Word |
English & Tamil Meaning |
---|---|
அஷ்டாங்கசீலம் | aṣṭaṅka-cīlam n. <>aṣṭāṅga+. (Buddh.) The eight rules of conduct, viz.; the three special rules prescribed for niṣṭāparar among the house-holders, i.e., abstinence from taking unholy food at night, abstinence இல்லறத்தாரில் ஏனையோர்க்குரிய பஞ்சசீலத்தோடு நிஷ்டாபரர்களுக்கே யுரியனவாகிய இரவில் தூய்மையில் லுணவைப் புசியாமை, சந்தன முதலிய மணமுள்ள பொருள்களை உபயோகியாமை, தரையிற் பாய்மேலே படுக்கை ஆகிய முன்றுஞ் சேர்ந்து எண் வகைப்பட்ட பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, அரும்.) |
அஷ்டாங்கபுத்தி | aṣṭāṅka-putti n. <>id.+. Eight kinds of knowledge, viz., kirakaṇam, tāraṇam, smaraṇam, pratipātaṉam, ūkam, apōkam, artta-viaṉam, tatva-aṉam; கிரகணம் தாரணம் ஸ்மரணம் ப்ரதிபாதனம் ஊகம் அபோகம் அர்த்தவிஞ்ஞானம் தத்வஞானம் என்ற எண்வகைப்பட்ட அறிவு. (ரஹஸ்ய. 1051.) |
அஷ்டாங்கம் | aṣṭāṅkam n. <>aṣṭan+. Aṣṭāṅka-namaskāram, as form of obeisance; அஷ்டாங்கநமஸ்காரம். (R.) |
அஷ்டாங்கமார்க்கம் | aṣṭāṅka-mārkkam n. <>aṣṭāṅga+. (Buddh.) The eightfold path of release from bondage; எண்வகைப்பட்ட உடற்குரிய பதினெண்குற்றம். (R.) |
அஷ்டாதசகுணம் | asṭā-taca-kuṇam n. <>asṭa-daša+. Patiṉeṇ-kuṟṟam The eighteen kinds of defects of human body; உடற்குரிய பதினெண்குற்றம். (R.) |
அஷ்டாதசமூலம் | aṣṭa-taca-mūlam n. <>id.+. Eighteen kinds of medicinal roots, viz., koṭivēli, erukku, nocci, muruṅkai, māviliṅkam, caṅkaṅkuppi, taḻutāḻai, kumiḻ, pātiri, vilvam, kaṇṭaṅkattiri, karimuḷḷi, ciṟṟāmalli, pērāmalli, vērkkompu, karantai, tūtuḻai, naṉṉāri; கொடிவேலி எருக்கு நொச்சி முருங்கை மாவிலிங்கம் சங்கங்குப்பி தழுதாழை குமிழ் பாதிரி வில்வம் கண்டங்கத்திரி கறிமுள்ளி சிற்றாமல்லி பேராமல்லி வேர்க்கொம்பு கரந்தை தூதுளை நன்னாரி முதலிய பதினெட்டுவகை மருந்து வேர்கள். (R.) |
அஷ்டாதசவாத்தியம் | aṣṭā-taca-vāttiyam n. <>id.+. Eighteen kinds of musical instruments; பதினெட்டுவகை வாத்தியங்கள. |
அஷ்ட்கரணம் | aṣṭā-karaṇam n. <>aṣṭa-karaṇa. That which is without the aid of the six sensory organs; that which is involuntary; ஷட்கரணவுதவி யில்லாதது. அஷட்கரணமானசொல். (திவ். இயற். திருநெடுந். 17, வ்யா.). |
அஸ்தபாவாடை | asta-pāvāṭai n. <>hasta+. Handkerchief; கைக்குட்டை.(W.) |
அஸ்தரொக்கம் | asta-rokkam n. <>id.+. Ready cash; ரொக்கத் தொகை பணயமஸ்தரொக்கமாக வந்தால் (விறலிவிடு. 225.) |
அஸ்தாந்திரம் | astāntiram n. cf. Final account; முடிவான கணக்கு. அரண்மனைக்குள் அஸ்தாந்திர மெழுதி யாண்மை செலுத்தேனோ (கூளப்ப . 218). |
அஸ்தி | asti n. <>hastin. Elephant; யானை. அஸ்திபேதி. (W.) |
அஸ்திகடை | asti-kaṭai n. <>asthi.+. Fierce battle; கடும்போர். அஸ்திகடைசெய்த நான்று. (S. I. I. iii, 232). |
அஸ்திகாயம் | astikāyam n. <>asti-kāya. (Jaina.) The five categories; பஞ்சாஸ்திகாயம். (மேருமந். பாயி. 47.) |
அஸ்திசாரபேதி | asti-cāra-pēti n. <>asthi + sāra+. A kind of diarrhoea; பேதி வகை. (R.) |
அஸ்திசுரம் | asti-curam, n. <>id.+. A kind of fever, phthisis; எலும்புருக்கிச் சுரம். (வை. மூ.) |
அஸ்திசோபாரோகம் | asti-cōpā-rōkam n. <> asthi-šōbhā+. Hypertrophy of the bone; எலும்பு தடிக்கும் ரோகம் . (இங். வை.) |
அஸ்திபேதி | asti-pēti n. <>hasti+. Purgative for elephants; யானைக்குக் கொடுக்கும் பேதிமருந்து. (W.) |
அஸ்திரசந்தானம் | astira-cantāṉam n. <>astra.. Volley of arrows; அம்புக்கூட்டம். (W.) |
அஸ்திரமந்திரம் | astira-mantiram n. <>astra-mantra. (šaiva.) A mantra, one of ṣaṭaṅka-mantiram, q.v.; ஷடங்கமந்திரங்களுளொன்று. |
அஸ்தேயம் | astēyam n. <>a-stēya. Non-stealing, one of paca-makā-viratam, q.v; பஞ்சமகாவிரதங்களு ளொன்றான திருடாமை. (மேரு மந். பாயி. 15.) |
அஸ்மதிரோகம் | asmari-rōkam n. <>ašmarī+. Gravel, stone in the bladder; மூத்திரப் பையிற் கல் உண்டாம் நோய். (இங். வை.) |
அஸ்மிதம் | asmitam n. <>asmi-tā. See அஸ்மிதை . அஸ்மிதமென்பது புத்திசரீராதிகளைத் தன்னோடு ஒன்றுபடக் கொண்டு தானென வெண்ணுதல் (மேருமந். முகவுரை. பக் . xv). . |