Word |
English & Tamil Meaning |
---|---|
தொகு - தல் | toku- 6 v. intr. 1. To conform, agree; ஒத்தல். உடன்மூவர் சொற்றொக்க (குறள், 589, உரை). 2. To be included; to be hidden; |
தொகைமொழி | tokai-moḻi n. <>தொகை+. (Rhet.) A figure of speech; பொருளணிவகை. (யாப். வி. 56.) |
தொங்கட்டம் | toṅkaṭṭam n. <>தொங்கு-. Pendant; தொங்கட்டான். Loc. |
தொங்கல்நடை | toṅkal-naṭai n. <>தொங்கல்+. Toddle; தளர்ந்த நடை. தொங்கல்நடையாண்பிள்ளைகாண் (வள்ளி. கதை. Ms.). |
தொங்காது | toṅku-kātu n. <>தொங்கு-+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (மாட்டுவை.) |
தொசம் | tocam n. <>dhvaja. Flag; கொடி. (யாழ். அக.) |
தொட்டிமாளிகை | toṭṭi-māḷikai n. <>தொட்டி+. Howdah; அம்பாரி. (தக்கயாகப். 468, உரை.) |
தொட்டுக்குளி | toṭṭu-k-kuḷi n. <>தொடு-+ Bathing in order to remove the pollution caused by touching unclean persons; அசுத்தரைத் தொடுதலால் நேருந் தீட்டுப்போக நீராடுகை. Loc. |
தொட்டுக்கொள் துடைத்துக்கொள்ளெனல் | toṭṭu-k-koḷ-tuṭaittu-k-koḷ-ḷ-eṉal n. <>id.+கொள்-+துடை-+. Expr. signifying bare sufficiency; பற்றியதும் பற்றாததுமாதற் குறிப்பு. Loc. |
தொட்டுண்(ணு) - தல் | toṭṭuṇ- v. tr. <>id.+. To enjoy, as of right; உரிமையாக அனுபவித்தல். கோத்தொட்டுண்ணப் பாலதெல்லாம் ... கோக்கொள்ளப்பெறாதே (S. S. I. ii, 521). |
தொடங்கு | toṭaṅku n. prob. தொடக்கு-. Fetters; கால்விலங்கு. Pond. |
தொடர் | toṭar n. <>தொடர்-. Earthen pot for melting metals; உலோகங்களை யுருக்க உதவும் மண்பாத்திரம். தொடரிலிட்ட ஈயம்போலே துடியாநிற்கும் (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4). |
தொடர்ச்சி | toṭarcci n. <>id. Denseness, closeness; செறிவு. (திவ். திருச்சந். 105, வ்யா. பக். 308.) |
தொடர்நாட்கள் | toṭar-nāṭkaḷ n. <>id.+. Running days, not excluding holidays; விடுதலை நாட்களைக் கழிக்காமற் கணக்கிடும் நாட்கள். (M. Navi. 122.) |
தொடர்வல்லி | toṭar-valli n. <>id.+. Iron chain; இரும்புச்சங்கிலித்தொடர். சயத்தொடர்வல்லியுமின்று தாம்விடுக்கும்படி மயங்க (பெரியபு. நின்றசீர். 5). |
தொடாக்காஞ்சி | toṭā-k-kāci n. <>தொடு-+ ஆ neg.+. 1. (Puṟam.) A theme describing the wife scaring away the devils which surround her wounded husband in the battlefield and fearing at the same time to touch him; போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) 2. (Puṟam.) A theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the bttlefield; |
தொடுகடல் | toṭu-kaṭal n. <>id.+. Eastern ocean; கீழ்கடல். குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6). |
தொடுதுணை | toṭu-tuṇai n. <>id.+. Help; உதவி. (யாழ். அக.) |
தொடுப்பு | toṭuppu n. <>id. Theft; களவு. தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று (திவ். பெரி யாழ். 2, 3, 9, வ்யா. பக். 297). |
தொடுவழக்கு | toṭu-vaḻakku n. <>id.+. False claim; கள்ளவழக்கு. (யாழ். அக.) |
தொடைநடுங்கி | toṭai-naṭuṅki n. <>தொடை +. Extremely timid person; coward; மிக அஞ்சுபவன். Colloq. |
தொடைப்பாடு | toṭai-p-pāṭu n. <>தொடு- +. Appendage, as candals, etc.; குடை பாதரட்சை முதலியன. இத் தொடைப்பாடெலாந் தீண்டலன்னெனத் தீண்டிய வந்தவோ (நீலகேசி, 527). |
தொண்டி 1 | toṇṭi n. <>தொண்டு. Maid-servant; தொண்டுசெய்பவள். (நாநார்த்த. 296.) |
தொண்டி 2 | toṇṭi n. prob. தொள்- Small garden; சிறுதோட்டம். Loc. |
தொண்டு | toṇṭu n. An ornament; அணி வகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப். 6). |
தொண்டுபட்டி | toṇṭu-paṭṭi n. <>தொண்டு +. Cattle-pound; மாட்டை அடைக்குங் கொண்டி. (எங்களூர், 20.) |