Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணுப்பூளை | kaṇṇu-p-pūḷai n. <>id.+. Wool plant; பூளைவகை. Loc. |
கண்ணுளன் | kaṇṇuḷaṉ n. cf. கண்ணுள்வினைஞன். Smith; கம்மாளன். (அரு. நி.) |
கண்ணுளாளான் | kaṇ-ṇ-uḷ-āḷaṉ n. <>கண் +உள்-+. Flutist; குழல்வாசிப்போன். (சிலப். 5, 184, உரை.) |
கண்ணூடு | kaṇ-ṇ-ūṭu n. <>id.+. Attention கவனம் மூட்டை முதலான சாமான்களைக் கண்ணூடாய்ப் பார்த்திருந்து (மதி. க. ii 189). |
கண்ணெறி - தல் | kaṇ-ṇ-eṟi- v. intr. <>id.+. (யாழ். அக.) 1.To glance out of the corner of the eye; கடைக்கண்ணாற் பார்த்தல். 2. To like |
கண்ணேறு | kaṇ-ṇ-ēṟu n. <>id.+. Beauty that evokes the evil eye; திருஷ்டிபடத்தக்க அழகு. வெண்ணீ றெழுதிய கண்ணேறும் (சேக்கிழார்பு. 92). |
கண்ணொடு | kaṇ-ṇ-oṭu n. <>id.+ஒடு. An eye disease; கண்ணோய்வகை. (பரராச. i, 208.) |
கண்ணோவுப்பூண்டு | kaṇṇōvu-p-pūṇtu n. <>கண்ணோவு+. Red species of glory-lily; செங்காந்தள். (L.) |
கண்பரி - தல் | kaṇ-pari- v. intr. <>கண்+. To break at the joints; மூட்டறுதல். கானிமிர்த்தாற் கண்பரிய வல்லியோ(பெருந்தொ. 516). |
கண்பறை - தல் | kaṇ-paṟai- v. intr.<>id.+. To have dimmed vision. கண்ணொளி குறைதல். (சம். அக. Ms.) |
கண்பீலி | kaṇ-pīli n. <>id.+. A toe-ring; கால்விரலின் அணிவகை. Nā. |
கண்புதையல் | kaṇ-putaiyal n. <>id.+. Game of hide-and-seek; கண்ணாமூய்ச்சி. கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே (தேசிகப் 2,46). |
கண்பூர் - தல் | kaṇ-pūr- v. intr. <>id.+ பூரி-. To be satiated with seeing; கண்திருப்தியடைதல். (யாழ். அக.) |
கண்மங்குலம் | kaṇ-maṅkulam n. <>id.+மங்கு-. (யாழ். அக.) 1. Dimness of eyesight; பார்வைமங்குகை. 2. Long sight |
கண்மதியம் | kaṇ-matiyam n. <>id.+ மதி-. Rough estimate, made at sight; பார்வையாலிடும் மதிப்பு. (யாழ். அக.) |
கண்மாயம் | kaṇ-māyam n. <>id.+. Evil eye, causing disease or misfortune; திருஷ்டி தோஷம். வேற்கண்ணிக்கென்ன கண்மாயங் கலந்தது (மதுரைக்கோ. 98.) |
கண்மூக்கி | kaṇ-mūkki n. <>id.+ மூக்கு. Ant; எறும்பு. (நாமதீப.) |
கண்மூடி | kaṇ-mūṭi n. <>id.+ மூடு-. Blind person; குருடு. (யாழ். அக.) |
கண்வட்டக்கள்ளன் | kaṇvaṭṭa-k-kaḷḷaṉ n. <>கண்வட்டம்+. Counterfeiter of coins; கள்ளநாணயமடிப்பவன். (ஈடு, 1,9,8,ஜீ.) |
கண்வாட்டி | kaṇvāṭṭi n. Fem. of கண்வாளன். Wife மனைவி. (யாழ். அக.) |
கண்வாளன் 1 | kaṇvāḷaṉ n. <>கம்மாளன். Smith; கம்மாளன். (யாழ். அக.) |
கண்வாளன் 2 | kaṇ-v-āḷaṉ n. <>கண்+ஆளன். Husband; கணவன். (யாழ். அக.) |
கண்விளிம்பு | kaṇ-viḷimpu n. <>id.+. Eyelid; இமை. (நாமதீப.) |
கணக்கக்காணி | kaṇakka-k-kāṇi n. <>கணக்கன்+. Land granted as iṉām, To village karṇams; கிராமக்கணக்கருக்கு விடும் மானிய நிலம். (S.I.I.i,78.) |
கணக்கட்சரம் | kaṇakkaṭcaram n. <>கணக்கு+. Letters, used as a code; சங்கேத எழுத்து. Pond. |
கணக்கப்பேறு | kaṇakka-p-pēṟu n. <>கணக்கன்+. A tax in kind; நெல்லாயவகை. (S.I.I.iv, 195.) |
கணக்கமேரை | kaṇakka-mērai n. <>id.+. Fees in grain, given to the village accountant; கிராமக்கணக்கனுக்குச் சம்பளத்துக்கு ஈடாகக் கொடுக்குந் தானியம். (W.G.) |
கணக்கழிவு | kaṇakkaḻivu n. <>கணக்கு+. Injustice; முறைகேடு. கையர்செயுங் கணக்கழிவு (திருவையா. பு. சைவச். 9). |
கணக்கன் கோடாலி | kaṇakkaṉ-kōṭāli n. <>கணக்கன்+. Expert in accounts; கணக்கிற்சமர்த்தன். Nā. |
கணக்காயன் | kaṇakkāyaṉ n. prob. கணக்கு. Poet; கவிஞன். (நாமதீப.) |
கணக்கிலக்கை | kaṇakkilakkai n. <>id.+. A tax; வரிவகை. (S.I.I.v, 136.) |
கணக்குருவம் | kaṇakkuruvam n. <>id.+உருவம். Written memorandum of an adjusted account; அறுதியிட்ட கணக்குக்குறிப்பு. (W. G.) |