Word |
English & Tamil Meaning |
---|---|
அனுசிதம் | aṉucitam n. <>an-ucita. Evil; கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் (S. I. I. vii, 252). |
அனுசூதம் | aṉu-cūtam n. <>anu-syūta. That which is regular and uninterrupted; இடைவிடாதது. அனுபூதி யனுசூதமும் (தாயு. கருணாகர. 1). |
அனுசென்மம் | aṉu-ceṉmam n. <>anu-janma. The tenth nakṣatra from one's natal star; ஒருவன்பிறந்த நட்சத்திரத்திற்குப் பத்தாவது நட்சத்திரம். (இலக். வி. பக். 796.) |
அனுட்டணம் | aṉuṭṭaṇam n. <>an-uṣṇa. 1. Coolness; வெப்பமின்மை. (சங். அக.) 2. Idleness; |
அனுட்டனம் | aṉuṭṭaṉam n. cf. அனுட்டணம். Common anise; சோம்பு. (சித். அக.) |
அனுட்டானி - த்தல் | aṉuṭṭāṉi- 11 v. tr. <>anuṣthāna. To practise; அனுட்டித்தல். சொல்லிய தனுட்டானித்து (விவேகசூடா. 37). |
அனுத்தசித்தம் | aṉutta-cittam n. <>an-ukta+siddha. (Phil.) What is implicitly established; சொல்லாமல் முடிவு செய்யப்பட்டது. |
அனுத்தரம் | aṉuttaram n. <>an-uttara. (நாநார்த்த.) 1. That which is not best; சிரேட்டமில்லாதது. 2. That which is not north; 3. That which is not high; 4. Superiority; |
அனுத்திராகம் | aṉuttirākam n. A kind of delirium; சன்னிவகை. (தஞ். சரசு. iii, 194.) |
அனுதரம் | aṉutaram n. <>anu-tara. Passage money; fare on board a ship; கப்பற்கேள்வு. Pond. |
அனுதாரம் | aṉutāram n. <>anucāra. Protection; காப்பு. இவர்கள் அனுதாரத்திலுள்ளார் பக்கல் நின்றும் ஓலையாகில் ஆளாகில் வந்தால் (S. I. I. viii, 54). |
அனுநாதம் | aṉunātam n. <>anu-nāda. Echo; பிரதித்தொனி. Pond. |
அனுப்பிரவிட்டன் | aṉuppiraviṭṭaṉ n. <>anu-pra-viṣṭa. One who pervades or dwells within; உள்ளே நிற்போன். |
அனுப்பு | aṉuppu n. An ancient tax; பழைய வரிவகை. (M. E. R. 427 of 1928-9.) |
அனுபந்தம் | aṉupantam n. <>anu-bandha. 1. The origin of a flaw or error; கோடவுற்பவம். (நாநார்த்த.) 2. (Gram.) The letter between pakuti and vikuti, 3. Obstacle, impediment; 4. Help; |
அனுபந்தி | aṉupanti n. <>anubandhin. (நாநார்த்த.) 1. Hiccough; விக்கல். 2. Thirst; |
அனுபவாரூடம் | aṉupavārūṭam n. <>anubhava+. That which is based on or supported by experience; அனுபவத்தை மேற்கொண்டது. Loc. |
அனுபவி - த்தல் | aṉupavi- 11 v. tr. <>anubhava. To know by actual experience; அனுபவபூர்வமா அறிதல். (சி. போ. பா. 6, 2, பக். 331.) |
அனுபவை | aṉupavai n. <>anu-bhavā. Pārvatī; பார்வதி. அனுபவை பராசக்தி (திருப்பு. 385). |
அனுபாதம் | aṉupātam n. <>anu-pāta. (Arith.) Rule of three; கணக்குவகை. Pond. |
அனுபாவம் | aṉupāvam n. <>anu-bhāva. (நாநார்த்த.) 1. Determination of great men; பெரியோர் மேற்கொண்ட வுறுதி. 2. Gesture indicative of one's thoughts; 3. Greatness; |
அனுபூதிவிளக்கம் | aṉupūti-viḷakkam n. <>அனுபூதி+. A treatise on Saiva Siddhānta philosophy; சைவசித்தாந்தசாத்திர நூல்களுளொன்று. (சிவசம.) |
அனுபோகப்பற்றொழுகு | aṉupōka-p-paṟṟoḻuku n. <>அனுபோகம்+பற்று+. Renewal of title-deeds; சொத்துக்குரிய மூலபத்திரங்களைப் புதுப்பிக்கை. (M. E. R. 213 of 1925.) |
அனுபோகி - த்தல் | aṉupōki- 11 v. tr. <>anu-bhōga. To enjoy; இன்பம் நுகர்தல். அன்னை தந்தை யிருவருந்தா னனு போகிக்க (ஞான வெட்டி. பாயி. 24). |
அனுமதி - த்தல் | aṉumati- 11 v. tr. <>anu-mati. To permit; to consent to; சம்மதித்தல். |
அனுமந்தரம் | aṉu-mantaram n. <>anu+. (MUS.) Subsidiary mantaram string, in a lute; மந்தரத்தந்திக்குத் துணையாயுள்ள நரம்பு. (சங். சந்.) |
அனுமந்தவிருசு | aṉumanta-virucu n. <>அனுமந்தன்+. A kind of rocket; ஆகாசவாண வகை. (T. C. M. ii, 2, 593.) |
அனுமாசகண்ணி | aṉumācakaṇṇi n. cf. அனுமாசக்காய். A plant growing in damp places; பொன்னாங்காணி. (சித். அக.) |