Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளீயம் | veḷ-ḷ-īyam n. <>id.+ஈயம்2. Tin; உலோகவகை. (பதார்த்த. 1174.) (W.) |
| வெள்ளீயமணல் | veḷḷīya-maṇal n. <>வெள்ளீயம்+. Sand mixed with tin; tin ore; வெள்ளியங்கலந்த மணல். |
| வெள்ளீயவுப்பு | veḷḷiya-v-uppu n. <>id.+. White vitriol, Zinci sulphas; துத்தநாகவுப்பு. (M.L.) |
| வெள்ளீரல் | veḷ-ḷ-īral n. <>வெள்1+ஈரல்1. Lung; சுவாசாசயம். (W.) |
| வெள்ளுப்பு | veḷ-ḷ-uppu n. <>id.+. White salt; வெண்மைநிறமான உப்பு. வெள்ளுப்புப் பகருநர் (மணி. 28, 31). |
| வெள்ளுயிர் | veḷ-ḷ-uyir n. <>id.+உயிர்2. Pure, perfected soul; சுத்தான்மா. என்னை வெள்ளுயிராக்க வல்ல (திவ். திருப்பல். 8). |
| வெள்ளுருட்டு | veḷ-ḷ-uruṭṭu n. <>id.+. Bluff, empty threat; வெறுமனே பயமுறுத்துகை. (W.) |
| வெள்ளுவரி | veḷ-ḷ-uvari n. <>id.+. Good drinking-water; நல்லநீர்.வெள்ளுவரி சேய்க்கு (சினேந். 366). |
| வெள்ளுவா | veḷ-ḷ-uvā n. <>id.+உவா2. White elephant; வெள்ளையானை. வெள்ளுவாப்பிட ரேறிய வேந்தனேமுதல் (பறாளை. பள்ளு. 8.) |
| வெள்ளுழவு | veḷ-ḷ-uḻavu n. <>id.+. Ploughing while the land is neither very dry nor very wet; நிலத்தில் ஈரம் அல்லது காய்ச்சல் அதிகமில்லாத காலத்தில் உழும் உழவு. |
| வெள்ளுழவுப்பயிர் | veḷḷuḻavu-p-payir n. <>வெள்ளுழவு+பயிர்5. Young crops on land properly moist when sown, the furrows being visible; பக்குவமான ஈரத்தில் உழுதுவிதைத்து உழவு சால் தோன்ற விளையும் பயிர். (W.) |
| வெள்ளுள்ளி | veḷ-ḷ-uḷḷi n. <>வெள்1+. [T. veḷḷuḷḷi.] Garlic. See வெள்ளைப்பூண்டு. (சிலப். 11, 82, உரை). |
| வெள்ளுளுவை | veḷ-ḷ-uḷuvai n. <>id.+. A kind of uḷuvai fish; உளுவைமீன்வகை. (சங். அக.) |
| வெள்ளுறட்டி | veḷ-ḷ-uraṭṭi n. prob. id.+ ரொட்டி. A kind of sweetmeat; பண்ணிகாரவகை. (யாழ் . அக.) |
| வெள்ளுறி | veā-ḷ-uṟi n. <>id.+. A kind of net-bag used by Jain monks; சைனத் துறவிகள் கைக்கொண்ட உறிவகை. கூறை. வெள்ளுறி குண்டிகைக் காவினர். (பெருங். உஞ்சைக். 36, 228). |
| வெள்ளூச்சி | veḷḷūcci n. <>id.+prob. ஊச்சு-. A kind of snail; நத்தைவகை. |
| வெள்ளூமத்தை | veḷ-ḷ-ūmattai n. <>id.+. 1. White-flowered Asiatic thorn-apple, s. tr., Datura fastuosa-alba; சிறிய ஊமத்தைவகை. 2. Thron-apple, 1. sh., Datura stramonium; 3. Downy datura. |
| வெள்ளெருக்கு | veḷ-ḷ-erukku n. <>id.+. White madar, l. sh., Calotropis gigantea-albiflora; எருக்குவகை. வெள்ளெருக்கரவம் விரவுஞ் சடை. (தேவா. 160, 1). |
| வெள்ளெலி | veḷ-ḷ-eli n. <>id.+ எலி1. A species of rat, Gerbillus indicus; எலிவகை. குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133). |
| வெள்ளெலும்பு | veḷ-ḷ-elumpu n. <>id.+. Blanched bone; தேய்ந்து தசைகழிந்த எலும்பு. உள்ளங்கால் வெள்ளெலும்பு நோவ (பெருந்தொ. 1239). |
| வெள்ளெழுத்து | veḷ-ḷ-eḻuttu n. <>id.+. Long sight, Hypermetropia; எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை. (W.) |
| வெள்ளெள் | veḷ-ḷ-eḷ n. <>id.+எள்1. A white species of sesame; வெள்ளை நிறமான எள்வகை. வெள்ளெட் சாந்து (புறநா. 246). |
| வெள்ளென்பு | veḷ-ḷ-eṉpu n. <>id.+என்பு1. See வெள்ளெலும்பு. வெள்ளென் பூழ்பெற (சீவக. 803). . |
| வெள்ளென | veḷḷeṉa adv. <>வெள்ளெனல்+. 1. Early in the morning; அதிகாலையில். வெள்ளென எழுந்திருக்கவேண்டும். 2. Before-hand, betimes; |
| வெள்ளெனல் | veḷ-ḷ-eṉal n. <>வெள்1. 1. Expr. of (a) becoming white; வெண்மையாதற் குறிப்பு. வெள்ளென. விளர்த்தது (நன். 423. மயிலை.) : (b) becoming clear; (c) dawning of day; |
| வெள்ளேடு | veḷ-ḷ-ēṭu n. <>id.+. Blank ōla, palm leaf not written upon; வெற்றேடு. வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய (பெருங். உஞ்சைக். 32, 69). |
