Word |
English & Tamil Meaning |
---|---|
நாவேறு | nā-v-ēṟu n. perh. நா + ஏறு. A disease affecting betel; வெற்றிலையிற்காணும் நோய் வகை. வெற்றிலைக்கு நாவேறு சுருட்டை முதலாயின (நீலகேசி, 366, உரை). |
நாழிகை | nāḻikai n. perh. nādikā. A portion of a temple; கோயிற்பகுதி. இடைநாழிகை, உண்ணாழிகை. |
நாழிகைவட்டம் | nāḻikai-vaṭṭam n. <>நாழிகை+. Hour-glass, clepsydra; நாழிகை வட்டில். Pond. |
நாள் | nāḷ n. Flower; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.) |
நாள்மாடை | nāḷ-māṭai n. perh. நாள் +. A tax in money; பொன்னாயவகை. (S. I. I. iv, 195.) |
நாள்வாய் | nāḷ-vāy adv. <>id.+. Everyday; ஒவ்வொரு நாளும். நாள்வாய் நாழிநெய் அளந்துகொடுத்து (S. I. I. viii, 168). |
நாள்விருந்து | nāḷ-viruntu n. <>id.+. Feast given before marriage to bride and bridegroom by their near relations; மணமக்கட்குக் கல்யாணத்துக்குமுன் நெருங்கிய உறவினர் இடும்விருந்து. Loc. |
நாளம் | nāḷam n. A gem; மாணிக்கவகை. மாணிக்க நாளமும் கோமளமும் (S. I. I. ii, 431). |
நாளெழுத்து | nāḷ-eḻuttu n. <>நாள்+. See நாமநக்ஷத்திரம். (யாப். வி. 536.) . |
நாற்சார்வீடு | nāṟ-cār-vīṭu n. <>நான்கு+. Quadrangle; நடுவில் முற்றம் விட்டு நாற்புறமும் கட்டடவமைந்த வீடு. (யாழ். அக.) |
நாற்சில்வண்டி | nāṟ-cil-vaṇṭi n. <>id.+. Four-wheeled carriage; நான்கு சக்கரங்களுடைய வண்டிவகை. Pond. |
நாற்றங்கொல்லை | nāṟṟaṅ-kollai n. <>நாறு+. Seed bed; நாற்றாங்கால். (P. T. L.) |
நாற்றடிப்பாழ் | nāṟṟaṭi-p-pāḻ n. <>id. அடி+. Withering of seedlings; நாறு பாழ்படுகை (S. I. I. vii, 279.) |
நான்கு | nāṉku n. A system of loan by which grain is borrowed in the off season and repaid at the next harvest with an addition of 25 per cent. as interest; நாலிலொருபங்கு வட்டிக்காகச் சேர்ந்து அறுவடையானதுங் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறுந் தானியக்கடன். Loc. |
நானாதேசி | nāṉā-tēci n. <>நானா+. A class of merchants; வணிகர்வகை. (I. M. P. Cg. 682.) |
நிகமி - த்தல் | nikami 11 v. tr. <>nigama. To conclude; முடித்தல். (ஈடு, 1, 6, ப்ர. ஜீ. பக். 262.) |
நிகழ்வாக்கம் | nikaḻvākkam n. <>நிகழ்வு+. Transformation; பரிணாமம். ஒத்தபொருள்கணிகழ்வாக்க முரைத்து நின்றேன். (நீலகேசி, 421) |
நிகுஞ்சிதசிரம் | nikucita-ciram n. (Nāṭya.) A head-pose; சிரவபிநயவகை. (பரத. பாவ. பக். 57.) |
நிச்சங்கம் | niccaṅkam n <>niš-šaṅka. That which is undoubted; சந்தேகமற்றது. அங்கைக்கனியாகி நிச்சங்கமாகி நிகழ்ந்தவடி (பாடு. திருவடி.). |
நிச்சயப்பத்திரிகை | niccaya-p-pattirikai n. <>நிச்சயம்+. Certificate; உறுதிச்சீட்டு. Pond. |
நிச்சயாந்தம் | niccayāntam n. (Rhet.) A figure of speech; அணிவகை. (பாப்பா. 132.) |
நிச்சல்காவி | niccal-kāvi n. prob. nīca+. Lower top-sail; காவிபாயின் கீழ்ப்பகுதி. (M. Navi. 83.) |
நிச்சல்சவர் | niccal-cavar n. prob. id.+. Lower top-gallant sail; சவர்பாயின் கீழ்ப்பகுதி, (M. Navi. 83.) |
நிசானிவராகன் | nicāṉi-varākaṉ n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 117.) |
நிசிதம் | nicitam n. perh. nišita. Lie; பொய். செப்புமொழி நிசமென்று நிசிதமென்றுங்கண்டு (மநு நீதி, 3). |
நிசிதிகை | nicitikai n. <>niṣīdikā. Cave where a Jain fasts to death; சைனத்துறவி உண்ணா நோன்பால் உயிர்விடும் கற்பாழி. (I. M. P. S. A. 389). |
நிட்கிரியம் | niṭkiriyam n. <>niṣkriya. That which is inactive; தொழிற் செய்யாதது (வேதாந்த சா. 85) |
நித்தப்படிகாரன் | nitta-p-paṭi-kāraṉ n. <>நித்தம்+படி+. One who works on daily wages; நாட்கூலிக்காரன். (சரவண. பணவிடு. 81-2.) |
நித்தலழிவு | nittal-aḷivu n. <>நித்தல்+. Daily expenses. தினப்படிச் செலவு. (S. I. I. iii, 298) |
நித்தியசுமங்கலி | nittiya-cumaṅkali n. <>நித்தியம்+. Dancing-girl; தேவடியாள். Colloq. |
நித்தியமல்லிகை | nittiya-mallikai n. <>id.+. A kind of jasmine; மல்லிகைவகை. Loc. |