Word |
English & Tamil Meaning |
---|---|
நடுவுநிலைமை | naṭuvu-nilaimai n. <>நடுவு+. Quietist sentiment, one of nava-racam, q.v.; நவரசங்களுள் ஒன்றான சாந்தம். (தொல். பொ. 245, இனம்.) |
நடுவெழுத்தலங்காரம் | naṭu-v-eḷuttalaṅ-kāram n. <>நடுவெழுத்து+. (Rhet.) A variety of cittra-kavi; சித்திரகவிவகை. |
நடுவெழுது - தல் | naṭu-v-eḷutu- v. tr. <>நடு+. To record impartially; பட்சபாதமின்றி எழுதுதல். நன்றுந் தீதுந் தெரிய நடுவெழுதுவார் கணக்கர். (சித். நாய. 2). |
நடை | naṭai n. <>நட-. Pandal erected throughout the route of a procession; நடைப்பந்தல். நடைநிழ லவைகெட (இரகு. திக்குவி. 82). |
நடைகேளிக்கை | naṭai-kēḷikkai n. <>நடை+. performance of a dancing-girl while moving along with a procession; ஊர்வலத்தில் நடந்துகொண்டே செய்யும் நர்த்தனம். (கோயிலொ. 95.) |
நடைச்சக்கரவத்து | naṭai-c-cakkara-vattu n. <>id.+. Grandest style of walking; உத்தமமான நடை. (திவ். பெரியதிரு. 8, 2, 6, வ்யா. பக். 1433) |
நடைத்தூண்டில் | naṭai-t-tūṇṭil n. <>id.+ An instrument of torture for prolonging the agonies of a victim; சித்திரவதைக்குரிய கருவிவகை. (நீலகேசி. 541, உரை) |
நடைப்பிணி | naṭai-p-piṇi n. <>id.+. Long-persisting illness; chronic disease' நாட்பட்ட வியாதி. Loc. |
நடையாடு - தல் | naṭai-y-āṭu- v. intr <>id.+. To abound; to be in abundance; மிகுந்திருத்தல். நிர்விகார சித்ததையும் ... ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478). |
நடையிடு - தல் | naṭai-y-iṭu- v. intr. <>id.+. To walk; நடத்தல். அவ்விடத்தில் நில்லாதே கடுக நடையிட்டு நான் சாப்பிடும்படி வாராய் (திவ். பெரியாழ். 2, 8 9, வ்யா. பக். 440.) |
நடைவழிப்பாலம் | naṭai-vaḻi-p-pālam n. <>id+வழி+. Foot-bridge; மனிதர் நடந்து செல்வதற்குரிய பாலம். (C. E. M.) |
நடைவழு | naṭai-vaḻu n. <>id.+. (Poet.) A defect in versification; செய்யுட்குற்றங்களுளொன்று. (யாப். வி. 525.) |
நண்டுக்கலை | naṇṭukkalai n. A kind of plantain; வாழைவகை. Loc. |
நத்தவரி | natta-vari n. prob. நத்தம்+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 122) |
நத்து | nattu n. <>நத்து-. Desire; விருப்பம். நான் நத்தாக (திருப்புகழ்த். 84) |
நதிக்குதிரை | nati-k-kutirai n. <>நதி+. Hippopotamus; நீர்யானை. Pond. |
நந்தபாலம் | nantapālam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத். ராக. பக், 302.) |
நந்தவனப்புறம் | nantavaṉa-p-puṟam n. <>நந்தவனம்+. Land for a flower-garden of a temple; நந்தவனத்திற்கு விடப்பட்ட நிலம். (S. I. I. iii, 302.) |
நந்தன் | nantaṉ n. 1. An ancient coin; பழைய நாணய வகை. (சரவண. பணவிடு. 58.) 2. A kind of plantain; |
நந்தனம் | nantaṉam n. <>nandana. Pleasure; சந்தோஷம். நந்தன முறுவதிந்த நகரம் (விநாயகபு. திருந. 128.) |
நந்திபெம்மான் | nanti-pemmāṉ n. <>நந்தி+. God šiva; சிவபிரான். (நாமதீப. 1,1.) |
நப்பிளித்து - தல் | nappiḷittu- v. intr. <>நப்பு+இளி-. To speak gaily; சிரித்து விநோதமாகப் பேசுதல். (திவ். நாய்ச். 14, 7, உரை.) |
நபுஞ்சகவேதம் | napucaka-vētam n. <>napumsaka-vēda. (Jaina) The fault which consists in the desire of a neuter for the companionship of another neuter; ஓர் அலி மற்றோர் அலியின் நட்பை விரும்புவதான தோஷம். (சீவக. 3076, உரை.) |
நம்பிக்கைக்கேடு | nampikkai-k-kēṭu n. <>நம்பிக்கை+ .Untrustworthiness; நம்பிக்கையின்மை. Pond |
நம்பிக்கைப்பட்டயம் | nampikkai-p-paṭṭayam n. <>id.+. Deed assuring the performance of an act; உறுதிப்பத்திரம். (M.E.R. 310 of 1916-B.) |
நம்பிக்கைப்பத்திரம் | nampikkai-p-pattiram n. <>id.+. Credentials, as of an ambassador; ஒருவன் மெய்யான தூதுவனெனக் காட்டும் உறுதிச்சீட்டு. pond. |
நம்பிக்கைப்பிசகு | nampikkai-p-picaku n. <>id.+. See நம்பிக்கைக்கேடு. Pond. . |
நம்பிக்கைமோசம் | nampikkai-mōcam n. <>id.+. Breach of trust; நம்பிக்கைத் துரோகம். Loc. |