Word |
English & Tamil Meaning |
---|---|
கெடுபாதை | keṭu-pātai n. prob. கெடு+. A tax; வரிவகை. (S. I. I. viii, 214.) |
கெடுவி | keṭuvi n. <>கெடு-. cf. கெடுவான். A term of reproach; ஓர் இகழ்ச்சிமொழி. கெடுவிகாள்! நானன்றோ இவ்விஷயத்துக்கு யோக்யனாய் உங்களுக்கு உபதேசிக்கும்படியானேன் (திவ். பெரியதி. 1, 1, 8, வ்யா. பக். 44). |
கெண்டகாரணி | kēṇṭakāraṇi n. Indian jalap; சிவதை. (சித். அக.) |
கெண்டி | keṇṭi n. <>கெண்டி-. Portion which is cut; துண்டு. (யாழ். அக.) |
கெண்டு - தல் | keṇṭu- 5 v. intr. To be distressed; வருந்துதல். கெண்டிக் கெழுதகைமையில்லேன் கிடந்தூட (யாப். வி. பக். 351). |
கெண்டூரம் | keṇṭūram n. Rue; பாம்பு கொல்லி. (சித். அக.) |
கெண்டைக்காரல் | keṇṭai-k-kāral n. <>கெண்டை+. A kind of fish; மீன்வகை. உருக்கமுடைய கெண்டைக் காரல் (பறாளை. பள்ளு. 16). |
கெந்தகம் | kentakam n. See கெண்டூரம். (சித். அக.) . |
கெந்தகாரணை | kenta-tāraṇai n. prob.கெந்தம்+. One of nava-tāraṇai; நவதாரணையுள் ஒன்று. (திவா. Ms.) |
கெந்தப்பொடி | kenta-p-poṭi n. <>கந்தம்+. Love powder; சொக்குப்பொடி. பெட்டியிலே கெந்தப்பொடி வைத்தனுப்பினார் (தெய்வச். விறலிவிடு. 203). |
கெந்தலவணம் | kenta-lavaṇam n. <>கெந்தம்+. A kind of mineral salt; உப்புவகை. (யாழ். அக.) |
கெந்திகபாளை | kentika-pāḷai n. perh. gandhika+. Wormkiller; ஆடுதின்னாப்பாளை. (சித். அக.) |
கெந்தியுரிபாஷாணம் | kentiyuri-pāṣāṇam n. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (சித். அக.) |
கெய் | key n. A kind of fish; மீன் வகை. (யாழ். அக.) |
கெர்ப்பத்தலைவன் | kerppa-t-talaivaṉ n. prob. garbha+. Corrosive sublimate; சவ்வீரம். |
கெர்ப்பீகரி - த்தல் | kerppīkari- 11 v. intr. <>id.+. To form into an embryo; கருவாய் மாறுதல். சுத்தசடமான சுக்கிலங் கெர்ப்பீகரித்து (சொரூபசாரம், 61). |
கெர்விதம் | kervitam n. <>garvita. Words spoken in pride; செருக்குள்ள வார்த்தை. மாந்தர் கெர்விதங்கள் பேசிவந்து (பட்டினத்துப். பத்திரகிரி. பக். 343). |
கெருடமுகம் | keruṭa-mukam n. prob. garuda+. Being white in the nose only, as cattle; மாடுகளின் முகம் மட்டும் வெண்ணிற மாயிருக்கை. (பெரியமாட். 15.) |
கெலி | keli n. cf. கெலிசு. Pot-belly; பெருவயிறு. (யாழ். அக.) |
கெவலிகப்பூடு | kevalika-p-pūṭu n. perh. கவுளி+. A flowering parasitic plant; கொல்லைப் பல்லி. (சித். அக.) |
கெவிடு | keviṭu n. cf. கெவுடு. 1. Case fo talisman; அட்சரக்கூடு. (யாழ். அக.) 2. Compartments of a type case; |
கெவுளி | kevuḷi n. Red-coloured conch; சிவப்புச்சங்கு. (யாழ். அக.) |
கெவுளிச்செவ்விளை | kevuḷi-c-cevviḷai n. perh. gaurī+. A kind of cocoa-palm, தெங்கு வகை. (யாழ். அக.) |
கெளிற்றுமுள்ளி | keḷiṟṟu-muḷḷi n. <>கெளிறு+. Tackle used in catching keḷiṟṟu-miṉ; கெளிற்றுமீனைப் பிடித்தற்குரிய தூண்டில். Loc. |
கெற்பிரி - த்தல் | keṟpiri- 11 v. intr. To blaze; பற்றியெரிதல். (யாழ். அக.) |
கேகயம் | kēkayam n. Bow; வில். (அக. நி.) |
கேசராதனம் | kēcarātaṉam n. prob. kēsara+. A yogic posture; ஆசனவகை. (தத்துவப்.108, உரை.) |
கேசாங்காதனம் | kēcāṅkātaṉam n. prob. kēša+aṅga+. A yogic posture; ஆசனவகை. (தத்துவப். 107.) |
கேசுகம் | kēcukam n. A tuber; கிழங்கு வகை. (யாழ். அக.) |
கேஞ்சலிகை | kēcalikai n. 1. A tuber; கிழங்குவகை. (யாழ். அக.) 2. A Plant, Arum orinense; |
கேட்டவிவு | kēṭṭavivu n. <>கேடு+அவி-. (Jaina.) Condition in which fruits of certain karmas are destroyed and of some others are made innocuous; கருமங்கள் சில கெட்டும் சில உபசமமடைந்தும் நிற்கும் நிலை. கேட்டிற் கேட்ட விவுதன்கண் (மேருமந். 790). |