Word |
English & Tamil Meaning |
---|---|
நம்பு | nampu n. <>நம்பி. Right of conducting pūjā in a temple; கோயிலிற் பூஜை செய்யுமுரிமை. அசற்பங்கில் நம்பும் (S. I. I. v, 327) |
நம்புரி | nampuri n. Nambūdiri; மலையாளப் பிராமணன். கண்ணகியும் ... நம்புரிமார் வீதியிலே நலமா யெழுந்திருத்தாள் (கோவ. க. 112). |
நம்மள் | nammal pron. Corr. of நம்மவர்கள் உண்மை நம்மள் ஜாதிக் குதவாதே (பஞ்ச.திரு முக. 1237.) |
நமகசமகம் | namakacamakam n. A Vēdic mantra; ஒரு வேதமந்திரம். நாதனே மாதேவனென்பதற் கோருத்ர நமகசமகஞ் சாட்சியாம். (அறப் சத். 52) |
நமடு | namaṭu n. cf. நமுடு. Louse; சிறுபேன். (அபி. சிந்.) |
நமனிகை | namaṉikai n. prob. snapana. Sacred bath; திருமஞ்சனம். (S. I. I. iii, 270) |
நமஸ்காரபாகுடம் | namaskāra-pākuṭam n. <>நமஸ்காரம்+. (Jaina.) Book of hymns; தோத்திரநூல். நமஸ்காரபாகுடத்துள் . . . அத்துணைப் பாகுபாட்டாலும் நமஸ்காரஞ்செய்து (நீலகேசி, 1 உரை) |
நமஸ்காரமண்டபம் | namaskāra-maṇṭapam n. <>id+. A maṇṭapam in front of the central shrine of a temple, for devotees to perform namaskāram; நமஸ்காரஞ் செய்தற்காக அமைத்த மண்டபம். (T. A. S. vi, 63.) |
நமிட்டு - தல் | namiṭṭu- 5 v/ tr. & intr. cf. நிமிட்டு-. To pinch; நமுட்டுதல். Pond. |
நமுடு | namuṭu n. perh. நமுட்டு-. Knot in silk-fibre; பட்டுநூலில் விழும் முடிச்சு. Pond. |
நமை - த்தல் | namai- 11. v. tr. prob. நியமி-. To command; கட்டளையிடுதல். பொறிபுலன்களைந்தும் நமையாமல் (திவ். இயற். 1, 132) |
நயதி | nayati n. prob. nīti. Justice; நீதி. சரிதையி னதியின் (இரகு. தசரத. சா. 3.) |
நயப்பெத்தன் | nayappettaṉ n. <>நயப்பு+எத்தன். Cheat; மோசக்காரன். Pond. |
நயபோசனம் | naya-pōcaṉam n. <>நயம்+. Offering sumptuous meals, one of seven puṇṇiyam; புண்ணியம் ஏழனுள் ஒன்றான நல்லுணவளிக்கை. (யாழ். அக.) |
நயம் | nayam n. <>naya. (Mus.) A mode of singing in which both kaṉam and tēcikam are mixed; கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை. (கனம்கிருஷ்ணையர், 1.) |
நயராகம் | naya-rākam n. <>நயம்+. (Mus.) A class of rāgas; இராகத்தில் ஒருவகை. |
நயனக்கத்தி | nayaṉa-k-katti n. prob. nayana+. A surgical instrument; சத்திரவைத்திரயத்தில் உபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.) |
நயனப்படலம் | nayaṉa-p-paṭalam n. <>id.+. Cataract of the eye; கண்ணை மறைக்கும் நோய்வகை. Pond. |
நரகரம் | narakaram n. prob. naraka. The infernal region; நரகலோகம். (சிவரக. கீர்த்தி. 29.) |
நரகாவஸ்தை | narakāvastai n. <>id.+ avasthā. Hellish torture; நரகவேதனை. Colloq. |
நரந்தை | narantai n. Bitter orange; நாரத்தை. (இராசவைத் . 141.) |
நரவிலங்குதீபம் | nara-vilaṅku-tīpam n. <>நரன்+விலங்கு+. A kind of lamp for waving before the deity in a temple; புருஷாமிருக தீபம். (பரத. ஒழிபி. 41.) |
நரி - த்தல் | nari- 11 v. intr. To be perplexed; பிரமித்தல். Pond. |
நரிக்கெளிறு | nari-k-keḷiṟu n. perh. நரி+. A kind of fish; மீன்வகை. Tinu. |
நரித்தொம்பன் | nari-t-tompaṉ n. <>id.+. A person belonging to the Nari-k-kuṟava caste; நரிக்குறவன். Loc. |
நரிமிரட்டி | nari-miraṭṭi n. cf. நரிமருட்டி. Rattlewort; கிலுகிலுப்பை. (பாலவா. 50.) |
நரிமுகத்தில்விழி - த்தல் | nari-mukattil-viḻi- v. intr. <>நரி+முகம்+. To be lucky; அதிருஷ்டமடைதல். (மதி. க. ii, 127.) |
நல்லகாக்கை | nalla-kākkai n. <>நல்ல+. Common crow; காக்கைவகை. (M. M. 149.) |
நல்லது | nallatu n. <>நன்-மை. Virtue; அறம். நல்லது வெஃகி (பரிபா. 10, 88) |
நல்லவன் | nallavaṉ n. <>id. Caste man, dist. fr. tiṇṭātavaṉ; தீண்டாச்சாதி அல்லாதவன். Mod. |
நல்லாடு | nal-l-āṭu n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 509.) |
நல்லிசம் | nallicam n. Purple wild indigo; கொள்ளுக்காய்வேளை. (சித். அக.) |
நல்லுளத்தோர் தலைப்பாடு | nal-l-uḷa-t-tōr-talai-p-pāṭu n. <>நன்-மை+உளம்+. (Buddh.) Right concentration; பழுதற்ற சமாதி. (மணி. 30, 179, உரை.) |
நல்லூற்றம் | nal-l-ūṟṟam n. <>id.+. (Buddh.) right intention; பழுதில்லாத சங்கற்பம். (மணி. 30, 179, உரை.) |