Word |
English & Tamil Meaning |
---|---|
கண்காட்டுவான் | kaṇ-kāṭṭuvāṉ n. <>id.+id. One who leads the blind; குருடர்களுக்கு வரிகாட்டுவோன் (S.I.I. viii, 381.) |
கண்காணி | kaṇ-kāṇi n. <>id.+. An ancient tax in kind, for supervision; மேற்பார் வையிடுதற்குரிய நெல்வரி. (S.I. I. i, 91). |
கண்காணிக்கணக்கர் முதல் | Kaṇkāṇi-k-kaṇakkar-mutal n. <>கண்காணி + கணக்கன்+. An ancient tax; பழைய வரிவகை.(S. I.I. vi, 33). |
கண்காரன் | kaṇ-kāraṉ n. <>கண்+. 1. Supervisor; மேற்பார்ப்போன். கரைதுறைகளேழிலுள்ள கண்காரரெல்லாம் (நெல்லிடு. 221). 2. One who assays coins, etc., shroff; 3. Shrewd person; |
கண்கூலி | kaṇ-kūli n. <>id.+. 1. An ancient tax; பழைய வரிவகை (S. I. I. iv, 122.) 2. Commission of the conductor of a chitfund; |
கண்கொழுப்பு | kaṇ-koḻuppu n. <>id.+. Arrogance; அகங்காரம் (யாழ். அக.) |
கண்சா - தல் | kaṇ-cā- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To lose freshness; பதனழிதல். 2. To fade; |
கண்சாடை | kaṇ-cāṭai n. <>id.+. A unit of time, as the twinkling of an eye; இமைப்பொழுது Pond. |
கண்செறியிடு - தல் | kaṇ-ceṟi-y-iṭu- v. intr. <>id.+செறி+. To fill, occupy completely; முழுதும் வியாபித்து அடைத்துக்கொள்ளுதல். கடலைக் கண்செறியிட்டாற்போலே பெரிய மந்தரபர்வதத்தை நட்டு (திவ். திருக்குறுந். 3, வ்யா.). |
கண்டக்குருகு | kaṇṭa-k-kuruku n. <>கண்டம்+. A disease of the neck; கழுத்து நோய்வகை. (பரராச. i, 254). |
கண்டகட்டு | kaṇṭakaṭṭu n. (Pros.) A kind of poem; பாவாகை. (யாப். வி. 511.) |
கண்டகத்தூணம் | kaṇṭaka-t-tūṇam n.<> கண்டகம்+.(Astrol.) The particular nakṣatra which when counted from mūlam gives the number which is the sum of the numbers obtained by counting up to mūlam from the nakṣatras in which the Sun and Mars respectively stand on a particular day; ஆதித்தன் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி அவ்வெண்«¢ணாடு செவ்வாய் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி வரும் எண்ணைக் கூட்டி அத்தொகையை மூலநட்சத்திர முதல் எண்ணி வந்த நட்சத்திரம். (விதான. குணாகுண. 37.) |
கண்டக துவராம் | kaṇṭaka-tuvāram n. <>id.+. (Anat.) Foramen spinale; வீணா தண்டத்தின் நடுவே செல்லுந்தொளை. (W.) |
கண்டகப்பிரபத்தி | kaṇṭaka-p-pirapatti n. <>kaṇṭaka+. (Vaiṣṇ.) An inferior kind of pirapatti; பிரபத்தியில் ஒர் இழிவானவகை. கண்டகப்பிரபத்தி செய்திருக்கச் செய்தேயும் (திவ். பெரியாழ். 2, 6, 7, வ்யா. பக் 377). |
கண்டகபலம் | kaṇṭaka-palam n. <>id.+. Jack fruit; பலாப்பழம். (சங். அக.) |
கண்டகம் 1 | kaṇṭakam n. <>kaṇṭaka. 1. Horripilation; புளகம் (யாழ். அக.). 2. Smithy; 3. Obstacle; 4. (Astrol). The particular nakṣatra which when counted from mūlam gives the same number as is obtained by counting up to mūlam from the nakṣatra in which the sun stands on a particular day; 5. Bamboo; |
கண்டகம் 2 | kaṇṭakam n. Collyrium, black pigment; அஞ்சனம். (சித். அக.) |
கண்டகன் | kaṇṭakaṉ n.<>kaṇṭaka Enemy; விரோதி. Collog. |
கண்டகாசனம் | kaṇṭakācaṉam n. <>kaṇṭaka+ašana. Camel; ஒட்டகம். (யாழ். அக.) |
கண்டகூணிகை | kaṇṭa-kūṇikai n. <>kaṇṭha-kūṇikā The Indian lute, vīṇai; வீணை. (யாழ் அக.) |
கண்டகோபாலன்மாடை | kaṇṭakōpālaṉ-māṭai n. An ancient coin, issued by the chief, Vijaya-gaṇdagōpāla; பழையநாணயவகை. (M.E.R. 385. of 1919.) |
கண்டங்கனம் | kaṇṭaṅkaṉam n. Long pepper; திப்பலி (சங். அக.) |
கண்டபத்திரம் | kaṇṭa-pattiram n. prob. khaṇda+. Award in a dispute; வழக்கைத் தீர்த் தெழுதுஞ் சீட்டு. Nā. |
கண்டபலம் | kaṇṭa-palam n. <>kaṇṭa+. Silk-cotton tree; இலவு. (சித் அக.) |
கண்டம் 1 | kaṇṭam n. <>khaṇda. A portion of the front hall, in a temple; கோயில் முக மண்டபப்பகுதி. (S. I. I. v, 236.) |