆவி2 Steam used for bleaching clothes; ஆடையை வெளுக்க உதவும் நீராவி. |
| வெள்ளாவிகட்டு - தல் | veḷḷāvi-kaṭṭu- v. tr. <>வெள்ளாவி+. To treat clothes with steam, in bleaching; வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல். |
| வெள்ளாவிரை | veḷ-ḷ-āvirai n. <>வெள்1+. Glaucous-leaved eglandular senna, s. tr., Cassia glauca; சிறுமரவகை. |
| வெள்ளாவிவை - த்தல் | veḷḷāvi-vai- v. tr. <>வெள்ளாவி+. 1. See வெள்ளாவிகட்டு-. (W.) . 2. To beat severely; |
| வெள்ளாழச்சி | veḷḷāḻacci n. Fem. of வெள்ளாழன். See வெள்ளாளச்சி. (W.) . |
| வெள்ளாழன் | veḷḷāḻaṉ n. See வெள்ளாளன். (W.) . |
| வெள்ளாளச்சி | veḷḷāḷacaci n. Fem. of வெள்ளாளன். Vēḷāḷa woman; வேளாளசாதிப்பெண். |
| வெள்ளாளன் | veḷḷāḷaṉ n. Corr. of வேளாளன். [M. veḷḷāḷan.] Man of the Vēḷāḷa caste; வேளாளமரபினன். (தொல். எழுத். 338, உரை.) |
| வெள்ளாறு | veḷ-ḷ-āṟu n. <>வெள்1 + ஆறு1. A river that flows through the Pudukkottah State, forming the traditional boundary between the Cōḻa and the Pāṇdya kingdoms; புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதும் சோழபாண்டிய நாடுகளுக்கு இடையெல்லையானதுமான ஒரு நதி. வெள்ளாறது வடக்காம் (தனிப்பா. i, 126, 2). |
| வெள்ளான் | veḷḷāṉ n. See வெள்ளாளன். வெள்ளான் நத்தங்கள் (S. I. I. ii, 114). . |
| வெள்ளான்குடி | veḷḷāṉ-kuṭi n. <>வெள்ளான் + குடி4. See வெள்ளாங்குடி. . |
| வெள்ளான்செட்டி | veḷḷāṉ-ceṭṭi n. <>id.+ செட்டி1. See வெள்ளாஞ்செட்டி. (W.) . |
| வெள்ளான்வகை | veḷḷāṉ-vakai n. <>id.+. That which belongs to the Vēḷāḷa class, as lands in a village; வேளாளர்க்குரிய கிராமப்பங்கு முதலியன.வெள்ளான்வகையாய் வருகின்ற நிலம் (S. I. I. ii, 54). |
| வெள்ளானை | veḷ-ḷ-āṉai n. <>வெள்1+. 1. [K. beḷḷāne.] Indra's elephant; இந்திரனது யானை. வெள்ளானைச்சருக்கம். (பெரியபு.) 2. White elephant; 3. Sublimate of mercury; |
