Word |
English & Tamil Meaning |
---|---|
தெண்டில் | teṇṭil n. Blood-sucker; ஓணான். Loc. |
தெண்டு | teṇṭu n. cf. தண்டு. See தெண்டில். Loc. . |
தெண்டுச்சலாகை | teṇṭu-c-calākai n. prob. daṇda + šalākā. A surgical instrument; இரணவைத்தியத்தில் உபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.) |
தெத்தபடம் | tetta-paṭam n. <>dagdha + paṭa. Burnt cloth; எரிபட்ட துணி. தெத்தபடமானேண்டி தீயிரும்பினீரானேன் (பட்டினத்துப். பக். 244). |
தெத்து | tettu n. Yard-arm in a vessel or dhoney; பருமல். Pond. |
தெத்துமாற்றிப்போடு - தல் | tettumāṟṟi-p-pōṭu- v. intr. perh. தெற்று + மாற்று- + To break joint, in building walls, etc.; ஏறுவாசிவைத்துச் சுவர் கட்டுதல். Madr. |
தெந்தனம் | tentaṉam n. 1. Laziness; சோம்பல் 2. Delay; |
தெந்துக்கி | tentukki, n. perh. தேன் + தூக்கு-. Cuspidate-leaved calycine croton; வெள்ளைப்புனை. (L.) |
தெரிகவிச்செய்யுள் | teri-kavi-c-ceyyuḷ n. <>தெரி- + கவி+. Anthology of poems; பல நூல்களினின்று பொறுக்கியெடுக்கப்பட்ட செய்யுட்களின் தொகுதி. Pond. |
தெரிமானனப்புள் | terimāṉaṉa-p-puḻ n. prob. தெரிமா + ஆனனம்+. Owl; ஆந்தை. (யாழ். அக.) |
தெலுங்குக்கட்டு | teluṅku-k-kaṭṭu n. <>தெலுங்கு+. Māmpaḻa-k-kaṭṭu, a mode of wearing the saree; மாம்பழக்கட்டு. Loc. |
தெலுங்குச்சிற்றாடை | teluṅku-c-ciṟṟāṭai n. <>id.+. See தெலுங்குக்கட்டு. . |
தெவிட்டு - தல் | teviṭṭu- 5 v. tr. To consider, think; நினைத்தல். வர்த்தக சம்பாதனையிற் சிந்தைவைத்தே னென்று தெவிட்டாதீர் (பஞ்ச. திருமுக. 1124). |
தெழி - த்தல் | teḻi- 11 v. tr. To thresh; மிதித்துழக்குதல். நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களை (நன். 101, உரை). |
தெளிநீர் | teḷi-nīr n. <>தெளி-+. Clear solution; ஒரு பண்டத்தைக் கரைத்துத் தெளிய வைத்து வடித்த நீர். (இராசவைத். 80, உரை.) |
தெளிவாள் | teḷi-vāḷ n. <>id.+. Sharp sword; கூர்வாள். இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச்சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு (ரஹஸ்ய. 602). |
தெளிவி - த்தல் | teḷivi- 11 v. tr. Caus. of தெளி-. To appease; சாந்தப்படுத்துதல். பகவானோடு எதிரம்பு கோத்த ருத்ரனை ப்ரஹ்மா தெளிவித்து விலக்க (ரஹஸ்ய. 609). |
தெளிவில்புகழ்ச்சி | teḷivil-pukaḻcci n. <>தெளிவு + இல் neg.+. (Rhet.) A figure of speech, in which there is apparent censure but veiled praise; பழிப்பதுபோல் புகழ்வதாகிய அணி. (வீரசோ. அலங். 14, உரை.) |
தெளிவு | teḷivu n. <>தெளி-. One of pāṭaṟ payaṉ; பாடற்பயன்வகை. (சிலப். 3, 16, உரை.) |
தெற்றுரை | teṟṟurai; n. <>தெற்று-+. Inconsistent speech; மாறுபடுமொழி. தெற்றுரை செய்து தியக்கமுற்று (பிரபோதசந். 11, 19). |
தெறிசோறு | teṟi-cōṟu n. <>தெறி-+. Spoon-drift; உண்கலத்தினின்று சிதறிவிழுஞ் சோற்றுப் பருக்கை. Pond. |
தெறிப்பு | teṟippu n. <>id. Pond. 1. Rocket; அதிர்வெடி. 2. Fillip; |
தென்னரங்கன்சம்பா | teṉ-ṉ-araṅkaṉcampā n. <>தெற்கு + அரங்கன்+. A kind of campā paddy; சம்பாநெல்வகை. தென்னரங்கன்சம்பா திருக்குறுங்கை நம்பிசம்பா (நெல்விடு. 183). |
தேக்கம் | tekkam n. <>தேங்கு-. 1. Obstruction; தடை. தேக்கமொன்று மிலன் (திவ். பெரியாழ். 2, 9, 3). 2. Fear; |
தேங்கனி | tēṅ-kaṉi n. <>தெங்கு+. Coconut; தேங்காய். தேங்கனியுங் கொண்டுவந்து சீராக வைத்தாராம். (கோவ. க. 65). |
தேங்காய்கட்டியடி - த்தல் | tēṅkāy-kaṭṭiy-aṭi- v. tr. <>தேங்காய் + கட்டு-+. To give trouble; to vex, worry; தொந்தரவுசெய்தல். Loc. |
தேங்காய்ப்பாயசம் | tēṅkāy-p-pāyacam n. <>id.+. A sweet preparation with coconut pulp; தேங்காய்ப்பாலைச் சேர்த்துச் செய்த பாயசம். Loc. |
தேங்கு - தல் | tēṇku- 5 v. tr. cf. தியங்கு-. To be afraid; அஞ்சுதல். நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடையவனல்லன் (திவ். பெரியாழ். 2, 9, 3. வ்யா. பக். 457). |