Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேடு 2 | vēṭu n. cf. vēṣṭ. [T. vēšai, K. vēṭi, M. vēdu.] 1. Cover for the mouth of a vessel; பாத்திரத்தின் வாயை மூடிக்கட்டும் ஆடை. (W.) 2. Covering; 3. Cloth for filtering or straining; 4. Small packet; |
| வேடுகட்டு - தல் | vēṭu-kaṭṭu- v. intr. <>வேடு2+. 1. To tie a cloth over the mouth of a pot; பானையின் வாயைச் சீலையாற் கட்டுதல். (W.) 2. To tie into a bundle; |
| வேடுபறி | vēṭu-paṟi n. <>வேடு1+. 1. Highway robbery; வழிப்பறி. சுந்தரர் வேடுபறி. 2. A festival celebrating Tirumaṅkai-maṉṉaṉ's attempt to rob Viṣṇu on the highway; |
| வேடுவழி | vēṭuvaḻi n. Pulpy-podded black babul. See பீவேல். (L.) |
| வேடுவன் | vēṭuvaṉ n. <>வேடு1. 1. Hunter; வேடன் வீரத்தாலொரு வேடுவனாகி (தேவா. 485, 4). 2. See வேட்டுவன், 4. (யாழ். அக.) |
| வேடை 1 | vēṭai n. <>வேள்-. cf. ஏடை. [K. vēṭa.] 1. Desire, longing; வேட்கை. வள்ளிக்கு வேடைகொண்ட பெருமாளே (திருப்பு. 288). 2. Lovesickness; 3. Thirst; |
| வேடை 2 | vēṭai n. <>vēdā. Boat, vessel; மரக்கலம். (யாழ். அக.) |
| வேடை 3 | vēṭai n. prob. வே-. 1. Heat, intense dryness; வெப்பம். வேடையதெய்த வெதுப்பினும் (திருவாரூ. 522). 2. Season of drought; 3. See வேடைக்காலம், 1. |
| வேடை 4 | vēṭai n. perh. vēša. cf. வாடை2. Street where merchants live; செட்டிகள் வசிக்குந்தெரு. (யாழ். அக.) |
| வேடைக்காலம் | vēṭai-k-kālam n. <>வேடை3+. 1. Hot season, summer; கோடைக்காலம். (W.) 2. See வேட்டை3, 2. |
| வேண் 1 | vēṇ n. <>வேள். A region where koṭu-n-tamiḻ was spoken. See வேணாடு. குடங்கற்கா வேண்பூழி (நன். 272, மயிலை.). |
| வேண் 2 | vēṇ n. <>வேள்-. [M. vēṇ.] Desire; விருப்பம். (யாழ். அக.) |
| வேண்டப்பாடு | vēṇṭappāṭu n. See வேண்டற்பாடு. (தக்கயாகப். அரும்.) . |
| வேண்டல் | vēṇṭal n. <>வேண்டு-. 1. Desiring; விரும்புகை. (பிங்.) 2. Petition; |
| வேண்டலன் | vēṇṭalaṉ n. <>id.+அல் neg.+. Enemy; பகைவன். (சேதுபு.) |
| வேண்டற்பாடு | vēṇṭaṟ-pāṭu n. <>வேண்டல்+. 1. Desire; விருப்பம். (தக்கயாகப். 506, உரை.) 2. Need; 3. Greatness, as compelling obeisance; 4. Pride; |
| வேண்டாத்தலையன் | vēṇṭā-t-talaiyaṉ n. <>வேண்டு-+ஆ neg.+தலை. (யாழ். அக.) 1. Dare-devil; அஞ்சாதவன். 2. Rough-mannered person; |
| வேண்டாத்தனம் | vēṇṭā-t-taṉam n. <>id.+id.+தனம்1. Loc. 1. Wrong, wickedness; தவறு. 2. See வெண்டாப்பொறுப்பு. |
| வேண்டாதகாரியம் | vēṇṭāta-kāriyam n. <>id.+id.+. Unnecessary act or business; அனாவசியமான செயல். |
| வேண்டாதவன் | vēṇṭātavaṉ n. <>id.+id.+. 1. Undesirable man; விரும்பப்படாதவன். 2. Enemy; |
| வேண்டாதார் | vēṇṭātār n. <>id.+id.+. 1. Those who have no desires; விருப்பமற்றவர். வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை (நாலடி, 103). 2. See வேண்டார், 2. வேண்டாதார் நெஞ்சுட்க (கலித். 100). |
| வேண்டாப்பாடு | vēṇṭā-p-pāṭu n. <>id.+ id.+. See வேண்டாப்பொறுப்பு. Loc. . |
| வேண்டாப்பொறுப்பு | vēṇṭā-p-poṟuppu n. <>id.+ id.+. Indifference; irresponsibility; பொறுப்பின்மை. Loc. |
| வேண்டாம் | vēṇṭām v. opt. <>id.+ id. 1. Verb meaning 'will not be required' or 'will not be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கதன்று என்பது குறிக்கும் வியங்கோள்வினை. ஓதாம லொருநாளு மிருக்கவேண்டாம். 2.Verb in the future tense used in all genders, numbers and persons meaning (a) 'will not be required'; (b) 'will stand in no relation to'; 3. Auxilliary verb meaning must not'; |
