Word |
English & Tamil Meaning |
---|---|
நித்தியல் | nittiyal adv. <>நித்தம். Daily; தினந்தோறும். நித்தியல் திருப்பெருக்கு அமுது கொடுக்கிற (T. A. S. V, 117). |
நிதாககாலாக்கினி | nitāka-kālākkiṉi n. <>nidāha+. One of pacākkiṉi, q.v.; பஞ்சாக்கினியு ளொன்று. (சங். அக.) |
நிநாதம் | ninātam n. <>ni-nāda. Sound; ஒலி (W.) |
நிபந்தனைக்கிரயம் | nipantaṉai-k-kirayam n. <>நிபந்தனை+. Mortgage by conditional sale; அவதிக்கிரயம். Cm. |
நிம்பர் | nimpar n. <>E. Number; எண் முதல் நிம்பரென்றுலகில் (பஞ்ச. திருமுக. 1651). |
நிமிர் - தல் | nimir- 4 v. intr. to interpose; இடையிடுதல். நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் (பரிபா. 19, 82) |
நிமிரி | nimiri n. 1. Yellow colour; மஞ்சள் நிறம். (G. Tj. D. I, 120.) 2. A disease of cattle; |
நியதம் | niyatam n. <>niyata. Regularity; ஒழுங்கு |
நியாகமம் | niyāmakam n. <>niyāmaka. That which binds or sanctions; கட்டுப்படுத்துவது. நியாமகம் என்னையென்பீராயின் (சிவசம. 51) |
நியாஸஸ்வரம் | niyāsa-svaram n. <>nyāsa+. (Mus.) Proper final note of a rāga; இராகத்தைக் காட்டி முடித்தற்குரிய ஸ்வரம். (Mus. of Ind. 39.) |
நியோகி | niyōki n. <>niyōgin. Sage; wise man; பெரியோன். போந்திடு நியோகியர்கள் வார்த்தை யுசிதந்தான் பொருந்தவே வாதுவெல்வார் (திருவேங். சத. 19). |
நிர்க்குணி | nirkkuṇi n. <>nir-guṇa. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
நிர்ணாயகம் | nirṇāyakam n. <>nirṇāyaka. That which helps to determine; determinant; நிர்ணயிக்க உதவுவது. இவ்வர்த்தத்திற்கு நிர்ணாயகம் இசையாயிற்று (ஈடு, 6, 1,6). |
நிர்த்தூள் | nir-t-tūḷ n. prob. nis+dhūlī. Atom; சிறு துகள். பொருப்பை நிர்த்தூளாக்கி (சந்திர கலாமாலை, 15). |
நிரித்தேசியம் | nirttēciyam n. <>nirdēšya. That which is pointed out or emphasised; point; குறித்துக் காட்டப்படுவது. |
நிர்வாகவிலக்கை | nirvāka-v-ilakkai n. <>நிர்வாகம்+. Fee for management; காரிய நிர்வாகத்திற்கு ஏற்பட்ட சம்பளம். (S. I. I. v, 504.) |
நிர்வாணி | nirvāṇi n. <>nirvāṇī. (Astrol.) A deity located in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction; தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை. (பஞ்.) |
நிர்விடம் | nirviṭam n. <>nir-viṣa. Antidote for poison; விடத்தை நீக்கும் மருந்து. நிர்விடமு விடமுமொருமுதலாய் நின்றும் (சிவநெறிப். 65.) |
நிர்விடயம் | nirviṭayam n. <>nir-viṣaya. That which is non-existent; இல்பொருள். பிரயத்தின பூர்வகமாய் நிர்விடயம் பண்ணவேண்டும் (வேதாந்தசா. 42.) |
நிரக்கை | nirakkai n. <>நிர-. Average; நிரவல். Mod. |
நிரதன் | nirataṉ n. <>nirata. A man of excessive attachment; மிக்க பற்றுடையவன். தூய நிரதராயினர் சிலர் (பிரபோதசந். 7, 31) |
நிரந்தரி - த்தல் | nirantari- 11 v. intr. <>நிரந்தரம். To expand; பரவுதல். மணலினிரந்தரிப்பியா (தணிகைப்பு. வள்ளி. 20.) |
நிரநுயோச்சியாநுயோகம் | niranu-yōcciyānuyōkam n. <>nir-anu-yōjya+. (Log.) A fallacy in argument; தோல்வித்தானத்துளொன்று. (செந். iii, பக். 13.) |
நிரம்சம் | nir-amcam n. <>nir-amša. That which is indivisible; பகுக்கத்தகாதது. ஏகபிரதேசியாகலின் நிரம்சமாகிய பரமாணுவினுக்கு (நீலகேசி, 397, உரை.) |
நிரவல் | niraval m. <>நிரவு-. Average; சராசரி. Loc. |
நிரனிறைவழு | niraṉiṟai-vaḻu n. <>நிரனிறை+. (Rhet.) A defect in composition which consists in following one order at one place and the reverse order later on; ஒரு நிரலை முன்வைத்து அதன் பின்வைக்கும் நிரலை மாறுபட வைக்குங் குற்றம். (இலக். வி. 697.) |
நிரஸி - த்தல் | nir-asi- 11. v. tr. <>nir-as. 1. To destroy; அழித்தல். பாண்டவரையும் நிரஸிக்கப் பிராப்தமாயிருக்கு (ஸ்ரீவசன. 21) 2. To defeat, as in an argument; |
நிருணயகணக்கு | niruṇaya-k-kaṇakku n. <>nirṇaya+. Algebra; பீசகணிதம். Pond. |
நிருபச்சம்படம் | nirupa-c-campaṭam n. <>நிருபம்+. Pay of the messenger carrying royal orders; அரசருத்தரவுகளைக் கொண்டு வருவோனுக்குரிய கூலி. (M. E. R. 1921-22, p. 109). |