Word |
English & Tamil Meaning |
---|---|
கடூழியச்சிறை | kaṭūḻiya-c-ciṟai n. <>கடு-மை +ஊழியம்+. Rigorous imprisonment; கடுங்காவல். (J.). |
கடை | kaṭai n. 1. Fatigue; சோர்வு. (அக. நி). 2. Way; 3. Pudendum muliebre; |
கடைக்காட்சி | kaṭai-k-kāṭci n. <>கடை+. Supervision; கண்காணம். (S. I. I. iii 372). |
கடைக்கூட்டு | kaṭai-k-kūṭṭu n. <>id.+. Management; காரியநிருவாகம். கடைக்கூட்டுசேவகப் பெருமாள் (M. E .R 598 of 16). (சம் .அக. Ms.) |
கடைக்கூட்டுத்தானத்தார் | kaṭaikkūṭṭu-t-tāṉattār n. <>கடைக்கூட்டு+. Temple authorities; கோயிலதிகாரிகள். (S. I. I. V. 512.) |
கடைக்கொம்பு | kaṭai-k-kompu n. <>கடை+. The edge of tank-bund; ஏரியின் கோடியிலுள்ள கரை. கீழக்கடைக்கொம்பு மேல மறுகாலுடைக்குதே (குருகூர்ப்பள். 31). |
கடைச்சி | kaṭaicci n. <>id. Fem. of கடைச்சன். The youngest girl of a family; கடைசியாகப் பிறந்த பெண். (யாழ். அக.) |
கடைசெறி | kaṭai-ceṟi n. <>id.+. Finger- ring; கைவிரலணி (சிலப். 6, 97, உரை) |
கடைஞ்சாணி | kaṭaicāṇi n. <>id. That which is last or remotest; கடைசியானது. கடைஞ்சாணி வயல். Tinn. |
கடைஞாணி | kaṭaiāṇi n. See கடைஞ்சாணி Nā. . |
கடைத்தொழில் | kaṭai-t-toḻil n. <>கடை+. A part of a pendant; பதக்கத்தின் உறுப்பு. பதக்க மாலை கணால் நாயக்கண்டம் க்ஷ அருகுகண்டம் க்ஷ கடைத்தொழில் உ ( S. I. I viii, 53). |
கடைநிலையெழுத்து | kaṭainilai-y-eḻuttu n. <>கடைநிலை+. (Gram.) Final letter of a word; சொல்லின் ஈற்றெழுத்து. (W.) |
கடைநீர் | katai-nīr n. <>கடை+. Water taken to a field which is to be irrigated last, opp. to talai-nīr; கடைசியாகயுள்ள நிலத்திற்குப் பாய்ச்சுந் தண்ணீர் (S.I. I. iii, 287). |
கடைப்பூண் | kaṭai-p-pūṇ n. <>id.+. Clasp of a necklace; ஆபரணத்தின் மூட்டுவாய். (நாமதீப.) |
கடைபொறுக்கி | kaṭai-poṟukki n. <>id.+. One who lives by picking up leavings of food; எச்சிற்பொறுக்கி. Nā. |
கடைமணி | Kaṭai-maṇi n.<>id.+. Bead attached to the tāli; தாலியுடன் சேர்த்தணியும் மணி. கட்டின தாலிக்குக் கடைமணி யில்லாதது போய் (பஞ்ச. திருமக. 1332.). |
கடைமுழுக்கு | kaṭai-muḻukku n.<>id.+. Bathing in the Cauvery at Mayavaram, on the last day of Aippaci; ஐப்பசிமாதத்துக் கடைநாளன்று மாயூரத்திலோடுங் காவிரியில் நீராடுகை. Loc. |
கடைமுளை | kaṭai-muḷai n.<>id.+. Peg at either extremity of a yoke; நுகக்காற் குச்சி. (எங்களுர், 91.) |
கடையந்தரம் | kaṭai-y-antaram n.<>id.+. End, extremity; கடைசி எல்லை. Pond. |
கடையழி - தல் | kaṭai-y-aḻi- v. intr. <>id.+. To diminish by degrees; தேய்தல். (யாழ். அக.) |
கடையன்பு | kaṭai-y-aṉpu n. <>id.+. Inferior kind of conjugal love of a woman evident only during sexual union; நாயகனைக் கண்டபோதும் பெயரைக் கேட்டபோதும் வசமழியாது கூடியகாலத்தில் வசமழிகையான அன்பு. (திருவுந்தி. 7, பக். 8.) |
கடையால் | kaṭaiyāl n. cf. கடகால். A vessel made of iron or wood, used for drawing water; தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc. |
கடையிலக்கம் | kaṭai-y-ilakkam n.<> கடை+. Final figures arrived at in an account or, computation; கணக்கின் முடிவு. பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிடலாகும் (பெரியபு. சேக். 51). |
கடையிறை | kaṭai-y-iṟai n. prob. id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 87). |
கடையீடு | katai-y-īṭu n.<>id.+. Final order of a king, as in making grants; அரசனது முடிவான உத்திரவு. உடையார் கடையீடும் வந்தமையில் (S. I. I. v, 312). |
கடையூறு | kaṭai-y-ūṟu n. <>id.+. Insurmountable difficulty; காரியமுடிவில் நீக்கமுடியாதபடி வருந்தடை. இதுக்கு வந்த கடையூறும் இடையூறு நிக்கி (Insc). |
கடையேடு | kaṭai-y-ēṭu n. <>id.+. Death warrant; மரணச்சீட்டு. யமராசன் விட்ட கடையேடு வந்தென் செயுமே (கந்தரலங். 87). |
கண் | kaṇ n. Grace; அருள். (அக.நி.) |
கண்கரித்தல் | kaṇ-karittal n. <>கண்+. Envy; பொறாமை. Collog. |
கண்காட்டி | kaṇ-kāṭṭi n. <>id+ காட்டு-. Master, superintendent; நிர்வாகி. (திவ். பெரியதி. 1,2,9, வ்யா பக். 84.) |