Word |
English & Tamil Meaning |
---|---|
நல்லெருமை | nal-l erumai n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Cg. 689.) |
நல்வழிக்காலன் | nal-vaḻi-k-kālaṉ n. <>id.+வழி+. A person who brings luck; அதிர்ஷ்டக்காலன். (ஈடு, 7, 9, 9, ஜீ) |
நல்வாய்செய் - தல் | nal-vāy-cey- v. tr. <>id.+வாய்+. To bless; ஆசிகூறுதல். (கூர்மபு. 399, 30) |
நல்வாய்மை | nal-vāymai n. <>id.+. (Buddh.) Right speech; பழுதில்லாத வார்த்தை. (மணி. 30, 179, உரை.) |
நல்வாழ்க்கை | nal-vāḻkkai n. <>id.+. (Buddh.) Right living; பழுதற்ற வாழ்வு. (மணி. 30, 179, உரை) |
நல்வெள்ளங்கு | nal-veḷḷaṅku n. <>id.+. Bastard rosewood; காட்டுப்பச்சிலை. (L.) |
நலக்கு - தல் | nalakku- 5 v. intr. prob. நலம். To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய் நலக்கு மிறை (திருவானைக். புராணவர. 41). |
நலம் | nalam n. <>நன்-மை. Virtue; அறம். நலமுழு தளைஇய புகரறு காட்சி (பரிபா. 1, 45). |
நலம்புனைந்துரைத்தல் | nalam-puṉain-turaittal n. <>நலம்+. (Akap.) Theme praising the beauty of one's lady-love; நலம்பாராட்டல். (குறள், 112, அதி.) |
நலுக்கம் | nalukkam n. <>நலுங்கு-. Pressure; நலிவு. கர்ப்பத்திலிருக்கிற பிள்ளைகளுக்கு நலுக்கம் வாராதபடி (திவ். பெரியாழ். 3, 2, 8, வ்யா. பக். 550). |
நலுங்கு - தல் | naluṅku- 5 v. intr. cf. நலங்கு-. 1. To slip off; நெகிழ்தல். கலைகள் அவிழ்ந்தவிழ்ந்து நலுங்க (கனம்கிருஷ்ணையர், 107). 2. To become lean; 3. To be distressed; |
நவகிருத்தியம் | nava-kiruttiyam n. <>nava+. Discovery; புதிதாய்க்கண்டது. Pond. |
நவதாலி | nava-tāli n. <>navan+. The tāli tied round the neck of girls, on the occasion of viḷakkiṭu-kalyāṇam, in propitiation of nava-k-kirakam; நவக்கிரகசாந்தியாக விளக்கிடு கல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒருவகைத்தாலி. Loc. |
நவநிதி | nava-niti n. <>id.+. (Jaina.) The nine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai, makā-kāḷai, carvarattiṉam; வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவகம். Ms.) |
நவநீதம் | navanītam n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
நவமை | navamai n. <>நவை. Defect, fault; குற்றம். நவமை நீங்கிய நற்றவன். (கம்பரா. அகத். 31) |
நவர் | navar n. Wetness; ஈரம். நவராயிருக்கிறது. Loc. |
நவனாலி | navaṉāli n. Corr. of நவதாலி. Loc. . |
நவார்ப்பட்டை | navār-p-paṭṭai n. <>Persn. nawār+. Multi-coloured tape; பலநிறமான பட்டை. (R.) |
நவிர் | navir n. See நவமை. நவிரெறி நலத்தினாடி (இரகு. குறைகூறு. 4) . |
நவிர் - தல் | navir- 4 v. intr. To be torn; பீறுதல். நுண்ணவி ரறுவை (சீவக. 2010). |
நவிரெழுசங்கு | navir-eḷu-caṅku n. <>நவர்+எழு-+. Conch with thorn-like points; முட்சங்கு. (சங். அக.) |
நவிரை | navirai n. cf. நவரை. A kind of paddy; நெல்வகை. (S. I. I. vii, 51.) |
நவை - த்தல் | navai- 11 v. tr. To dispossess, take away; அபகரித்தல். பலகள்வர் நவையாரால் (நீலகேசி, 273.) |
நளினாபதி | naḷiṉāpati n. <>nalinā+. Viṣṇu; திருமால். (பாரத. ஐந்தாம். 14.) |
நற்கடைப்பிடி | naṟ-kaṭai-p-piṭi n. <>நன்-மை+. (Buddh.) Ripe-mindedness; பழுதற்ற சிந்தனை. (மணி. 30, 179, உரை.) |
நற்காசு | naṟ-kācu n.<>id.+. Current coin; செல்லுங்காசு. அன்றாடு நற்காசினால் (Pudu. Insc. 319) |
நற்காட்சி | naṟ-kāṭci n. <>id.+. (Buddh.) Right view; பழுதில்லாத கருத்து. (மணி. 30, 179 உரை.) |
நற்காலம் | naṟ-kālam n. <>id.+. 1. Prosperous time; சுபிட்சகாலம். நற்கால வற்காலமெல்லாம் (S. I. I. viii, 8) 2. (Jaina) One of six divisions of time; |
நற்கிடா | naṟ-kiṭā n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (M. E. R. 1913, p. 22) |