Word |
English & Tamil Meaning |
---|---|
தேவகுடிமை | tēva-kuṭimai n. perh. id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 115.) |
தேவசங்கு | tēva-caṅku n. <>id.+. Caṅka-niti, a treasure or Kubēra; சங்கநிதி. (யாழ். அக.) |
தேவடிமை | tē-v-aṭimai n. <>தே+. 1. Dancing-girl, as a servant of God; தாசி. (Pudu. Insc. 930.) 2. Maid-servant; |
தேவதாமரை | tēva-tāmarai n. <>தேவர்+. Patuma-niti, a treasure of Kubēra; பதுமநிதி. (யாழ். அக.) |
தேவதீர்த்தம் | tēva-tīrttam n. <>dēva+. 1. Water poured from the palm of the hand through the finger tips on the ground, to propitiate Dēvas, one of paca-tīrttam; பஞ்சதீர்த்தங்களு ளொன்று. (சைவச. பொது. 66.) 2. Sacred tank to the west of a šiva temple; |
தேவபண்டிதன் | tēva-paṇṭitaṉ n. <>id.+. Dhanvantari; தன்வந்தரி. (வேதாரணி. குளகே. 9.) |
தேவமனோகரி | tēva-maṉōkari n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
தேவமேரையாய் | tēva-mērai-y-āy adv. <>id.+ மேரை+. Divinely; திவ்வியமாய். Pond. |
தேவர் | tēvar n. <>dēva. (Jaina.) Celestials, of five classes, viz., pavaṇar, viyantarar, cōtiṭar, kaṟpar. vēmāṉiyar; பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் வேமானியர் என்ற ஐவகைத் தேவசாதியினர். (நீலகேசி, 87.) |
தேவரடியார் | tēvar-aṭiyār n. <>தேவன்+. Māhēšvaras, a sect among šaivaites; மாகேசுரசைவர். தேவரடியாராயுள்ள ஆண்டார்களே தெண்டித்து (S. I. I. vii, 399). |
தேவாதீனம் | tēvātīṉam n. <>id.+அதீனம். God's will; தெய்வசங்கல்பம். Pond. |
தேவாரம் | tēvāram n. A compartment in a mansion; மாளிகையில் ஒரு பகுதி. பெரியவுடையார் தேவாரத்தே கேட்டருளி (S. I. I. vii, 269). |
தேவானை | tēvāṉai n. <>dēva+. Dēvasēnā, a Consort of God Skanda; தெய்வயானை. தேவானைத் தாயார் திருக்கணருள் தந்திடும் (கதிரைமலை. காதல். 2). |
தேவிடு - தல் | tēviṭu- v. tr. <>தேவை +இடு-. To require; வேண்டுதல். நான் ஒருகால் தேவிடாநின்றேன் (ஈடு, 1, 10, 8). |
தேன்வாழை | tēṉ-vāḻai n. <>தேன்+. A kind of plaintain; வாழைவகை. Loc. |
தேனஞ்சு | tēṉ-acu n. <>id.+. Mixture of five delicious substances; பஞ்சாமிர்தம். தேனஞ் சாடிய தெங்கிள நீரொடு (தேவா. 1020, 10). |
தேனுகராகம் | tēṉuka-rākam n. prob. dhēnuka+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
தேஜம் | tējam n. Remainder; மிச்சம். Loc. |
தேஜமானியம் | tējamāṉiyam n. A tax payable in money; காசாயவகை. (S. I. I. viii, 151.) |
தைசசம் | taicacam n. <>taijasa. Metal; உலோகம். (யாழ். அக.) |
தைசதம் | taicatam n. prob. taiṣa. The zodiacal sign capricorn; மகரராசி. (யாழ். அக.) |
தைத்தியயுகம் | taittiya-yukam n. perh. daitya+. Cycle of four yugas; சதுர்யுகம். (யாழ். அக.) |
தைத்தியாகோராத்திரம் | taittiyākōrāttiram n. <>id.+ ahōrātra. Year; வருடம். (யாழ். அக.) |
தைப்புமுத்து | taippu-muttu n. perh. தை-+பூ+. A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 34.) |
தைலத்தோணி | taila-t-tōṇi n. <>தைலம்+. A longish tub for preserving dead body in medicated oil; எண்ணெய்த்தொட்டி. தைலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான். (கம்பரா. யுத்த. இராவணன்சோக. 61). |
தைவாகரி | taivākari n. <>daivākari. (யாழ். அக.) 1. Saturn; சனி. 2. Yama; |
தைவியம் | taiviyam n. <>daivya. Act of God; தெய்வச்செயல். (யாழ். அக.) |
தொக்கயம் | tokkayam n. cf. இடக்கியம். Flag; கொடி. தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு (மான்விடு. 96). |
தொக்குளவன் | tokkuḷavaṉ n. A subsect of Kampaḷattār; கம்பளத்தாருள் ஒருவகையான். (G. Tn. D. I, 373.) |
தொக்கைக்குன்றி | tokkai-k-kuṉṟi n. perh. தொகை+. Loss or waste in cultivation; சாகுபடி நஷ்டம். (S. I. I. v, 499.) |