Word |
English & Tamil Meaning |
---|---|
கூலிச்சேவகன் | kūli-c-cēvakaṉ n.<>id.+. 1. Mercenary soldier; கூலிப்படையாளன். (M. E. R. 262 of 1925.) 2. Hired labourer; |
கூவரகு | kūvaraku n. cf. கேழ்வரகு. A kind of millet; காட்டுவரகு. (சித். வை.) |
கூவைக்கார் | kūvai-k-kār n. A kind of kār paddy; கார்நெல்வகை. (A.) |
கூவைச்சம்பா | kūvai-c-campā n. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (A.) |
கூழ் | kūḻ n. prob. குழம்பு-. Doubt, confusion; கலக்கம். தத்துவநூல் கூழற்றது (திவ். இராமாநுச. 65). |
கூழ்ப்பதம் | kūḻ-p-patam n. prob. கூழை+. Snake; பாம்பு. (அக. நி.) |
கூழாமணம் | kūḻāmaṇam n. Bit of cloth or piece of gunny, used by cooks; சமையற்காரர் உபயோகிக்கும் பிடிதுணி. Loc. |
கூழாள் | kūḻ-āḷ n. <>கூழ்+. One who sells himself for livelihood; உணவின் பொருட்டு எவர்க்கேனுந் தன்னை எழுதிக்கொடுப்பவன். கூழாட்பட்டு நின்றீர்களை (திவ். திருப்பல். 3). |
கூழான் | kūḻāṉ n. cf. கூழாங்கல். Salagram, a kind of stone found in the Gaṇdakī; கண்டகிக்கல். (யாழ். அக.) |
கூழை | kūḻai n. Drum; முரசு.(அக. நி.) |
கூழைத்தண்டுக்கீரை | kūḻai-t-taṇṭu-k-kīrai n. <>கூழை+தண்டு+. A kind of greens; கீரைவகை. (விவசா. 4.) |
கூற்றுநெல்லு | kūṟṟu-nellu n. perh. கூறு+. A tax in grain; தானியக் கடமைகளு ளொன்று. (S. I. I, v, 196.) |
கூறாப்பு | kūṟāppu n. perh. id. Gathering clouds; cloudy sky; கவிந்த மேகம். Tinn. |
கூறு - தல் | kūṟu- 5 v. tr. <>id. To divided; கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று (குறள், 386, மணக்.). |
கூறுகொள்(ளு) - தல் | kūṟu-koḷ- v. tr. <>id.+. To appropriate; சுவாதீனமாக்கிக் கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள் (விறலிவிடு. 883). |
கூனிக்குயம் | kūṉi-k-kuyam n. <>கூனி+. Sickle; அரிவாள். (அக. நி.) |
கூனைவண்டு | kūṉai-vaṇṭu n. perh. கூன்+. A kind of small insect; பூச்சிவகை. Loc. |
கெக்கரீசம் | kekkarīcam n. Red Indian water-lily; செங்கழுநீர். (சித். அக.) |
கெச்சட்டிகை | keccaṭṭikai n. <>T. gejja+அட்டிகை. A kind of ornament worn on the neck; கழுத்தணிவகை. Colloq. |
கெசகன்னிவாழை | keca-kaṉṉi-vāḻai n. prob.gaja+kanyā+. Abyssinian banana; மொந்தன்வாழை. (சித். அக.) |
கெசபூகம் | kecapūkam n. Dholl; துவரை. (சித். அக.) |
கெசராசினி | kecarāciṉi n. Black-berried feather foil; பூலா. (சித். அக.) |
கெசனிக்கீரை | kecaṉik-kīrai n. Smallest Indian amaranth; கீரைவகை. (சித். அக.) |
கெசாசனை | kecācaṉai n. <>gajāšana. Pipal tree; அரசு. (யாழ். அக.) |
கெட்டபேர் | keṭṭa-pēr n. <>கெடு-+. Infamy; dishonour; அவகீர்த்தி. Loc. |
கெட்டவார்த்தை | keṭṭa-vārttai n. <>id.+. Loc. 1. Obscene language; ஆபாசமான சொல். 2. See கெட்டபேர். |
கெட்டவாரி | keṭṭa-vāri n. perh. id.+. A kind of paddy; நெல்வகை. (மதி. கள. i, 6.) |
கெட்டழி - தல் | keṭṭaḻi- v. intr. <>id.+. Colloq. 1. To become loose in morals; ஆண் பெண்கள் வியபிசாரத்தால் ஒழுக்கங் கெடுதல். 2. To be ruined by extravagant expenditure; |
கெட்டித்தீர்வை | keṭṭi-t-tīrvai n. <>கெட்டி+. Assessment payable on lands cultivated with certain superior kinds of dry grain, e.g., cholam, ragi, etc.; சோள முதலியன விளையும் நிலங்களுக்குரிய தீர்வை. (R. T.) |
கெடாரம் | keṭāram n. <>கடிகாரம். Clock; கடிகாரம். (யாழ். அக.) |
கெடி - த்தல் | keṭi- 11 v. intr. perh. கெடி. To be afraid; பயப்படுதல். (யாழ். அக.) |
கெடு - தல் | keṭu- 6 v. intr. To lose one's way; to go astray; வழி தவறிப்போதல். கெடு மரக்கலம் கரைசேர்ந்தாற் போல (ஈடு, 1, 2, 3). |
கெடுதோஷி | keṭu-tōṣi n. <>கெடு-+ dōṣā. Heinous sinner, a term of reproach; படுபாவி. மாண்டா ருயிரளிக்கு மாமருந்தை வேரோடு கீண்டெறி வாரிந்தக் கெடுதோஷிக ளென்பார் (இரக்ஷ. சரி. 322). |