Word |
English & Tamil Meaning |
---|---|
நிருபர் | nirupar n. <>nirūpa. Correspondent; பத்திரிகைக்குச் சமாசாரக் கடிதம் எழுதுவோன். Mod. |
நிருமாலியம் | nirumaliyam n. Sacred lingam tree; பெரியமாவிலங்கம். (L.) |
நிருவிஷம் | niruviṣam n. zedoary root; கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு. Pond. |
நிருபணம் | nirūpaṇam n. <>nirūpaṇa. Section containing the argument of a story, in musical composition; கீர்த்தனரூபமான சரித்திர நூலின் முதலில் அச் சரித்திரத்தைச் சுருக்கிக்கூறும் பகுதி. (கோபாலகிருஷ்ணபாரதி, 39) |
நிரைக்கட்டை | nirai-k-kaṭṭai n. <>நிரை-+. Damming a river with stockade. See உல்லடைப்பு. Pond. . |
நிரைப்பு | niraippu n. <>id. Order; ஒழுங்கு. Pond. |
நிரோட்டி | nirōṭṭi n. <>nir-ōṣṭha. cf. நிரோட்டியம். (Pros.) Poem composed without using the labials; நிரோட்டகம். (யாப். வி. 510) |
நிரோதானமுத்திரை | nirōtāṉa-muttirai n. <>nirōdāna+. (šaiva.) A handpose which consists in bringing the thumb and the fingers other than the little finger together. சிறுவிரலை நீக்கி ஏனைய விரல்களை நுனிகள் பொருந்தச் சேர்த்துக் குவிக்கும் முத்திரைவகை. (சைவாநுட். வி. 17.) |
நிலக்காணிக்கை | nila-k-kāṇikkai n. <>நிலம்+. A kind of tax; வரிவகை. (S. I. I. iv, 79) |
நிலக்கீல் | nila-kīl n. <>id.+. Asphalt; சிலாசத்து. Pond. |
நிலக்கூலி | nila-kūli n. <>id.+. Rent for land; நிலவாடகை. நிலக்கூலி தண்டிப்போந்த படிக்கும் (S. I. I. vii, 385) |
நிலங்கீறு - தல். | nilaṇ-kīṟu- v. intr. <>id.+. To dawn; அருணோதயமாதல். Tinn. |
நிலமடக்கு - தல் | nila-maṭakku- v. intr. <>id.+. To classify arable lands according to quality; விளைநிலத்துக்குத் தரம் ஏற்படுத்துதல். (S. I. I. V, 142.) |
நிலமுதல் | nila-mutal n. <>id.+. Land-register; அடங்கற் குறிப்பு. (Coals, ii, 310) |
நிலுவைஅஞ்சனா | niluvai-acaṉā n. <>நிலுவை+. Estimate of the produce of a field before it is harvested; அறுவடைப் புள்ளிக்கணக்கு. (R. T.) |
நிலைக்களம் | nilai-k-kaḷam n. <>நிலை+. Office for collection of revenue; அரசிறை தண்டுஞ் சாலை. (S. I. I. ii. 353) |
நிலைப்பந்தம் | nilai-p-pantam n. <>id.+. A kind of torch; தீவட்டிவகை. (Pudu. Insc. 307.) |
நிலைபரம் | nilai-param n. cf. நிலைவரம் Foundation; ஆதாரம். Pond. |
நிலையடி | nilai-y-aṭi n. <>நிலை+. First threshing of harvested sheaves of paddy; களநெல்லின் தலையடி. Tinn. |
நிலையாணி | nilai-y-āṇi n. <>id.+. Fixed pin, in jewels, dist fr. ōṭāṇi; நகைகளில் பதித்திருக்கும் ஆணிவகை. (S. I. I. ii, 15.) |
நிலையாள் | nilai-y-āl n. <>id.+. Permanent servant; ஸ்திரமான வேலைக்காரன். நிலையாள் என்று கூட்டி (S. I. I. iv. 140.) |
நிலையுருக்காண்(ணு) - தல் | nilai-y-uru-k-kāṇ- v. intr. <>id.+. To check and verify the stock account; பதிவுக் குறிப்பில் உள்ள படி பண்டங்களை எண்ணிக் கணக்கிடுதல். ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீ பண்டாரப் பொத்தகப்படி நிலையுருக்கண்டு (S. I. I. vii, 447) |
நிவசி - த்தல் | nivaci- 11 v. intr. <>ni-vas. To dwell; குடியிருத்தல். (ஜீவப்பிரம்மைக்ய. பக். 640.) |
நிவாரகன் | nivārakaṉ. n. <>nivāraka. Obstructor; தடை செய்வோன். ஸர்வாதிகன் தாழ நிற்குமென்று நிவாரகரில்லை. (ஈடு, 1, 3, ப்ர.). |
நிவிருத்திமார்க்கம் | nivirutti-mārkkam n. <>nivrtti+. The path of renunciation; துறவு நெறி. Colloq. |
நிவேதனப்பாவாடை | nivētaṉa-p-pāvāṭai n. <>நிவேதனம்+. Food-offerings on a large scale, made to a deity; கடவுளுக்கு இடும் பெரும்படைப்பு. Loc. |
நிழல். | niḻal n. Devil; பேய். Loc. |
நிழலாட்டப்பாவை. | niḻal-āṭṭa-p-pāvai n. <>நிழலாட்டம்+. Puppet show; தோற்பாவைக் கூத்து (நாடகத்தமிழ், பக். 9.) |
நிழலாட்டம் | niḻal-āṭṭam n. <>நிழல்+. 1. Movement of a person's shadow; ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு. குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையிலே (திவ். பெரியாழ். 2,5,3 வ்யா. பக். 340) 2. Cinema; |