Word |
English & Tamil Meaning |
|---|---|
| அஞ்சி 2 - த்தல் | aci- 1 v.tr. <>ac. To reverence, worship; பூசித்தல். அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம் (காஞ்சிப்பு.திருவே.36). |
| அஞ்சி 3 | aci n. [T. aciya, K. ace.] Letter post; தபால். அஞ்சியில் பணம் வந்தது. Loc. |
| அஞ்சிக்கை | acikkai n. <>அஞ்சுகை. [T. ajika, K. ajike.] Fear; பயம். Colloq. |
| அஞ்சிதபதம் | acita-patam n. <>ancita+. (Nāṭya.) Standing with the heels resting on the ground and the toes raised up; குதிங்காலை யூன்றிப் படத்தை மேனோக்கிவைத்து நிற்கை. (பரத.பாவ. 83.) |
| அஞ்சிதமுகம் | acita-mukam n. <>id.+. (Nāṭya.) Reclining one's head on the shoulders from extreme pain, one of 14 muka-v-apinayam, q.v.; வருத்தமாற்றாது இருதோண்மேற் றலைசாய்க்கை. (W.) |
| அஞ்சு 1 | acu n. Five. ஐந்து. |
| அஞ்சு 2 | acu 5 v.tr. [T. anju, K. aju, M. acuka.] To fear, dread; பயப்படுதல் அஞ்சுவதஞ்சாமை பேதைமை (குறள்,428). |
| அஞ்சு 3 | acu n. அஞ்சு-. Fear, terror; அச்சம். அஞ்சுவரத் தகுந (புறநா. 41). |
| அஞ்சு 4 | acu n. <>amsu. Ray of light, brightness; ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா.ஊர்தேடு.79). |
| அஞ்சுங்குளிர் - தல் | acuṅ-kuḷir- v.intr. அஞ்சு1+. To be in ecstasy, as having all the five senses participate in the joy; ஐம்பொறியும் இன்ப மடைதல். Loc. |
| அஞ்சுதகு - தல் | acu-taku- v.intr. அஞ்சு-+. Fear being produced; அச்சமுண்டாதல். (தொல்.பொ.56,உரை.) |
| அஞ்சுமான் | acumāṉ n. <>Amšumān. 1. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.; துவாதசாதித்தரு ளொருவன். (திவா.) 2. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; 3. Name of a prince of the solar race; |
| அஞ்சுருவாணி | acuruvāṇi n. <>அஞ்சு+உருவு-+ āṇi. Centre-bolt binding together the five tiers of a car; அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும் (தாயு.மௌன.9). |
| அஞ்செடுப்பு | aceṭuppu n. <>id.+ எடுப்பு. Ceremony performed by a girl on the day she bathes after attaining puberty, having reference to bearing children, as placing in her lap articles from five squares marked on the ground; ருதுஸ்நானத்தன்று செய்யும் ஒரு சடங்கு. Loc. |
| அஞ்செவி | a-cevi n. <>அகம்+செவி. Cavity of the ear; உட்செவி. அஞ்செவி நிறைய வாலின (முல்லைப்.89). |
| அஞ்செழுத்து | aceḻuttu n. <>அஞ்சு1+எழுத்து. The five-lettered mantra sacred to Siva. See பஞ்சாக்கரம். அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி.சி.9,8). |
| அஞ்ஞன் | aaṉ n. <>a-ja, Ignorant person; அறிவில்லாதவன். (பிரபோத. 38,1.) |
| அஞ்ஞாதகுலகோத்திரன் | aāta-kula-kōttiraṉ n. <>a-jāta+. One whose family or lineage is unknown; குலகோத்திரம் அறியப்படாதவன். |
| அஞ்ஞாதசுகிருதம் | aāta-cukirutam n. <>id.+. Merit unconsciously obtained; தன்னை அறியாமல் வந்த புண்ணியம். (ஸ்ரீவசன. 381, வ்யா.) |
| அஞ்ஞாதம் | aātam n. <>a-jāta. That which is not known அறியப்படாதது. |
| அஞ்ஞாதவாசம் | aāta-vācam n. <>id.+. Living incognito, as the Pāṇdavas; பிறரறியாமல் மறைந்து வசிக்கை. |
| அஞ்ஞானகிருதம் | aāṉa-kirutam n. <>a-jāna+. Unconscious sins, sins committed unwittingly, opp. to ஞானகிருதம்; அறியாமற் செய்த பாவம். |
| அஞ்ஞானம் | aāṉam n. <>a-jāna. 1. Ignorance, spiritual ignorance; அறியாமை. 2. Non-christian religion, paganism; |
| அஞ்ஞானி | aāṉi n. <>a-jānin. 1. Person without spiritual knowledge; அறிவிலான். ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும் (பிரபுலிங். விமலை. 29). 2. Non-christian, pagan; |
| அஞ்ஞை | aai n. <>அன்னை. Mother; தாய். அஞ்ஞைநீ யேங்கி யழலென்று (சிலப். 9, 24). |
| அஞர் 1 - தல் | aar- 4 v.intr. cf. அயர்1-. To be lazy, slothful; சோம்புதல். (திவா.) |
| அஞர் 2 | aar n. <>அஞர்-. 1. Mental distress; மனவருத்தம். ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருந. 88). 2. Disease; 3. Fear; 4. Slippery ground; |
| அஞலம் | aalam n. Species of gnat; நுளம்பு. (W.) |
| அஞன் | aaṉ n. <>aja. Ignorant person; அறிவிலான். (திவா.) |
