Word |
English & Tamil Meaning |
---|---|
அட்சதை | aṭcatai n. <>a-kṣata. 1. Unbroken grains of rice mixed with turmeric saffron, used in benediction or worship; மங்கல அரிசி. மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து (பிரபோத. 11, 42). 2. Rice; |
அட்சதைப்பொட்டு | aṭcatai-p-poṭṭu n. <>id.+. Turmeric paste, blackened with charcoal powder and lime, used for marks on the forehead; நெற்றியி லிடும் பொட்டுவகை. |
அட்சதைபோட்டுக்கொள்(ளு) - தல் | aṭcatai-pōṭṭu-k-koḷ- v.intr. <>id.+. To voluntarily undertake to perform an act; வலிய ஒரு காரியத்தை மேற்கொள்ளுதல். Brāh. Colloq. |
அட்சதைவை - த்தல் | aṭcatai-vai- v.intr. <>id.+. To distribute unbroken rice mixed with turmeric or saffron as an invitation to auspicious ceremonies; சுபகாரியத்துக் கழைத்தற்குறியாக அட்சதை கொடுத்தல். |
அட்சபாதன் | aṭca-pātaṉ n. <>Akṣa-pāda. Gautama, founder of the Nyāya phil., as having an eye in his right foot; கௌதமமுனி. |
அட்சம் | aṭcam n. <>akṣa. 1. Eye; கண். 2. Terrestrial latitude; |
அட்சமாலிகை | aṭca-mālikai n. <>Akṣa-mālikā. Name of an Upanisad; நூற்றெட் டுபநிடதங்களுள் ஒன்று. |
அட்சய | aṭcaya n. <>Akṣaya. Name of the last year in the Jupiter cycle of sixty years; ஒரு வருஷம். |
அட்சயதிருதியை | aṭcaya-tirutiyai n. <>a-kṣaya+. Third tithi of the bright fortnight of Vaicākam, as securing merit to all deeds of virtue performed on that day; வைசாக சுக்கில பக்ஷத்து மூன்றாந்திதியாகிய புண்ணியகாலம். |
அட்சயபாத்திரம் | aṭcaya-pāttiram n. <>id.+. 1. Divine vessel of inexhaustible food given to the Pāṇdavas by the sun; தெய்வத்தன்மையால் உணவு குறையாத பாத்திரம். (W.) 2. Vessel carried in begging, usu. by Bhāgavatas; |
அட்சயன் | aṭcayaṉ n. <>id. God, as exempt from decay; கடவுள். |
அட்சரகாலம் | aṭcara-kālam n. <>a-kṣara+. (Mus.) Chief unit of time, measured by the time-length of a short syllable; ஒரு தாளவளவை. |
அட்சரசுத்தி | aṭcara-cutti n. <>id.+. 1. Correct utterance, accurate pronounciation; உச்சரிப்புத் திருத்தம். 2. Correct chirography; |
அட்சர - தேவி | aṭcaratēvi n. <>id.+. Sarasvatī, as goddess of letters; சரசுவதி. அட்சரதேவி கோவின் விதிப்படி (திருப்பு. 1126.) |
அட்சரம் | aṭcaram n. <>a-kṣara. 1. Letter of the alphabet, writing-symbol; எழுத்து. 2. One of the characteristics of melody-types; 3. Cracked tongue; 4. A general name for several diseases of children; |
அட்சரதீபம் | aṭcara-tīpam n. <>id.+. Row of 51 lights set up in temples, as representing the 51 letters of the Skt. alphabet; கோயிலிலிடும் ஐம்பத்தொரு தீபம். |
அட்சரதோஷம் | aṭcara-tōṣam n. <>id.+. Error of spelling; எழுத்துப்பிழை. Colloq. |
அட்சரஸ்தாபனம் | aṭcara-stāpaṉam n. <>id.+. Inscribing letters of mantras in mystical diagrams for amulets; யந்திரத்தில் மந்திர எழுத்துக்களை யடைக்கை. (W.) |
அட்சராப்பியாசம் | aṭcarāppiyācam n. <>id.+abhyāsa. Ceremony connected with a child's beginning to learn the alphabet; எழுத்துப் பயில்விக்கும் சடங்கு. |
அட்சாம்சம் | aṭcāmcam n. <>akṣa+amša. Degree of terrestrial latitude; பூகோள ரேகையின் பாகம். |
அட்சி | aṭci n. <>akṣi. 1. Eye; கண். (W.) 2. Name of an Upaniṣad; |
அட்சிணி | aṭciṇi n. <>akṣini. Privileges actually enjoyed in an estate, one of aṣṭapōkam, q.v.; அஷ்டபோகத்து ளொன்றாகிய தற்காலத்து அனுபவிக்கும் சுதந்தரம். (C.G.) |
அட்டக்கரி | aṭṭa-k-kari n. cf. aṭṭa+ Jet black, dense blackness; மிக்க கறுப்பு. Colloq. |
அட்டக்கறுப்பு | aṭṭa-k-kaṟuppu n. cf. id.+. Jet black; மிக்க கறுப்பு. Colloq. |
அட்டகணிதம் | aṭṭa-kaṇitam n. <>aṣṭan+. Eight mathematical processes, viz., சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் (பிங்.); குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம். (சூடா.). |
அட்டகம் 1 | aṭṭakam n. Sweet flag. See வசம்பு. (மலை.) |
அட்டகம் 2 | aṭṭakam n. <>aṣṭaka. Group of eight; எட்டன்தொகுதி. உருவமெல்லாம் பூத வுபாதாய சுத்தாட்டக உருவ மென்னின் (சி. சி. பர. சௌத். மறு. 17). |