Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டூதி | kaṇṭūti n. cf. கண்டூரை. See கண்டூரை. (நாமதீப.) . |
கண்டூயம் | kaṇṭūyam n. prob. kaṇdūya. Stake for cattle to rub temselves against; ஆதீண்டுகுற்றி. (நாமதீப.) |
கண்டூரை | kaṇṭūrai n.<>kaṇdūrā. Cowhage; பூனைக்காலி (சங். அக.) |
கண்டெடங்கடத்தி | kaṇṭeṭaṅ-kaṭatti n. <>காண்+ இடம்+. One who is shifty in speech; சமயத்துக்குத் தகுந்தபடி பேசுகிறவன். Nā. |
கண்டெழுத்து | kaṇṭeḻuttu n. <>id.+. Land revenue settlement; அரசாங்க நிலத்தீர்வை யேற்பாடு. Nā. |
கண்டோட்டு | kaṇṭōṭṭu n. prob. id.+ஒட்டு-. Regulation of water for irrigation during periods of scarcity; தண்ணீர்த்தட்டான போது முறைப்படி நீர் பாய்ச்சுகை. Tinn. |
கண்ணகப்பை | kaṇ-ṇ-akappai n. <>கண்+. 1. A kind of ladle, made of cocoanut shell; தேங்காய்ச் சிரட்டையாற் செய்த அகப்பை. Loc. 2. Perforated ladle made of iron; |
கண்ணகற்று - தல் | kaṇ-ṇ-akaṟṟu- v. intr <>id.+. To wake up, as opening one's eyes; துயில் நீங்கி விழித்தல். அர்த்தராத்திரியிற் கண்ணகற்றி . . . நினைந்தருளு மெல்லைக்கண் (பாரத வெண். 154, உரை). |
கண்ணசாரம் | kaṇṇa-cāram n. <>krṣṇa-sāra. (நாநார்த்த). 1. Spotted antelope; கலைமான். 2. Square spurge; 3. Sissoo wood. |
கண்ணறு - தல் | kaṇ-ṇ-aṟu- v. intr. <>கண்.+. To depart; நீங்குதல். நெடுநாணுங் கண்ணற (கம்பரா. மிதிலைக். 45.) |
கண்ணறைத்தசை | kaṇṇaṟai-t-tacai n. <>கண்ணறை+. (Anat.) Cellular tissue; உடலிற் சிறு அறைகளாக அமைந்த தசை. Mod. |
கண்ணன் | kaṇṇaṉ n. cf. கரிசலாங்கண்ணி. A plant growing in wet places; கையாந்தகரை. (சங். அக.) |
கண்ணாடி | kaṇ-ṇ-āṭi n. <>கண்+. Glowworm மின்மினி (பச். மூ.) |
கண்ணாடிக்கள்ளி | kaṇṇāṭi-k-kaḷḷi n. <> கண்ணாடி+. A kind of spurge; கள்ளிவகை. Loc. |
கண்ணாடிக்கூத்தன் | kaṇṇāṭi-k-kūttaṉ n. prob. id.+. A kind of paddy; நெல்வகை. (குரு கூர்ப். 37.) |
கண்ணாணி 1 | Kaṇ-ṇāṇi n. <>கண்+நாண்-. Anus; குதம். விண்டுமுறைபாயுருக் கண்ணாணியாகும் (உடலறிவி. 5). |
கண்ணாணி 2 | kaṇ-ṇ-āṇi n. <>id.+ ஆணி. Touch-needle; உரையாணி. கண்ணாணியாகக் கண்டு தந்த பொன்னுக்கு (பாடு. 78, 2). |
கண்ணாமிண்டை | kaṇ-ṇ-ā-miṇṭai n. <>id.+ஆ-+. Eyeball; கண்விழி Loc. |
கண்ணார்வி - த்தல் | kaṇ-ṇ-ārvi- v. intr. <>id.+ஆர்-. To please the eye; கண்ணுக்கு இன்பமூட்டுதல். பெருங்கோயில் பலவுங்கட்டிக் கண்ணார்வித்த (திருத். பு. சா. 73). |
கண்ணாள் | kaṇ-ṇ-āḷ. n. <>id. Beloved woman; கண்ணாட்டி. (யாழ். அக.) |
கண்ணாளன் | kaṇṇāḷaṉ n. <>id.+ஆள்-. cf. கண்ணுளாளன் Painter, artist சித்திரக்காரன். (யாழ். அக.) |
கண்ணாறு | kaṇ-ṇ-āṟu n. <>id.+. Small hole or opening; சிறுதுவராம். மகதநாட்டுச் சித்திரவறைக் கண்ணாறுபோல (நீலகேசி, 272, உரை). |
கண்ணிக்கயிறு | kaṇṇi-k-kayiṟu n. <>கண்ணி+. String by which a bullock is fastened to the yoke; பூட்டாங்கயிறு. (எங்களுர், 91.) |
கண்ணிகை | kaṇṇikai n. prob. karṇikā. Flower-bud பூவரும்பு (யாழ். அக.) |
கண்ணிட்டுக்காணம் | kaṇ-ṇ-iṭṭu-k-kāṇam n. prob. கண்+இடு-+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 352.) |
கண்ணிமாங்காய் | kaṇṇi-māṅkāy n. <>கண்ணி+. Small and tender mangoes; மாவடு. Nā. |
கண்ணிலி | kaṇ-ṇ-ili n. <>கண்+. Ant; எறும்பு. (யாழ். அக.) |
கண்ணிவாய்க்கால் | kaṇṇi-vāykkāl n. <>கண்ணி+. Small channel; கிளைவாய்க்கால். Loc. |
கண்ணீர்க்குடை | kaṇṇīr-k-kuṭai n. cf. கண்ணீர்நடுக்குறை. Spreading hogweed; முக்கிரட்டை . (சித். அக.) |
கண்ணீர்ப்பாத்திரம் | kaṇṇīr-p-pāttiram n. <>கண்ணீர்+. (Anat.) Lachrymal vase; கண்ணீர் தங்கியிருக்கும் உள்ளுறுப்பு. Pond. |
கண்ணு - தல் | kaṇṇu- 5. v. tr. <>கண். See பார்த்தல். (நாமதீப.) . |
கண்ணுக்கறி | kaṇṇu-k-kaṟi n. <>id.+. Mutton consisting of goat's head with eyes; கண்ணோடு சேர்ந்த ஆட்டுமண்டை யிறைச்சி. கண்ணுக் கறியாகப் பார்த்து வாங்கி (மதி. க. ii, 199). |