Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளியம்பலத்தம்பிரான் | veḷḷi-y-ampala-t-tampirāṉ n. <>வெள்ளியம்பலம்+. A poet. See வெள்ளி1, 8. |
| வெள்ளியம்பலம் | veḷḷi-y-ampalam n. <>வெள்ளி1+. The sacred hall dedicated to Naṭarāja in the šiva temple at Madura; மதுரைக் கோயிலில் நடராஜமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 40, 41). |
| வெள்ளியம்பலவாணத்தம்பிரான் | veḷḷiyampala-vāṇa-t-tampirāṉ n. <>வெள்ளியம்பலம்+வாணன்1+. See வெள்ளி1, 8. . |
| வெள்ளியார் | veḷḷiyār n. <>வெள்ளி1. 1. White-coloured persons; வெண்ணிற முடையவர். (திவ். பெரியதி. 1, 8, 2.) 2. Pure and noble minded persons; 3. šukra; 4. šiva; |
| வெள்ளியிலைச்செடி | veḷḷi-y-ilai-c-ceṭi n. <>id.+இலை+செடி1. See வெள்ளிமடந்தை. (L.) . |
| வெள்ளியுயிர் | veḷḷi-y-uyir n. <>id.+உயிர்2. Human being; மக்கட்பிறப்பு. (சீவக. 3111, உரை.) |
| வெள்ளியெழுதல் | veḷḷi-y-eḻutal n. <>id.+. Rising of the morning star; சுக்கிரோதயமாகை. (திவ். திருப்பா. 13.) |
| வெள்ளிரேக்கு | veḷḷi-rēkku n. <>id.+. Silver leaf; மிகமெலிதாக அடிக்கப்பட்ட வெள்ளித்தகடு. |
| வெள்ளில் 1 | veḷḷil. n. 1. [K. bēḷal.] Wood-apple. See விளா1. (பிங்..) 2. Fruit of wood-apple; |
| வெள்ளில் 2 | veḷḷil n. <>வெள்1+இல்1. Bier; பாடை. (பிங்.) வெள்ளிற் பாடை (மணி. 6, 93). |
| வெள்ளிலங்காடு | veḷḷilaṅ-kāṭu n. <>வெள்ளில்2+காடு3. Cremation ground; சுடுகாடு.வெள்ளிலங்காட்டிடை . . . நடமாடிய நாதன் (தேவா. 439, 10). |
| வெள்ளிலத்தி | veḷḷilatti n. See வெள்ளிலோத்திரம், 2. (தைலவ.) . |
| வெள்ளிலை 1 | veḷ-ḷ-ilai n. <>வெள்1+. Betel leaf; வெற்றிலை. வெள்ளிலைத்தம்பல் கண்டார் (கம்பரா. வரைக். 49). 2. See வெள்ளிமடந்தை. (L.) |
| வெள்ளிலை 2 | veḷ-ḷ-ilai n. <>வெள்2+. Sharp edge, as of a spear; வேல் முதலிய ஆயுதத்தின் அலகு. வெள்ளிலை வேலினான் (சீவக. 328). |
| வெள்ளிலைப்பற்று | veḷḷilai-p-paṟṟu n. <>வெள்ளிலை1+. Bundle of betel leaves; வெற்றிலைக் கவளி. அடைக்காயமுதுக்கு . . . வெள்ளிலைப் பற்றொன்பதும் (S. I. I. iii, 188). |
| வெள்ளிலையமுது | veḷḷilai-y-amutu n. <>id.+. Offering of betel, as to a diety; தாம்பூல நிவேதனம். (S. I. I. ii, 128.) |
| வெள்ளிலோத்தி | veḷḷilōtti n. A plant, Symplocos beddomei; செடிவகை. |
| வெள்ளிலோத்திரம் | veḷḷi-lōttiram n. <>வெள்ளில்1+லோத்திரம். 1. A tree with white flowers; வெண்பூவுள்ள மரவகை. வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக்கதைத்த சாந்தின் (சீவக. 622). 2. Wood-apple. 3. Bark of wood-apple tree; |
| வெள்ளிவரைகாப்போன் | veḷḷi-varai-kāppōṉ n. <>வெள்ளி1+வரை+கா-. Nanti, as guarding Mt. Kailas; நந்தி. (நாமதீப. 42.) |
| வெள்ளிவவ்வால் | veḷḷi-vavvāl n. <>id.+. Silver pomfret, greyish neutral tint with purplish reflexions, attaining 1 ft. in length, Stromatcus cinereus; சாம்பல்நிறமும் சிவப்பு நிறமும் கலந்ததும் ஓர் அடி வளர்வதுமான மீன்வகை. |
| வெள்ளிவள்ளி | veḷḷi-vāḷḷi n. <>id.+ வள்ளி1. A kind of silver armlet, worn by women; மகளிரணியும் வெள்ளித் தோள்வளை. வெள்ளிவள்ளியின் விளங்கு தோணலார் (சீவக. 420). |
| வெள்ளிவாரம் | veḷḷi-vāram n. <>id.+வாரம்2. See வெள்ளிக்கிழமை. (சிலப். 23,135.) . |
| வெள்ளிவிழா | veḷḷi-viḻā n. <>id.+. Silver jubilee; ஆட்சி தாபனம் முதலியவற்றின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம். |
| வெள்ளிவெற்பு | veḷḷi-veṟpu n. <>id.+. Mt. Kailas; கயிலாயமலை. (சூடா.) |
| வெள்ளிவேர் | veḷḷi-vēr n. prob. id.+. Rootlet; சல்லிவேர். (சங். அக.) |
| வெள்ளிழுது | veḷ-ḷ-iḻutu. n. <>வெள்1+. Butter; வெண்ணெய். வெண்மை வெள்ளிழுது (குறுந். 277). |
| வெள்ளிறகுமந்தாரை | veḷ-ḷ-iṟaku-man-tārai n. <>id.+இறகு+. See வெள்ளைமந்தாரை. (யாழ். அக.) . |
| வெள்ளிறா | veḷ-ḷ-iṟā n. <>id.+. See வெள்ளிறால். (W.) . |
| வெள்ளிறால் | veḷ-ḷ-iṟāl n. <>id.+. 1. White prawn, white shrimp, Cancer setiferus; மீன்வகை. 2. cf. வெள்ளரா. A sea-fish, |
