Word |
English & Tamil Meaning |
---|---|
மண்டற்சீங்காய் | maṇṭaṟ-cīṅkāy n. Shining leaved soap-pod; வெள்ளிண்டு. (L.) |
மண்டிதம் | maṇṭitam n. <>maṇdita. Decoration; அலங்காரம். திருமணி மார்பா குண்டல மண்டித (நூற்றெட்டுத். திருப்பு. 65). |
மண்டிலவரங்கம் | maṇṭila-v-araṅkam n. <>id.+. Circus tent; வேடிக்கை காட்டும் அரங்கம். Pond. |
மண்டு | maṇṭu n. Corr. of மன்று. Raised platform under a tree; பொதுவிடம். வாடுமுகமுடன் வந்ததென்ன மண்டிலே கூடியே நொந்த தென்ன (கட்டபொம்ம. பக். 6). |
மண்டைதுள்ளு - தல் | maṇṭai-tuḷḷu- v. intr. <>மண்டை+. To be haughty; செருக்கு மிகுதல். மண்டைதுள்ளிப்போகாதே (கோவ. க. 88). |
மண்டையவியன் | maṇṭaiyaviyaṉ n. <>māṇdavya. Person belonging to māṇdavyagōtra; மாண்டவிய கோத்திரத்தான். (M. E. R. 87 of 1925.) |
மண்ணகுண்டம் | maṇṇa-kuṇṭam n. <>மண்+. Raised, earthen platform, as in a fortification; மண்ணாற் செய்த அட்டாலை. (யாழ். அக.) |
மண்ணச்சூலை | maṇṇaccūlai n. A disease of horses; குதிரைநோய் வகை. (தஞ். சர. iii, 183.) |
மண்ணறுவான் | maṇṇaṟuvāṉ n. <>மண்+அறு-. A term of abuse; ஒரு வசைச்சொல். (தெய்வச் விறலிவிடு. 492). |
மண்ணறை - தல் | maṇ-ṇ-aṟai- v. tr. <>id.+. To plaster with mud: மண்பூசுதல். சாத்திக் கதவடைத்துத் தாள்பூட்டி மண்ணறைந்தார் (கோவ. க. 5). |
மண்ணாந்தை | maṇṇāntai n. Python; வெண்ணாந்தை. Tinn. |
மண்பாடு | maṇ-pāṭu n. <>மண்+. Earthen mound or bank. ridge of earth; மண்போட்டுச் செய்த வரம்பு. ஏரிகரை மண்பாட்டுக்குக் கிழக்கும் (S. I. I. iv, 97). |
மண்மதில் | maṇ-matil n. prob. id.+. A tax; வரிவகை. (M. E. R. 1929-30, p. 87.) |
மண்வைப்புப்புடம் | maṇ-vaippu-p-puṭam n. <>id.+வை-+. A mode of calcination, one of muppū-puṭam; முப்பூப்புடத்தொன்று. (தைலவ தைல. பக். 9.) |
மணப்பொங்கல் | maṇa-p-poṅkal n. prob. மணம்+. First day of the Poṅgal festival; தைப்பொங்கல் விழாவில் முதல்நாட்பொங்கல். (எங்களூர், 90.) |
மணல்முள்ளங்கி | maṇal-muḷḷaṅki n. <>id.+. A kind of radish; முள்ளங்கிவகை. (சங். அக.) |
மணவாட்டுப்பிள்ளை | maṇa-v-āṭṭu-p-piḷḷai n. <>மணம்+ஆள்-+. See மணவாட்டுப் பெண்பிள்ளை. (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 749.) . |
மணவாட்டுப்பெண்பிள்ளை | maṇa-vāttu-p-peṇ-piḷḷai n. <>id.+id.+. Bride; மணமகள். மாமியாரான யசோதைப்பிராட்டி இவளைக் கண்டுகந்து மணவாட்டுப்பெண்பிள்ளை யென்று ஸத்கரிக்குமோ (திவ். பெரியாழ். 3, 8, 1, வ்யா. பக். 735). |
மணவாளப்பிள்ளை | maṇavāḷa-p-piḷḷai n. <>மணவாளன்+. Bridegroom; மணமகன். (பெரியபு. தடுத்தாட். 27.) |
மணவாளன் | maṇa-v-āḷaṉ n. <>மணம்+ஆள்-. Master, lord; தலைவன். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக். 11). |
மணற்கொட்டகம் | maṇaṟ-koṭṭakam n. <>மணல்+. Toy-house of sand, in children's play; சிறுவர் விளையாட்டாக மணலால் அமைக்குஞ் சிறுவீடு. ஓரரணை மணற்கொட்டகத்தைச் சிதறினாற் போலே அனாயாஸேந அழித்து (திவ். திருநெடுந். 28, வ்யா.). |
மணற்சீனி | maṇaṟ-cīṉi n. <>id.+. A kind of sugar; சர்க்கரைவகை. (சித். அக.) |
மணற்பாகு | maṇaṟ-pāku n. <>id.+. Fine sugar; குழைவுச் சீனி. (நாமதீப.) |
மணிக்கல் | maṇi-k-kal n. <>மணி+. Gem; இரத்தினக்கல். மிகுமொளி மணிக்கல் (ஞானபூசா. 26). |
மணிக்கலன் | maṇi-k-kalaṉ n. <>id.+. Ornament set with jewels; இரத்தினாபரணம். பரிசட்டமு மிலங்கு மணிக்கலனு நல்கி (S. I. I. iii, 217). |
மணிக்கிராமம் | maṇi-k-kirāmam n. perh. vaṇij+. Mercantile guild; வணிகர் குழு வகை. (M. E. R. 598 of 1926.) |
மணிச்சூத்திரம் | maṇi-c-cūttiram n. <>மணி+. Clock; கடிகாரம். Pond. |
மணித்தியாலம் | maṇi-t-tiyālam n. <>id.+. Hour; ஒரு மணி நேரம். Pond. |
மணிப்பயறு | maṇi-p-payaṟu n. <>id.+. A kind of gram; பயறுவகை. Loc. |