Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேட்டைகட்டு - தல் | vēṭṭai-kaṭṭu- v. intr. <>id.+. To go hunting; வேட்டைமேற் செல்லுதல். பொங்குகடல் வேட்டைகட்டி (கொண்டல்விடு. 71). |
| வேட்டைநாய் | vēṭṭai-nāy n. <>id.+. 1. A special breed of hunting dogs; வேட்டையாடப் பழகிய நாய்வகை. வேட்டைநாய்போற் கடிக்க வருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 1). 2. Bitting dog; |
| வேட்டைப்பல் | vēṭṭai-p-pal n. <>id.+. பல்2. Tusk, fang; வக்கிரதந்தம். (W.) |
| வேட்டைபிடி - த்தல் | vēṭṭai-piṭi- v. tr. <>id.+. See வேட்டையாடு-. குலைக்கிற நாய் வேட்டைபிடிக்குமா? . |
| வேட்டையவியல் | vēṭṭai-y-aviyal n. prob. id.+. A kind of curry preparation; அவியற்கறிவகை (யாழ். அக.) |
| வேட்டையாடு - தல் | vēṭṭai-y-āṭu- v. tr. <>id.+. To chase, hunt; கொல்லுதற்கெனும் பிடித்தற்கெனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல் கானகத் தெய்தி நீ வேட்டையாடி விலங்கின மாய்த்து (அரிச். பு. வெட்டாஞ். 3). |
| வேட்டைவாளி | vēṭṭaivāḷi n. cf. வேட்டுவாளி. A kind of hornet; குளவிவகை. (கோயிற்பு. பதஞ். 80, உரை.) |
| வேட்டோன் | vēṭṭōṉ n. <>வேள்-. 1. Married man; விவாகமானவன். (சங். அக.) 2. Husband; 3. Friend; 4. One who desires; |
| வேட்பித்தல் | vēṭpittal n. <>வேட்பி-. Conducting sacrifices as priests, one of antaṇar-aṟu-toḻil, q.v.; அந்தணரறுதொழிலுள் ஒன்றான வேள்விசெய்விக்கை. (பிங்.) |
| வேட்பு | vēṭpu n. <>வேள்-. Desire; விருப்பம். (யாழ். அக.) |
| வேடகம் | vēṭakam n. prob. vēdhaka. An ear-ornament; காதணிவகை. (அக. நி.) |
| வேடங்கட்டு - தல் | vēṭaṅ-kaṭṭu- v. intr. <>வேடம்1+. To put on a disguise; மாறுவேஷம் கொள்ளுதல். |
| வேடங்காட்டு - தல் | vēṭaṇ-kāṭṭu- v. intr. <>id.+. To dissemble; to appear in false light; போலியாக நடித்தல். (W.) |
| வேடச்சி | vēṭacci n. Fem. of வேடன்1. Woman of the hunter tribe; வேட்டுவச்சாதிப் பெண். Loc. |
| வேடச்சேரி | vēṭa-c-cēri n. <>வேடன்1+. Hamlet of hunters; வேடரூர். |
| வேடணம் | vēṭaṇam n. <>vēṣaṇa. Surrounding; வளைக்கை. (சங். அக.) |
| வேடதாரி | vēṭa-tāri n. <>vēṣa-dhārin. 1. Person in disguise; மாறுவேடம் பூண்பவ-ன்-ள். 2. Hypocrite; |
| வேடம் 1 | vēṭam n. <>vēṣa. 1. Disguise; உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்றுவடிவம். கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் . . . கொங்கை நற்றடம் படிந்தும் (திருவாச. 2, 15). 2. Clothes, dress; |
| வேடம் 2 | vēṭam n. <>வேள்-. cf. வேட்டம்2. [K. vāṭa.] Desire; விருப்பம். வேண்டற் கரிய விடயங்களின் வேட மாற்றி (பாரத. சம்பவ. 53). |
| வேடன் 1 | vēṭan n. <>வேடு1. cf. vyādha. [T. vēṭa, K. bēda, M. vēdan, Tu. vēdda.] 1. Hunter, fowler; வேட்டுவன், வெந்தொழில் வேடரார்த்து (சீவக. 421). 2. Man of the pālai tract; |
| வேடன் 2 | vēṭaṉ n. <>வேடம்1. See வேடதாரி, 1. (கந்தபு.). . |
| வேடிக்கை | vēṭikkai n. [T. vēduka.] 1. Amusement, diversion; fun; வினோதம். மெள்ளக் கூடிக் கலந்திருந்து கொள்வதோ வேடிக்கை (பணவிடு. 314). 2. Show; 3. Decoration; |
| வேடிக்கைக்காரன் | vēṭikkai-k-kāraṉ n. <>வேடிக்கை+காரன்1. Droll person; வினோதச்செய்கை யுடையவன். |
| வேடிக்கைகாட்டு - தல் | vēṭikkai-kāṭṭu- v. inr. <>id.+. To divert, amuse; வினோதச்செயல் செய்தல். |
| வேடிக்கைசெய் - தல் | vēṭikkai-cey- v. intr. <>id.+. See வேடிக்கைகாட்டு-. . |
| வேடிக்கைப்பேச்சு | vēṭikkai-p-pēccu n. <>id.+. Diverting talk, gossip; வினோதமான வார்த்தை. |
| வேடிச்சி | vēṭicci n. See வேடச்சி. வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை (கந்தரல. 53). . |
| வேடிதம் | vēṭitam n. prob. வேடு2. Unpleasant smell, as in boiling medicinal plants; மூலிகைகளைக் காய்ச்சுதல் முதலியவற்றா லுண்டாம் நாற்றம். (W.) |
| வேடு 1 | vēṭu n. prob. வேள்-. [K. bēda.] 1. Hunting; வேடர்தொழில். வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்த நின்னாய் (அகநா. 318). 2. The caste of hunters; 3. Hunter; 4. A kind of masquerade dance; |
