Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதகம் 3 | vētakam n. <>vēdaka. Disclosure; வெளிப்படுத்துகை. இரகசியத்தை வேதகம் பண்ணலாகாது. |
| வேதகருப்பன் | vēta-karuppaṉ n. <>vēda+ garbha. (யாழ். அக.) 1.Brahmā; பிரமன். 2. Brahmin; |
| வேதகலாபம் | vēta-kalāpam n. <>id.+. கலாபம்2 Religious persecution; மதப்பற்றுக் காரணமாக விளைக்கும் இமீசை. (W.) |
| வேதகன் 1 | vētakāṉ n. <>bhēdaka. One who transmutes or changes the nature of things; ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன். போதகன் வேதகன் பொருவிலன் (சிவதரு. கோபுர. 104). |
| வேதகன் 2 | vētakaṉ n. <>vēda-ka. One who reveals; அறிவிப்பவன். வித்தகன் வேதக னாதி விளம்பிய வாய்மொழி (சிவதரு. சிவஞானதான. 21). |
| வேதகாரன் | vēta-karaṉ n. <>vēta-kāra. 1. Worker in bamboo; கூடை பின்னுவோன். (சூடா. 2, 32.) 2. Weaver; |
| வேதகிரி | vēta-kiri n. <>vēda+ giri. The hill of Tiru-k-kaḻu-k-kuṉṟam; திருக்கழுக்குன்றம். |
| வேதகீதன் | vēta-kītaṉ n. <>id.+ gīta. God, as praised in the Vēdas; [வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோன்] கடவுள். வேதியா வேதகீதா (தேவா. 870, 1). நச்சுநா கணைக்கிடந்த நாதன் வேதகீதனே (திவ். திருச்சந். 117). |
| வேதகோஷ்டி | vēta-kōṣṭi n. <>id.+. Band of Brahmins chanting Vēdas, in temple, etc.; கோயில் முதலியவற்றில் வேதபாராயணம் செய்யும் பாப்பனர் தொகுதி. |
| வேதகோஷம் | vēta-kōṣam n.<>id.+ghōṣa. The sound of chanting the Vēdas. See வேதவொலி. |
| வேதங்கம் | vētaṅkam n. cf. வேதகம்1. A kind of fine cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) |
| வேதசங்கிதை | vēta-caṅkitai n. <>vēda+ samhitā. Portions of the Vēdas recited in long sections; சிறுசிறுவாக்கியமாகவன்றித் தொடர்ச்சியாக ஓதப்படும் வேதப்பகுதி. |
| வேதசம் 1 | vētacam n. <>vētasa. 1. Rattan-palm, m. cl., Calamus rotang; பிரம்புவகை. (இலக். அக.) 2. Sacred grass; |
| வேதசம் 2 | vētacam n. <>vēdhasa. Part of the hand under the root of the thumb; பெருவிரலடி. (யாழ். அக.) |
| வேதசாட்சி | vēta-cāṭci n. <>வேதம்1+. Martyr for religion; மதத்தை நிலைநாட்டுவதற்காக உயிர்கொடுத்தவன். R. C. |
| வேதசாரம் 1 | vēta-cāram n. <>vēda+. 1. The essence of the Vēdas; வேதத்தின் சாரமானது. ஆகையால் இது சகல வேதசாரம் (அஷ்டாதச. முமுட்சுப். திருமந்திர. 34). 2. See வேதசிரசு. (சங். அக.) |
| வேதசாரம் 2 | vētacāram n. cf. vētasa. See வேதசம்1, 2. (சங். அக.) . |
| வேதசாஸ்திரம் | vēta-cāstiram n. <>vēda+. 1. The Vēdas; வேதமாகிய நூல். 2. The Vēdas and the šāstras; 3. Theology; |
| வேதசாஸ்திரி | vēta-cāstiri n. <>vēda-šāstrin. One learned in the Vēdas and the šāstras; வேதங்களையும் சாஸ்திரங்களையும் நன்கு ஓதியவன். (W.) |
| வேதசிரசு | vēta-cirasu n. <>vēda-širas. The Upaniṣads; உபநிடதம். (சி. போ. வ. தீ. 32.) |
| வேதஞ்ஞன் | vētaaṉ n. <>vēda-ja. Vēdic scholar; வேதமறிந்தவன். (இலக். அக.) |
| வேதண்டம் | vētaṇṭam n. <>vētaṇda. 1. Mountain; மலை. வெள்ளி வேதண்டத்து (சீவக. 546). 2. Mt. Kailāsa; 3. Mt. Potiyil; 4. Elephant; |
| வேதத்தன் | vētattaṉ n. <>வேதம்1. Brahmā; பிரமன். வெங்கா தராவுக்குச் செய்தா னிலைமலர் வேதத்தனே (தனிப்பா, i, 225, 16). |
| வேதத்திரயம் | vēta-t-tirayam n. <>vēda-traya. The three Vēdas, irukku, yacu, cāmam; இருக்கு யசு சாமம் என்ற மூன்று வேதங்கள். |
| வேததத்துவம் | vēta-tattuvam n. <>vēda+. The Vēdic truth; வேதத்தின் மெய்ப்பொருள். (யாழ். அக.) |
| வேதநாதம் | vēta-nātam n. <>id.+. See வேதவொலி. வேதநாதமும் . . . நிறைந்தோங்க (பெரியபு. திருஞான. 55). . |
| வேதநாதன் | vēta-nātaṉ n. <>id.+. See வேதநாயகன். வேதநாதனைப் பாடலே கடன் (திருவிளை. விறகு. 69). . |
| வேதநாயகன் | vēta-nāyakaṉ n. <>id.+. God, as the Lord of the Vēdas; [வேதங்களுக்குத் தலைவன்] கடவுள். வேதநாயகன் மார்பகத் தினிது வீற்றிருக்கும் ஆதிநாயகி (கம்பரா. அகலிகைப்.16). |
