Word |
English & Tamil Meaning |
---|---|
தொண்ணைத்தடி | toṇṇai-t-taṭi n. Stout stick or club; பெருந்தடி. Cm. |
தொதல் | total n. A confection; தித்திப்புப் பண்டவகை. (J.) |
தொதவல் | totaval n. See தொதல். (J.) . |
தொப்பி | toppi n. Left side of a mirutaṅkam; மிருதங்கத்தின் இடதுபக்கம். (கலை மகள், xii, 401.) |
தொம்பரம் | tomparam n. Cooking pot; சமையற்பானை. அந்த அரிசியைத் தொம்பரத்திற் போட்டுச் சமையல் செய்யுங்கள் (தமிழறி. 46). |
தொம்பரை | tomparai n. cf. தொம்பறை. Granary; நெற்குதிர். தொம்பரைக டோறுமுன்னாட்டாழ்வின்றி வைத்திடுநெற் றான்யமதை (பஞ்ச. திருமுக. 193). |
தொழிமரம் | toḻi-maram n. <>தொளி+. Board used to smoothen the ploughed surface of a nanja field for cēṟṟu-k-kāl cultivation; சேற்றுக்காலாக உழுது பின் நிலத்தைச் சமஞ்செய்ய உபயோகிக்கும் பரம்பு. Nā. |
தொழிற்கல்வி | toḻiṟ-kalvi n. <>தொழில்+. Technical education; தொழிற் பயிற்சிக்குரிய கல்வி. Mod. |
தொழிற்சொல் | toḻiṟ-col n. <>id.+. 1. (Gram.) Verb; வினைச்சொல். 2. (Gram.) Verbal noun; |
தொழிற்பட்டிகை | toḻiṟ-paṭṭikai n. <>id.+. A kind of woman's girdle; அரைப்பட்டிவகை. (S. I. I. ii, 16.) |
தொழிற்படுத்து - தல் | toḻiṟ-paṭattu- v. tr. <>id.+. To direct or exact, as work; ஏவுதல். (சி. போ. பா. அவை. பக். 15.) |
தொழிற்புலையர் | toḻiṟ-pulaiyar n. <>id.+. One who is considered an outcaste because of his base actions; கன்மசண்டாளர். கொலைத்தொழிலினை யுடையராகிய மாக்கள் தொழிற் புலையராகுவர் (குறள், 329, மணக்.). |
தொழுவை | toḻuvai n. prob. தொள். Pond, pool; மடு. தொழுவையம்புனலாடி (கலித். 30). |
தொழுனி | toḻuṉi n. <>தொழு-. 1. Woman fit to be worshipped; தொழுதற்குரியவள். தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக். வி. 753, உதாரணச். பக். 775). 2. Servant woman; |
தொள்ளை | toḷḷai n. cf. தொல்லை. [T. tolli.] Antiquity; பழமை. தொள்ளைமாநிலமெங்குந் துருவி (இரக்ஷணிய. பக். 11). |
தொளுக்கு | toḷukku n. Flabby person; ஊழற்சதை பிடித்தவன். Loc. |
தொற்றம்பு | toṟṟampu n. <>தொற்று-+. Arrow which causes only a surface wound; ஊடுருவிச் செல்லாமல் உடம்பின்மேலே படும் அம்பு. அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது (திவ். இயற். திருவிருத். 75, வ்யா பக். 385). |
தொற்று - தல் | toṟṟu 5 v. tr. To be connected with; பற்றியிருத்தல். இங்குக்கழிக்கிற அஹங்காரம் ஸூக்ஷ்மசரீரம் விடுமளவும் இவனைத் தொற்றிக்கிடக்கும் (ரஹஸ்ய. 959). |
தொற்றுத்தொடிசு | toṟṟu-t-toṭicu n. <>prob. தொற்று-+. Trifling error; சிறுபிழை. (யாழ். அக.) |
தொறுநிலை | toṟu-nilai n. <>தொறு+. Cow-shed; பசுக்கள் கட்டும் கொட்டம். எம்மூர் எல்லாச்சேரித் தொறுநிலையும் (S. I. I. vi, 167). |
தொற்றுப்பல் | toṟṟu-p-pal n. prob. தொற்று-+. Irregular, extra tooth; அதிகப்படியாகத் தோற்றும் பல். (திவ். பெரியாழ். 1, 1, வ்யா. பக். 13.) |
தொறுப்போ - தல் | toṟu-p-pō- v. intr. <>தொறு +. To be captured in herds, as cattle; ஆனிரை கவரப்படுதல். மாடு தொறுப்போகாநிற்க (Insc.). |
தொன்மை | toṉmai n. <>தொல். Nature; தன்மை. (சங்கற்பநிராகரணம், 18.) |
தொன்மொழி | toṉ-moḻi n. <>id.+. Proverb, maxim; பழமொழி. பொற்கிரிசேர் கருங்கொடியும் பொன்னிறமா மெனச்சொன்ன தொன்மொழியும் (பதினொராம். பட்டின. திருக்கழு. 40). |
தொனிக்கி | toṉikki n. <>E. Tonic; ஆரோக்கியமளிக்கும் மருந்து. (J.) |
தொனுவை - த்தல் | toṉu-vai v. intr. prob. dhvani+. To sound; தொனித்தல். (யாழ். அக.) |
தோகதவதி | tōkatavati n. <>dōhadavatī. Pregnant woman; கர்ப்பிணி. (யாழ். அக.) |
தோகைநோய் | tōkai-nōy n. A disease of cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவை.) |