Word |
English & Tamil Meaning |
---|---|
துர்வயாகம் | turvāyakam n. <>durvācaka. Abusive language; வசவு. பிராமணரைத் துர்வாயகம் பறைகில் (T. A. S. iii, 195). |
துர்வியாதி | tur-viyāti n. <>துர்+. Venereal disease; துர்நடத்தையால் உண்டாகும் நோய். Colloq. |
துரந்தரயோகம் | turantara-yōkam n. <>dhurantara+. An auspicious combination of planets, which indicates victory; செய்ததைக் குறிப்பதான ஒரு கிரகநிலை யோகம். கிட்டிவந்ததுமக்குத் துரந்தரயோகம் (பெண்மதிமாலை, பக். 21). |
துரஸ்து | turastu n. <>Persn. durust. Repair, good condition; சீர்கெடா நிலை. Colloq. |
துராதுரை | turāturai n. <>துரை+. Overlord, lord of lords; துரைகளுக்கெல்லாம் அதிபதி. துராதுரைக் கிணையுண்டோடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 50). |
துராயுதம் | tur-āyutam n. prob. dur-ākrta. Injustice; அநீதி. (யாழ். அக.) |
துரியம் | turiyam n. perh. druta. Quickness; விரைவு. இதென்ன துரியம் (தெய்வச். விறலி விடு. 243). |
துரு | turu n. Recital of a Vēdic text, etc., by a disciple following his preceptor's lead; வேதமுதலியன ஓதுஞ் சந்தைவகை. சாகையிலும் கற்பத்திலும் கணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8). |
துருக்கநாட்டுமணி | turukka-nāṭṭu-maṇi n. <>துருக்கம் + நாடு+. Emerald; மரகதம். (யாழ். அக.) |
துருத்திவாணம் | turutti-vāṇam n. <>துருத்தி+. A kind of rocket; வாணவகை. (W.) |
துருவசக்கரம் | turuva-cakkaram n. <>துருவம்+. Polar circles; பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi. 57.) |
துரைப்பெண் | turai-p-peṇ n. <>துரை+. Lady, noble woman; சீமாட்டி. தொழுது மதன்போற்றுந் துரைப்பெண் (அழகியநம்பியுலா, 136). |
துரைமின்னற்பொன் | turai-miṉṉaṟpoṉ n. <>id.+ மின்னல்+. A coin; நாணயவகை. (M. E. R. 506 of 1925.) |
துலங்கு - தல் | tulaṅku- 5 v. intr. <>துளங்கு -. To be uprooted; நிலைகெடுதல். துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2). |
துலாக்கூலி | tulā-k-kūli n. prob. துலா+. A kind of tax; வரிவகை. (T. A. S. ii, 82.) |
துலாபாரவரி | tulāpāra-vari n. <>துலாபாரம்+. A tax; வரிவகை. (S. I. I. vii, 403.) |
துவரைச்சிவப்பிறுங்கு | tuvarai-c-civappiṟuṅku n. <>துவரை + சிவப்பு+. A kind of maize or great millet; சோளவகை. (விவசா. 3.) |
துவளம் | tuvaḷam n. cf. தோவாளம். Parapet wall of a well; கிணற்றின் கைப்பிடிச்சுவர். Loc. |
துவனை | tuvaṉai n. <>dhvani. cf. துவனி. Noise; ஓசை. (யாழ். அக.) |
துவா | tuvā n. <>Arab. duā. Prayer; தொழுகை. Loc. |
துவிபதை | tuvipatai n. <>dvi-pada. A kind of musical composition; இசைப்பாவகை. கட்கா துவிபதை திரிபதை தண்டகம் முதலியன (கோபாலகிருஷ்ணபாரதி. 86). |
துவைதி | tuvaiti n. <>dvaitī nom. sing. of dvaitin. Follower of the doctrine of šrī Madhvācārya; துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவன். |
துளப்பு | tuḷappu n. Belly; வயிறு. பாழியிற் பிணங்களும் துளப்பெழப் படுத்தியே (தக்கயாகப். 376). |
துளர் | tuḷar n. <>துளர் -. Weeding-hook; களைக்கொட்டு. (திவ். பெரியதி. 8, 7, 3.) |
துளிரிக்கெண்டை | tuḷir-keṇṭai n. <>துளிர்+. White mullet; பாற்கெண்டை. Loc. |
துளும்பு - தல் | tuḷumpu- 5 v. intr. To shine; to irradiate; சோதிவிடுதல். மருளிநின்று துளும்பவே (தக்கயாகப். 254). |
துளையரியம் | tuḷai-y-ariyam n. perh. துளை + ஆர்- + இயம். Trumpet, horn; ஊதுகொம்பு. (யாழ். அக.) |
துறவன் | tuṟavaṉ n. <>துறவு. Ascetic; துறவி. Pond. |
துறுப்புக்கூடு | tuṟuppu-k-kūṭu n. cf. துருப்புக்கூடு. Unwinnowed heap of grain; தூற்றாப் பொலி. (திவ். அமலனாதி. அவ. பக். 14.) |
துன்னம் | tuṉṉam n. A tree; ஒருவகை மரம். Pond. |
துன்னாரம் | tuṉṉāram n. <>துன்னு-. Tailoring; தைத்தற் றொழில். (நீலகேசி, 280.) |
துன்னீர் | tuṉṉīr n. prob. துர்நீர். Spittle; எச்சில். (யாழ். அக.) |
துஜாவந்தி | tujāvanti n. <>dvajāvanti. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 55.) |