Word |
English & Tamil Meaning |
---|---|
மந்தி | manti n. <>id. Fool; முட்டாள். Colloq. |
மந்திரயானம் | mantira-yāṉam n. <>mantra+. A school of Buddhism; பௌத்த சமயத்துளொருவகை. (நீலகேசி, 342, உரை.) |
மந்திராபிடேகம் | mantirāpiṭēkam n. <>id.+. A form of worship; அனுட்டானவகை. (சைவாநு. வி. 21.) |
மந்திரிப்பா - தல் | mantirippā- v. intr. prob. மந்திரி-+ ஆ-. To consecrate; குருப்பட்டந்தரித்தல். Pond. |
மந்தைப்பணம் | mantai-p-paṇam n. <>மந்தை+. Tax on grazing; மேய்ச்சல் வரி. (S. I. I. vii, 46.) |
மந்தோசை | mantōcai n. <>மந்தம் + ஓசை. Low pitch; குறைவான ஓசை. Pond. |
மப்புச்சோளம் | mappu-c-cōḷam n. Maize; சோளம். Pond. |
மம்மதுகான்வராகன் | mammatukāṉvarākaṉ n. A coin; நாணயவகை. (பணவிடு. 116) |
மயக்கம் | mayakkam n. <>மயங்கு-. Sexual union; கூடல். (ஈடு, 1, 9, 6) |
மயம் | mayam n. perh. maya. Property, wealth; சொத்து. மயக்காரன், மயக்காரி. Loc. |
மயர்க்கிழங்கு | mayar-k-kiḻaṅku n. Topioca; மரவள்ளி. (L.) |
மயானக்குருவிதோஷம் | mayāṉa-k-kuruvi-tōṣam n. <>மயானம்+. A kind of pakṣitōṣam; பக்ஷிதோஷவகை. (பரராச. ii, 214.) |
மயிரொட்டியாணம் | mayir-oṭṭiyāṇam n. <>மயிர்+. Sackcloth; சணலாற் செய்த துணிவகை. Pond. |
மயிலன்கம்பு | mayilaṉ-kampu n. A kind of bulrush millet; கம்புப்பயிர்வகை. (விவாச. 4.) |
மயிற்கண்சேலை | mayiṟ-kaṇ-cēlai n. <>மயில்+கண்+. A kind of saree; புடைவை வகை. (பஞ்ச. திருமுக. 1163.) |
மயூரகம் | mayūrakam n. Cockscomb; சாவற்சூட்டுப்பண்ணை. Pond. |
மர்ஜை | marjai n. <>Arab. marjī. 1. Opinion; அபிப்பிராயம். 2. Secret opinion; |
மரக்கால்வலம் | marakkāl-valam n. <>மரக்கால்+. Presentation of paddy, in a marriage; விவாகத்தில் நெல்லாகச் செய்யுஞ் சீர். Loc. |
மரக்குதிரை | mara-k-kutirai n. <>மரம்.+. Bench used by artisans; கம்மாளர் கருவியுளொன்று. Pond. |
மரக்கோப்பு | mara-k-kōppu n. <>id.+. Wooden roof; மரத்தால் அமைக்கப்பட்ட மேற்கட்டு. குறட்டின்மேலே மரக்கோப்பாகத் திருமண்டபங் கட்டிவைத்து (கோயிலொ. 42). |
மரச்சுத்தியல் | mara-c-cuttiyal n. <>id.+. Wooden beater, mallet; கொட்டாப்புளி. Pond. |
மரணபுஸ்தகம் | maraṇa-pustakam n. <>மரணம்+. The Book of Life; ஜீவ புஸ்தகம். (விவிலி.) |
மரத்தட்டு | mara-t-taṭṭu n. <>மரம்+. Wooden tray; மரப்பலகையாலான தாம்பாளம். Colloq. |
மரத்திலடி - த்தல் | marattil-aṭi- v. tr. <>id.+. To set in the stocks; தண்டனையாகத் தொழு மரத்தில் மாட்டுதல். பள்ளனைப் பிடித்தடித்தே மரத்திலடித்தான் (குருகூர்ப். 50). |
மரப்பரி | mara-p-pari n.<>id.+. See மரக்குதிரை. Pond. . |
மரப்பல்லி | mara-p-palli n. <>id.+. A kind of lizard; பல்லிவகை. (அபி. சிங்.) |
மரம் | maram n. Stocks; தொழுமரம். (குரு கூர்ப். 50.) |
மரமச்சாதிவிலை | mara-maccāti-vilai n. <>மரம்+மச்சம்+ஆதி+. A tax; வரிவகை. (S. I. I. viii, 214.) |
மரலைங்குப்பூடு | maralaiṅkuppūṭu n. A plant; பூடுவகை. (சங். அக.) |
மரியாதி | mariyāti n. <>maryādā. Manner, way; முறை. இம்மரியாதியிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளவும் (S. I. I. iv, 98). |
மரியாதைக்கிரமம் | mariyātai-k-kiramam n. <>மரியாதை+. See மரியாதைமுறை. Mod. . |
மரியாதைமுறை | mariyātai-muṟai n. <>id.+. Etiquette; மரியாதையாக நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்கு. Pond. |
மருக்கடம் | marukkaṭam n. Indian adjutant; பெருநாரைவகை. Pond. |
மருட்செந்தொடை | maruṭ-centoṭai n. <>மருள்+. (Pros.) A kind of centoṭai verse; செந்தொடைவகை. (யாழ். அக.) |
மருட்டு - தல் | maruṭṭu- 5 v. tr. Caus. of மருள்-. To make one forget; மறக்கச்செய்தல். கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகைமருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358). |