Word |
English & Tamil Meaning |
---|---|
ஆயக்கட்டுமானியம் | āyakkaṭṭu-māṉi-yam n. <>ஆயக்கட்டு+. Money allowance claimed under Government sanads; சர்க்கார் சன்னதுப்படி ரொக்கமாக வசூலிக்கும் மேரை. (R. T.) |
ஆயக்கர் | āyakkar n. A class of village servants who, for their services to the village community, are entitled to a portion of the crop; கிராம ஊழியருள் ஒருவகையான். (R. T.) |
ஆயக்கல் | āyakkal n. cf. ஆய்க்கல். A kind of caustic stone or mineral; காரக்கல். (W.) |
ஆயக்குழல் | āya-k-kuḻal n. <>ஆய்+. Flute; புல்லாங்குழல். Pond. |
ஆயச்சாவடி | āya-c-cāvaṭi n. <>ஆயம்+. Customs office; சுங்கத்துறை. (W.) |
ஆயத்தம் 1 | āyattam n. <>āyasta. (நாநார்த்த.) 1. Sharpness; கூர்மை. 2. Anger; 3. Rejection; |
ஆயத்தம் 2 | āyattam n. (Mus.) A musical mode; இசைக்கிளையில் ஒன்று. (பெரியபு. ஆனாய 26, உரை.) |
ஆயத்தலம் 1 | āya-t-talam n. <>ஆயம்+. Vital part; மர்மஸ்தானம். (R.) |
ஆயத்தலம் 2 | āya-t-talam n. <>āya+. See ஆயச்சாவடி. (W.) . |
ஆயத்தி | āyatti n. <>āyatti. (நாநார்த்த.) 1. Day; நாள். 2. Boundary; 3. Affection; 4. Strength; 5. Power of fascinating; |
ஆயதி | āyati n. <>āyati. (நாநார்த்த.) 1. Future; வருங்காலம். 2. Length; 3. Dignity; 4. Connection, fitting; |
ஆயம் | āyam n. <>āya. 1. Length; நீளம். (அக. நி.) 2. Crowd of people; 3. Gold; |
ஆயமானம் | āya-māṉam n. <>ஆயம்+. (W.) 1. Vital part; மர்மஸ்தானம். 2. Secret; |
ஆயமுற்கரவலன் | āyamuṟkaravalaṉ n. See ஆயமுற்கரவன். (W.) . |
ஆயமுற்கரவன் | āyamuṟkaravaṉ n. prob. paša-mudgara. Kubēra; குபேரன். (திவா. Ms.) |
ஆயமேரை | āya-mērai n. <>ஆயம்+. Portion of the crop assigned to the village servants, at harvest time; கிராமவூழியர்களுக்குக் கொடுக்குந் தானியப்பகுதி. (R. T.) |
ஆயலோட்டல் | āyal-ōṭṭal n. <>ஆயோ+. Scaring away of birds from the crops, by women shouting; பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை வெருட்டுகை. |
ஆயவியயம் | āya-viyayam n. <>ஆயம்+. Income and expenses; வரவு செலவு. |
ஆயனம் | āyaṉam n. <>hāyana. (நாநார்த்த.) 1. Ray; கிரணம். 2. A kind of paddy; |
ஆயனி | āyaṉi n. cf. Kātyāyaṉī, Dākṣāyaṇī. Durgā; துர்க்கை. (அக. நி.) |
ஆயாநெல் | āy-ā-nel n. <>ஆய்-+ஆ neg.+. Unsifted paddy; தூற்றாத நெல். (W.) |
ஆயாமம் | āyāmam n. <>āyāma. (நாநார்த்த.) 1. Length; நீளம். 2. Breadth; |
ஆயான் | āyāṉ n. <>ஆசான். 1. Father; தந்தை. Loc. 2. Elder brother; 3. Member of the Kārkātta-vēḷāḷa community; |
ஆயிரக்கிரணன் | āyira-k-kiraṇaṉ n. <>ஆயிரம்+. Sun; சூரியன். ஆயிரக்கிரணன் சென்ற திசையொடு . . . போக்கினானே (மேருமந். 370). |
ஆயிரங்கண்ணுப்பானை | āyiraṅ-kaṇṇu-p-pāṉai n. <>id.+கண்+. A painted pot, used by certain castes, in marriages; கல்யாணத்தில் உபயோகிக்கும் வர்ணப்பானை. Tinn. |
ஆயிரங்காய்ச்சி | āyiraṅ-kāycci n. <>id.+. Broom; துடைப்பம். (W.) |
ஆயிரங்காற்சடை | āyiraṅ-kāṟ-caṭai n. <>id.+கால்+. Broom; துடைப்பம். Loc. |
ஆயிரஞ்சோதி | āyira-cōti n. <>id.+. Sun; சூரியன். (W.) |
ஆயிரத்தளி | āyira-t-tali n. <>id.+. An ancient town in the Tanjore District; தஞ்சைஜில்லாவி லுள்ளதோர் ஊர். ஆயிரந்தளி கூடினவிடம் ஆயிரத்தளி (வீரசோ. தொகைப். 3). |
ஆயிரவருக்கம் | āyiravarukkam n. Panoply; உடற்கவசம். (W.) |
ஆயில் | āyil n. Ašōka tree; அசோகு. (நாமதீப.) |
ஆயிழை | āy-iḷai n. <>ஆய்+. The edge of a sickle; அரிவாளின் நுனி. (W.) |