Word |
English & Tamil Meaning |
---|---|
அட்டமச்சனி | aṭṭama-c-caṉi n. <>aṣṭama+. (Astrol.) Saturn in the eighth house from that of the cantira-lakkiṉam, in which its influence is deemed most malignant; சந்திர லக்கினத்துக்கு எட்டாமிடத்து நிற்குஞ் சனி. |
அட்டமசுத்தி | aṭṭama-cutti n. <>id.+. (Astrol.) Eighth house from a specified lagna being unoccupied by any planet; கொண்ட இலக்கினத்திற்கு எட்டாமிடத்து எந்தக் கிரகமு மில்லாதிருக்கை. (விதான. மைந்தர்வி. 13.) |
அட்டமம் | aṭṭamam n. <>aṣṭama. Eight sign or place or position; எட்டாவது. ஒத்தவுதயத்துக் கட்டமத்தே நிற்கு மோரதிபன் (விதான. குணா. 87). |
அட்டமாசித்தி | aṭṭa-mā-citti n. <>aṣṭan+. The eight supernatural powers. See அஷ்டமாசித்தி. (திருவாச. 2, 63.) |
அட்டமி | aṭṭami n. <>aṣṭamI. The eighth tithi. See அஷ்டமி. அட்டமியு மேனை யுவாவும் (ஆசாரக்.48). |
அட்டமிகை | aṭṭamikai n. <>aṣṭamikā. A measure of weight=1/2 palam; அரைப்பலம். தனித்தனிக்கங் கட்டமிகை வெவ்வே றாக (தைலவ. தைல. 54). |
அட்டமூர்த்தம் | aṭṭa-mūrttam n. <>aṣṭan+. The eight forms of Siva, viz., பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன். வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே (கந்தர்கலி.65). |
அட்ட - மூர்த்தி | aṭṭamūrtti n. <>id.+. Siva, as having aṭṭa-mūrttam, q.v.; சிவன். (தேவா. 53, 8.) |
அட்டயோகம் | aṭṭa-yōkam n. <>id.+. Yōga consisting of eight forms of discipline. See அஷ்டாங்கயோகம். மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத்தவமே (கந்தர்கலி.65). |
அட்டலோகபற்பம் | aṭṭa-lōka-paṟpam n. <>id.+. Calcined compound of eight metals, viz., பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம். |
அட்டவசுக்கள் | aṭṭa-vacukkaḷ n. <>id.+. The eight Vasus, a class of deities. See அஷ்டவசுக்கள். (பிங்.) |
அட்டவண்ணைத்திருக்கை | aṭṭavaṇṇai-t-tirukkai n. Sting-ray, reddish brown, 6ft. across and 3ft. long, Pteroplatea micrura; பெருந் திருக்கைமீன். |
அட்டவணை | aṭṭavaṇai n. <>Mhr. aṭhavaṇa, [K.aṭṭavaṇe]. 1. Index, cash-book, ledger, register, catalogue; பொருட் குறிப்பு. அட்டவணை யிட்டதுபோ லத்தனையுந் தானிருந்து (பணவிடு 30). 2. Prefix to an offical designation to imply that the person is duly registered as holding the office, as in அட்டவணைத்தாசில்தார். |
அட்டவருக்கம் | aṭṭa-varukkam n. See அஷ்டவர்க்கம். . |
அட்டவருக்கு | aṭṭa-varukku n. See அஷ்டவர்க்கம், 2. (தைலவ.தைல.13.) |
அட்டவீரட்டம் | aṭṭa-vīraṭṭam n. <>id.+. Eight place celebrated as the scenes of Siva's exploits, viz., கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி; எட்டு வீரட்டானப் பதிகள். |
அட்டழி - த்தல் | aṭṭaḻi- v.tr. <>அடு2-+ அழி2-. cf. aṭṭa. To cook and distribute; சமைத்துப் பரிமாறுதல். (Insc.) |
அட்டன் | aṭṭaṉ n. <>aṣṭan, n. Siva, as having aṭṭa-mūrttam, q.v.; அட்டமூர்த்தியான சிவபிரான். (தேவா. 855,8.) |
அட்டாங்கயோகம் | aṭṭāṅka-yōkam n. <>aṣṭāṅga+. Yōga consisting of eight forms of discipline. See அஷ்டாங்கயோகம். . |
அட்டாணி | aṭṭāṇi n. cf. aṭṭāla. Watch-tower on a fort; கோட்டை மதின்மேல் மண்டபம். தலையெடுப்பாக வுயர்ந்த வட்டாணியும் (இராமநா.சுந்.3). |
அட்டாதசகணம் | aṭṭātaca-kaṇam n. <>aṣṭādašan+. The eighteen classes of celestial hosts. See பதினெண் கணம். . |
அட்டாதுட்டி | aṭṭā-tuṭṭi n. [T.addādiddi.] Perversity, abusive language; அடாவடி. அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. ஆரணி. 9). Colloq. |
அட்டாதுஷ்டம் | aṭṭā-tuṣṭam n. [T. addādiddamu.] See அட்டாதுட்டி. (W.) |
அட்டாதுஷ்டி | aṭṭā-tuṣṭi n. See அட்டாதுட்டி. (W.) |
அட்டாலம் | aṭṭālam n. <>aṭṭāla. See அட்டாலை. . |
அட்டாலை | aṭṭālai n. <>id. 1. Apartment on flat roof; மேல்வீடு. (W.) 2. Watch-tower on a fort; 3. Raised covered platform for watching a garden, a field, a sheep-fold, or a village; |
அட்டாவதானம் | aṭṭāvatāṉam n. <>aṣṭan+avadhāna. Art of attending to eight matters at a time. See அஷ்டாவதானம். அட்டாவதானமுந் தொல்காப்பியமு மகப்பொருளும் (தனிப்பா. இ,223,13) |