Word |
English & Tamil Meaning |
---|---|
மருட்டுத்தொழில் | maruṭṭu-t-toḻil n. <>மருட்டு+. Magic, sleight of hand; கைமாயவித்தை. Pond. |
மருத்துவகுலம் | maruttuva-kulam n. <>மருத்துவம்+. Barber caste; நாவிதச்சாதி. Mod. |
மருத்துவவிருத்தி | maruttuva-virutti n. <>id.+. Land granted in inam to the village physician; கிராமவைத்தியனுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம். (An. Dec. 336.) |
மருளாடி | maruḷ-āṭi- n. <>மருள்-+. cf. மருளாளி Priest acting as an inspired oracle; ஆவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி. (மதி. க. ii, 187.) |
மல்லாக்கு | mallākku n. <>மல்லா-. Lying on one's back; மேல்முகமாகக் கிடக்கை. மல்லாக்காய்ச் சயனித்தல் (வேதாந்தசா. பக். 7). |
மலக்கிரகக்குழல் | malakkiraka-k-kuḻal n. <>மலக்கிரகம்+. Waste pipe; கக்கூசுக் குழாய். Pond. |
மலக்கிரகம் | mala-k-kirakam n. <>mala+gṟha. Latrine; கக்கூசு. Loc. |
மலகு | malaku n. Gunny; கோணிப்பை. Loc. |
மலங்கு - தல் | malaṅku- 5 v. intr. To incline and fall to the ground; சாய்ந்துவிழுதல். மலங்க நின்றுதன் மடனெடு மயிர்கையிட் டுயிர்க்கும் (நீலகேசி. 51). |
மலட்டுக்காலம் | malaṭṭu-k-kālam n. <>மலடு+. Unproductive period of time; பயனில்லாத காலம். மலட்டுக்காலம் போலே யிருக்கை யாலே (திவ். திருநெடுந். 3, வ்யா. பக். 25). |
மலட்டுலக்கை | malaṭṭulakkai n. <>id.+ உலக்கை. A kind of crude, wooden pestle; செப்பனிடப்படாத உலக்கை. மலட்டுலக்கை கொண்டு வந்து மேல் தானடித்தாள் (கோவ. க. 97). |
மலட்டுவிப்புருதி | malaṭṭu-vippuruti n. <>id.+. A kind of abscess; புண்கட்டிவகை. (தஞ். சர. iii, 145.) |
மலடிமகன் | malaṭi-makaṉ n. <>மலடி+. Non-existent thing, as the son of a sterile woman; இல்பொருள். Loc. |
மலடுநில் - தல் [மலடு நிற்றல்] | malaṭu-nil- v. intr. <>மலடு+. To be sterile; மலடாயிருத்தல். அறுபதினாயிரமாண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடுநாள் மலடுநின்று பிள்ளைபெற்றவனாகையாலே (திவ். பெரியதி. 1, 2, 6, வ்யா.). |
மலந்துவரை | malan-tuvarai n. <>மலை+. A kind of dholl; துவரைவகை. (விவசா. 4.) |
மலயப்பூத்துன்னமரம் | malaya-p-pū-t-tuṉṉa-maram n. <>மலயம்+. Toon tree, Cedrella toona; மரவகை. Pond. |
மலாய் - தல் | malāy- 4 v. tr. To mix; கலத்தல். எல்லாம் ஒன்றாகச் சேர்த்து மலாய்ந்து (மதி. க. ii, 52). |
மலாரம் | malāram n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
மலை | malai n. The squares in the board of an indoor game, where the pieces cannot be cut; கட்ட ஆட்டத்தில் காய்வெட்டுதற்கு இயலாத கட்டங்கள். Colloq. |
மலைக்காக்கை | malai-k-kākkai n. <>மலை+. A kind of crow, Pica rufiventris vagabunda; காக்கைவகை. (M. M. 149.) |
மலைக்கேப்பை | malai-k-kēppai n. <>id.+. A species of ragi; கேப்பைவகை. (விவசா. 3.) |
மலைத்துத்தி | malai-t-tutti n. <>id.+. Plant whose fibre is used for making ropes, etc.; செடிவகை. (விவசா. 5.) |
மலைப்புகையிலை | malai-p-pukaiyilai n. <>id.+. Wild tobacco; காட்டுப்புகையிலை. (சித். அக.) |
மலைமருப்பு | malai-maruppu n. <>id.+. Summit, top of a mountain; மலைச்சிகரம். மலை மருப்பெறி மாருதம் (தக்கயாகப். 687). |
மலைமுண்டன் | malai-muṇṭaṉ n. <>id.+. A kind of paddy; ஒருவகை நெல். மீளாஞ்சிறை மீட்டான் மலைமுண்டன் (நெல்விடு. 186). |
மலையலரி | malai-y-alari n. <>id.+. Exile oleander; மஞ்சளலரி. (சித். அக.) |
மலையாண்விளக்கு | malai-y-āṇ-viḷakku n. perh. id.+ஆண்+. A kind of lamp; விளக்குவகை. (S. I. I. vii, 467.) |
மலையாளமுதலி | malaiyāḷa-mutali n. <>மலையாளர்+. Chief of a tribe of hillmen; மலைகளில் வாழும் மக்களின் தலைவன். (S. I. I. vii, 49.) |
மலைவடு | malai-vaṭu n. <>மலை+. Tender mango, fit for pickling; ஊறுகாய்க்கு உதவும் மாவடு. Loc. |
மலைவெற்றிலை | malai-veṟṟilai n. <>id.+. Box-leaved ivory wood; காட்டுவெற்றிலை. (சித். அக.) |