Word |
English & Tamil Meaning |
---|---|
நற்சீவன் | naṟ-cīvaṉ n. <>id.+. Life breath; பிராணாதாரம். என்னுடைய நற்சீவனானது திருநாபீகமலத்தன்றோ வென்கிறார் (திவ். அமலனாதி. 3,வ்யா.). |
நற்செய்கை | naṟ-ceykai n. <>id.+. (Buddh.) Right action; பழுதற்ற செய்கை. (மணி. 30, 179, உரை). |
நற்பசு | naṟ-pacu n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (An. Dec. 344.) |
நற்பவழம் | naṟ-pavaḻam n. <>id.+. Genuine coral; சாதிப்பவழம். Loc. |
நற்புடை | naṟ-puṭai n. <>id.+. Good quality; நல்ல தன்மை. (நாலடி, 212.) |
நற்றீக்காலம் | naṟṟi-k-kālam n. <>id.+. தீ+. (Jaina.) One of six divisions of time; காலவகை ஆறனு ளொன்று. (யாப். வி. 532.) |
நறுக்காய் | naṟukkāy adv. prob. நறுக்கு-. Properly; நேர்மையாய். நறுக்காய் வாங்கு. Loc. |
நறுக்குமீசை | naṟukku-mīcai n. <>நறுக்கு+. Moustache trimmed in a particular way; மீசைவகை. Colloq. |
நறுக்கெனல் | naṟukkeṉal n. Expr. of quickness; விரைவுக்குறிப்பு. நறுக்கென்று வேலையை முடித்தான். |
நறுநாட்டியம் | naṟunāṭṭiyam n. Fastidiousness; நொறுநாட்டியம். Loc. |
நறும்பண்ணை | naṟum-paṇṇai n. <>நறுமை+. A kind of greens, Celosia odosatta; கோழிக்கீரைவகை. Pond. |
நறும்பூ | naṟum-pū n. <>id.+. Fresh flower; நாண்மலர். (S. I. I. vii, 318.) |
நறூஸ் | naṟūs n. A kind of pomegranate; மாதுளைவகை. Loc. |
நன்கு | naṉku n. <>நன்-மை. That which is good; இதம். இதுக்கு நன்குவேண்டுவார் (S. I. I. viii, 354). |
நன்குமதிப்பு | naṉku-matippu n. <>நன்கு+. Esteem; கௌரவம். Loc. |
நன்மச்சுனன் | naṉ-maccuṉaṉ. n. <>நன்-மை+. Son of one's maternal uncle; நல்லம்மான் புதல்வன். (S. I. I. ii, 439.) |
நன்மதிப்பு | naṉ-matippu n. <>id.+. See நன்குமதிப்பு. Loc. . |
நன்முயற்சி | naṉ-muyaṟci n. <>id.+. (Buddh.) Right effort; பழுதற்ற முயற்சி. (மணி. 30, 179, உரை.) |
நன்றிநடு | naṉṟi-naṭu n. <>நன்றி+. Equity; justice; நியாய முறை. நாயன்மாரே கேளும் நன்றிநடு விலையோ (தெய்வச். விறலிவிடு. 484). |
நன்னற்காலம் | naṉṉar-kālam n. <>நன்-மை + நல்+. (Jaina.) One of six divisions of time; காலவகை ஆறனு ளொன்று. (யாப். வி. 532.) |
நனவாரித்தாக்கம் | naṉavārittākkam n. A disease of cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவை. 80.) |
நஷ்டஈடு | naṣṭa-īṭu n. <>நஷ்டம்.+. See நஷ்டபரிகாரம். Loc. . |
நஷ்டபரிகாரம் | naṣṭa-parikāram n. <>id.+. Compensation for loss; ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு செய்கை. Pond. |
நக்ஷத்திரத்தியாச்சியம் | nakṣattira-t-tiyācciam n. <>nakṣatra+. Inauspicious period of time in the duration of a nakṣatra; நக்ஷத்திரகாலத்துள் அசுபவேளை. (பஞ்.) |
நக்ஷத்திரபதம் | nakṣattira-patam n. <>id.+. The region of the stars; நட்சத்திரபதவி. சந்திரபதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டிறே நக்ஷத்திரபதம் (திவ். திருநெடுந். 5, வ்யா.). |
நாக்கடைப்பன் | nākkaṭaippaṉ n. <>நாக்கு+. A disease of cattle; மாட்டுநோய் வகை. (மாட்டுவை.) |
நாக்கரணை | nākkaraṇai n. <>id.+. A disease of the tongue; நாக்குநோய்வகை. (பரராச. i, 226.) |
நாக்குமேற்றாளி | nākku-mēṟṟāḷi n. <>id.+. A disease of the tongue; நாக்கு நோய்வகை. (பரராச. i, 226.) |
நாக்கொட்டி | nākkoṭṭi n. <>நாக்கு + ஒட்டு-. A disease of the tongue; நாக்கு நோய்வகை. (பரராச. i, 226.) |
நாகசுரவராளி | nāka-cura-varāḷi n. <>nāga + svara+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
நாகத்தல்லி | nāka-t-talli n. prob. id.+. A kind of fragrant substance; வாசனைப்பண்ட வகை. (பெருங். மகத. 17, 132.) |
நாகநாதம் | nāka-nātam n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
நாகநெய் | nāka-ney n. A medicinal oil; மருந்தெண்ணெய்வகை. (இராசவைத். 132.) |