Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேத்தவை | vēttavai n. <>வேந்து+ அவை3. Royal assembly ; இராசசபை. இசைபெறு திருவின் வேத்தவை (மலைபடு. 39) . |
| வேத்தன் 1 | vēttaṉ n. <>vēttr. One who knows ; அறிந்தோன். (இலக். அக.) |
| வேத்தன் 2 | vēttaṉ n. <>vēdya. See வேத்தியன். (கம்பரா. மீட்சிப். 116.) . |
| வேத்தியம் | vēttiyam n. <>vēdya. 1.That which is known; அறியப்படுவது.அநுபலத்தி வேத்தியம் (சி. சி. அளவை, 1, சிவாக். பக். 113). 2. Mark, sign; |
| வேத்தியல் | vēttiyal n. <>வேந்து+இயல். 1. Kingly nature; வேந்தனது தன்மை. (நன். 409, மயிலை.) 2. (Nāṭya.) A kind of dance performed in the presence of a king, opp. to potu-v-iyal; 3. (Puṟap.) See வேத்தியன்மலிபு. (புறநா.அரும்.) |
| வேத்தியன் | vēttiyaṉ n. <>vēdya. One who is knowable; அறியத்தக்கவன். சட்சுவினால் வேத்தியன். |
| வேத்தியன்மண்டபம் | vēttiyaṉ-maṇṭapam n. <>வேத்தியல்+. Durbar hall of a king; அரசனது பேரோலக்க மண்டபம். வேத்தியன்மண்டப மேவியபின்னர் (சிலப், 28, 79). |
| வேத்தியன்மலிபு | vēttiyaṉ-malipu n. <>id.+. (Puṟap.) Theme in which warriors expatiate upon the greatness of a heroic-king; மறமன்னனது மேப்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 13.) |
| வேத்திரகரன் | vēttira-karaṉ n. <>vētrakara. Nanti; நந்திதேவன். (இலக். அக.) |
| வேத்திரகீயம் | vēttirakīyam n. <>vētrakīya. A place mentioned in the Mahābhārata, where the Pāṇdavas lived in disguise as Brahmins after the burning of the lac palace; அரக்கு மாளிகை நெருப்பாலழிந்தபின் பாண்டவர்கள் பார்ப்பனக்கோலம்பூண்டு வாழ்ந்ததாக மகாபாரதத்திற் கூறப்படும் ஓர் இடம். வேத்திரகீயச்சருக்கம். (பாரத.) |
| வேத்திரச்சாய் | vēttira-c-cāy n. <>வேத்திரம்1+சாய்5. A sedge. See பிரப்பங்கோரை. (தைலவ.) |
| வேத்திரத்தாள் | vēttira-t-tāḷ n. <>id.+ தாள்1. Tuber of rattan reed; பிரப்பங் கிழங்கு. (தைலவ.) |
| வேத்திரதரன் | vēttira-taraṉ n. <>vētradhara. 1.Gate-keeper; வாயில் காவலன்.(W.) 2. Nanti; 3. Herald, panegyist; |
| வேத்திரதாரகன் | vēttira-tārakaṉ n. <>vētra-dhāraka. See வேத்திரதரன். (யாழ். அக.) . |
| வேத்திரப்படை | vēttira-p-paṭai n. <>வேத்திரம்1+. Cane, as a weapon; பிரம்பாகிய ஆயுதம். வேத்திரப்படையாற் றாக்கி (திருவிளை. பாயி.17). |
| வேத்திரபாணி | vēttira-p-pāṇi n. <>vētrapāṇi. Attendant who, with a cane in his hand, maintains order in a crowd; கூட்டத்தை ஒதுக்குதற்குக் கையிற் பிரம்பு தாங்கியுள்ள பணியாளன். (கோயிலொ. 57.) |
| வேத்திரம் 1 | vēttiram n. <>vētra. 1. Rattan. See பிரம்பு, 1. வேத்திரக் கரத்தோர் (தணிகைப்பு. அகத்தி. 84). 2. Arrow; |
| வேத்திரம் 2 | vēttiram n. prob. bādira. Jujube tree. See இலந்தை1. (மலை.) |
| வேத்திராசனம் | vēttirācaṉam n. <>vētra+ āsana. Rattan mat; பிரப்பம்பாய். (இலக். அக.) |
| வேதக்கட்டி | vēta-k-kaṭṭi n. <>வேதம்1+. One who has learned the Vēdas by heart; வேதத்தை நன்கு ஓதியவன். Loc. |
| வேதக்காரன் | vēta-k-kāraṉ n. <>id.+. காரன்1. Christian; கிறிஸ்தவன். Chr. |
| வேதக்கொடியோன் | vēta-k-kōṭiyōṉ n. <>id.+ கொடி. Drōṇācārya; துரோணாசாரியன். (பிங்.) |
| வேதகப்பொன் | vētaka-p-poṉ n. <>வேதகம்1+. Refined gold; புடமீட்ட பொன். அல்லாத பொன்னிற்காட்டில் வேதகப்பொன்னுக்கு ஏற்றமுண்டு (திவ். திருமாலை, 39, வ்யா.). |
| வேதகம் 1 | vētakam n. <>bhēdaka. 1. Differentiating, distinguishing; வேறுபடுத்துகை. உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்ட வங்கணனே (கோயிற்பு. இரணிய. 56). 2. Change, modification; 3. Dissendsion, disunion; 4. Treachery, treason 5. Refining, as of gold 6. Refined gold¢ 7. Agent to transmute baser metals into gold¢ 8. cf. வேதங்கம். Small fine cloth |
| வேதகம் 2 | vētakam n. <>vēdhaka. 1.Camphor; கர்ப்பூரம். (இலக். அக.) 2. Grain; |
