Word |
English & Tamil Meaning |
---|---|
உந்து 2 | untu n. prob. உந்து-. Cardamom husk; ஏலக்காய்த்தோல். (J.) |
உந்து 3 | untu n. part. <>உம். Variant of the ending உம் in rel. pple; பெயரெச்சவிகுதியாகிய 'உம்'மின் திரிபு. கூப்பெயர்க்குந்து (தொல். சொல். 294). |
உந்து 4 | untu n. Onom. term used in calling cows; பசுவை அழைக்கும் ஒலிக்குறிப்பு. (J.) |
உந்துரு | unturu n. <>unduru. Bandicoot; பெருச்சாளி. (பிங்.) |
உந்தூழ் | untūḻ n. prob. உந்து-+ஊழ்-. Large bamboo. See பெருமூங்கில். உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65.) |
உந்தை | untai n. <>உன்+. Your father; உன் அப்பன். தூதர் வந்தன ருந்தை சொல்லோடு (கம்பரா. பள்ளி. 2). |
உப்பக்கம் | u-p-pakkam n. <>உ4+. 1. Yonder, where the person addressed is, or that (intermediate) side; உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி (வள்ளுவமா. 21). 2. The back; |
உப்பங்கழி | uppaṅ-kaḻi n. <>உப்பு+கழி. 1. Backwater; காயல். 2. Salt-pan; |
உப்பங்காற்று | uppaṅ-kāṟṟu n. <>id.+. Sea breeze; கடற்காற்று. |
உப்பங்கோரை | uppaṅ-kōrai n. <>id.+. A sedge that grows only by the side of salt marshes; உவர்க்கழிகளிலே முளைப்பதான கோரைவகை. (M. N. A. D. ii, 170.) |
உப்பசம் | uppacam n. <>T. ubbasamu. 1. Asthma; சுவாசகாசநோய். Loc. 2. Swelling, as of the abdomen; |
உப்பட்டம் | uppaṭṭam n. [M. ūrppam.] White mangrove. See உப்புக்குட்டி. (M. M.) . |
உப்பட்டி | uppaṭṭi n. Sheaf; அரிக்கட்டு. (J.) |
உப்பட்டு | uppaṭṭu n. <>T. obbaṭlu. Cakes, pastry; போளிப்பணிகாரம். |
உப்பந்தரவை | uppan-taravai n. <>உப்பு+தரவை. Saline soil; உவர்நிலம். |
உப்பம்பருத்தி | uppam-parutti n. cf. உக்கம்பருத்தி. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceum; பருத்திவகை. (G. Sm. D. I, i, 226.) |
உப்பமைப்போர் | uppamaippōr n. <>உப்பு+அமை2-. Salt manufacturers; dwellers in maritime tracts; உமணர். (திவா.) |
உப்பர் | uppar n. <>id. See உப்பமைப்போர். (பிங்.) . |
உப்பரம் | upparam n. <>T. ubbaramu. Flatulent distention of the abdomen, tympanites; வயிற்றுப்பொருமல். (C.G.) |
உப்பரவர் | upparavar n. <>T. uppara. 1. A Telugu caste who are usually tank and well diggers, and road-workers, and who ordinarily bear the title mēstiri; குளமுதலிய அகழுந் தெலுங்கச்சாதியார். 2. A branch of Kuṟavas who deal in karu-vēppilai and style themselves Chetties; |
உப்பரிகாண்(ணு) - தல் | uppari-kāṇ- v. intr. <>upari+. [T. ubbarintsu, K. ubbarisu+.] To swell, increase in quantity, as old raw rice in boiling; அளசு மிகுந்து காணுதல். Loc. |
உப்பரிகை | upparikai n. cf. upa-kārikā. [T. uppariga, K. upparige.] See உபரிகை. ஆடகப்புரிசை யுப்பரிகை (மச்சபு. நைமிசா. 2). |
உப்பல் | uppal n. <>உப்பு-. [T. K. Tu. ubbu.] Distention, flatulence; ஊதிப்பெருக்கை. |
உப்பளநீலம் | uppaḷa-nīlam n. <>ut-pala+. Variety of sapphire; ஒருவகை நீலரத்தினம். (S. I. I. ii, 204, 63.) |
உப்பளம் | uppaḷam n. <>உப்பு+அளம். [T. uppaḷamu, M. uppaḷam.] 1. Salt-pans; உப்பு விளை நிலம். (பிங்.) 2. Saline land; |
உப்பளவன் | uppaḷavaṉ n. <>id.+ அளவன். Salt-maker; உப்பு விளைப்போன். |
உப்பளறு | uppaḷaṟu n. <>id.+ அளறு. Soil containing clay and sand impregnated with alkaline matters, generally found along the coasts; களிமண்ணும் உப்புமணலுங் கலந்த களர் நிலம். (M. M.) |