Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேதமாந்தர் | vēta-māntar n. <>வேதம்1+. Brahmins; பார்ப்பனர். வேதமாந்தர் வேந்தரென்று (நம்பியகப். 75). |
| வேதமார்க்கப்பிரதிஷ்டாபனாசாரியர் | vēta-mārkka-p-piratiṣṭāpaṉācāriyar n. <>vēda+mārga+pratiṣṭhāpana+ā-cārya. Holy teacher who establishes the Vēdic faith; வேதநெறியை நிலைநிறுத்தும் ஆசிரியர். Vaiṣṇ. |
| வேதமார்க்கம் | vēta-mārkkam n. <>id.+. The Vēdic religion or faith; வேதத்திற் சொல்லப்பட்ட மதம். (பிங்.) (தக்கயாகப். 7, உரை.) |
| வேதமுக்கியை | vēta-mukkiyai n. prob. id.+mukhyā. Musk; கஸ்தூரி. (சங். அக.) |
| வேதமுடி | vēta-muṭi n. <>வேதம்1+. See வேதசிரசு. (இலக். அக.) . |
| வேதமுதல்வன் | vēta-mutalvaṉ n. <>id.+. 1. God; கடவுள். வேதமுதல்வனென்ப தீதற விளங்கிய திகிரியோனே (நற். 1). 2. Brahmā; |
| வேதமுதல்வி | vēta-mutalvi n. <>id.+. Fem. of வேதமுதல்வன். (பிங்.) 1. Sarasvati; சரசுவதி. 2. Lakṣmī; 3. Pārvatī; |
| வேதமுனி | vēta-muṉi n. <>id.+முனி3. See வேதவியாசன். வேதமுனி சூதமுனி (திருக்காளத். பு அவையடக். 1). . |
| வேதமூர்த்தி | vēta-mūrtti n. <>id.+. 1. See வேதபுருஷன். . 2. God, as embodied in the Vēdas; 3. One who is well versed in the Vēdas; |
| வேதர் | vētar n. <>id. Brahmins; பிராமணர். வேதரார்த்தனர் (கந்தபு. தெய்வயா. 195). |
| வேதரஞ்சகன் | vēta-racakaṉ n. <>vēda+rajaka. Brahmā; பிரமன். வேதரஞ்சகன் மால்புரந்தரன் (சௌந்த. 26). |
| வேதவசனம் | vēta-vacaṉam n. <>id.+vacana. See வேதவாக்கியம். . |
| வேதவரசன் | vēta-v-aracaṉ n. <>வேதம்1+ Brahmin; பார்ப்பான். (யாழ். அக.) |
| வேதவனம் | vēta-vaṉam n. <>vēda+vana. See வேதராணியம். வேதவனத்தின் மெய்ப்பொருளினருளால் (பெரியபு. திருஞான. 269). . |
| வேதவாக்கியசொரூபம் | vēta-vākkiya-corūpam n. <>id.+vākya+. Nature of a Vēdic text, of four kinds, viz., viti-vātam, artta-vātam, mantira-vātam, nāmatēyam; விதிவாதம் அர்த்தவாதம் மந்திரவாதம் நாமதேயம் என்று நான்கு வகைப்படும் வேதவாக்கியங்களின் இயல்பு. (விவேகசிந். வேதாந்தபரிச். 5.) |
| வேதவாக்கியம் | vēta-vākkiyam n. <>id.+. 1. Vēdic text; வேதத்திலுள்ள சொற்றொடர். 2. Gospel truth; |
| வேதவாக்கு | vēta-vākku n. <>id.+வாக்கு5. See வேதவாக்கியம். . |
| வேதவாணர் | vēta-vāṇar n. <>வேதம்1+வாணன்1. Brahmins; பார்ப்பனர். வேதவாணர் . . . நீதியால் வணங்குகின்ற நீர்மை (திவ். திருச்சந். 9). |
| வேதவாதம் | vēta-vātam n. <>vēda+vāda. Exposition of the vēdic religion; வைதிக மதத்தைப்பற்றிய வாதம். வேதவாதச் சருக்கம். (நீல.) |
| வேதவிண்ணப்பம் | vēta-viṇṇappam. n. <>வேதம்1+. The chanting of the vēdas, in temples, etc., on ceremonial occasions; விசேட காலங்களிற் கோயில் முதலிய இடங்களில் வேதமோதுகை. |
| வேதவித்தகன் | vēta-vittakaṉ n. <>vēda+. See வேதவித்து. (யாழ். அக.) . |
| வேதவித்து | vētavittu n. <>vēda-vid. 1. One who is learned in the Vēdas; வேதங்களை நன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த (கம்பரா. பரசு. 36). 2. God; |
| வேதவியாக்கியானம் | vēta-viyākkiyāṉam n. <>vēda+. 1. Commentaries on the Vēdas; வேதத்தின் விளக்கவுரை. 2. Expounding the Bible; |
| வேதவியாசனன் | vēta-viyācaṉ n. <>id.+. Vyāsa, as the compiler of the Vēdas; [வேதத்தைத் தொகுத்தோன்] வியாசமுனிவன். (தக்கயாகப். 334, உரை.) |
| வேதவியாதன் | vēta-viyātaṉ n. <>id.+வியாதன்1. See வேதவியாசன். (மணி. 27, 5). . |
| வேதவிருத்தம் 1 | vēta-viruttam n. <>id.+viruddha. What is contrary to or against the Vēdas; வேதத்துக்கு மாறானது. |
| வேதவிருத்தம் 2 | vēta-viruttam n. <>id.+vrtta. Teaching of the Vēdas; வேதபோதனை. (யாழ். அக.) |
