Word |
English & Tamil Meaning |
---|---|
மழலைச்சிரிப்பு | maḻalai-c-cirippu n. <>மழலை+. Charming smile of a child; குழந்தையின் புன்சிரிப்பு. இடையிடையே மழலைச்சிரிப்பாகச்சிரியா (திவ். பெருமாள். 7, 7, வ்யா. பக். 107). |
மழுக்கு - தல் | maḻukku- 5 v. tr. To gobble; மொக்குதல். சருக்கரைப் பொங்கலை மழுக்க (தாசீல் தார்நா. பக். 25). |
மழுமழுப்பு | maḻu-maḻuppu n. Smoothness; வழுவழுப்பு. தூரத்திலுள்ள மலைக்கு மழுமழுப் பதிகமென்பார்கள் (பிரதாப. விலா. பக். 101). |
மழைவில் | maḻai-vil n. <>மழை+. Rainbow; வானவில். Pond. |
மறக்கொண்டை | maṟa-k-koṇṭai n. <>மறம்+. A mode of coiffure or doing the hair, by Maṟava women; மறக்குலப் பெண்டிர் இட்டுக்கொள்ளும் மயிர்முடிவகை. Loc. |
மறமாணிக்கர் | maṟa-māṇikkar n. <>id.+. A class of warriors; ஒருசார் வீரக்குடியினர். பொன்னாமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் (Pudu. Insc. 158). |
மறிப்பு | maṟippu n. <>மறி-. Plunder, depredation; கொள்ளை. Pond. |
மறியல் | maṟiyal n. <>id. Voluntary suspension of normal work, as by artisans; வேலைநிறுத்தம். Loc. |
மறியோடு - தல் | maṟi-y-ōṭu- v. intr. <>id.+. To divert cattle or sheep, and prevent them from straying; ஆடுமாடுகளைச் சிதறியோடாதபடி முன்சென்று மறித்தோட்டுதல். கன்றுகள் மேய்த்து மறியோடி (திவ். பெரியாழ். 3, 3, 3) |
மறுகளப்படுத்துதல் | maṟu-kaḷa-p-paṭu-ttutal n. <>மறு+களம்+. Transferring of the harvested heaps, as of tobacco, from one place to another; ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்கு அறுவடையான புகையிலை முதலியவற்றை மாற்றுகை. Tinn. |
மறுகால்தலை | maṟukāl-talai n. <>மறுகால்+. Drainage sluice; வடிமதகு. (S. I. I. v, 138.) |
மறுதளி - த்தல் | maṟutaḷi- 11 v. tr. cf. மறுதலி-. To deny, disavow; மறுத்தல். மறுதளித்ததிம்மொழியென (திருவிரிஞ்சைப். நைமிச. 39). |
மறுதி | maṟuti n. <>மறு-. Undoing; செய்த தனை இல்லதாக்குகை. இந்திர னெண்ணலன் மறுதியின்மையின் (நீலகேசி, 211). |
மறுநனை - தல் | maṟu-naṉai- v. intr. <>மறு+. To be completely submerged and lost; to be swallowed up; முழுதும் அழிதல். தன் சோகம மறுநனையும்படியான ஆனந்தம் இவன்பக்கலிலே உண்டு (ஈடு. 10, 4, 4, பக். 139). |
மறுப்பறு - த்தல் | maṟuppaṟu- v. tr. <>மறுப்பு+. To give after first refusing; முதலில் மறுத்துப் பின் கொடுத்தல். (W.) |
மறுமண்டலம் | maṟu-maṇṭalam n. <>மறு+. Region or tract of land belonging to an alien king; வேற்றரசர் நாடு. மறுமண்டலத்துக்குப் போம் தூதர் (குறள், 631, மணக். அவதா.). |
மறுமுள் | maṟu-muḷ n. <>id.+. Small, new eruption about a healing ulcer; ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு. Loc. |
மறுவு | maṟuvu n. <>மறு. Picāṉam, as the second crop; இரண்டாம்போகமாகிய பிசானம். காரும் மறுவும் இருபூவும் (S. I. I. iv, 106). |
மறைப்புமை | maṟaippu-mai n. <>மறை-+. A magical unguent which renders things invisible; பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம். ஜாலங்கள் சித்திகள் மறைப்புமை முதலியவைகளும் (தஞ். சர. iii, 65). |
மன்னா | maṉṉā n. <>E. manna. Flowering ash tree; மேனாமரம். (M. M.) |
மனப்பான்மை | maṉa-p-pāṉmai n. <>மனம்+. Inclination, propensity; மனத்தின் போக்கு. Loc. |
மனப்பீடை | maṉa-p-pīṭai n. <>id.+. Chagrin, mental worry; விசனம். Pond. |
மனபாவகம் | maṉa-pāvakam n. <>id.+. Real state of one's mind; உள்ளெண்ணம். உன்றனது மனபாவகம் பார்த்தனம் (அருணா. பு. சாரப். 10). |
மனனம் | maṉaṉam n.<>manana. Intention; எண்ணம். நேர்பொரு மடங்கல்போல் வந்தனை மனனம் யாதென (புருரவ. போர்புரி. 3). |
மனிக்கி | maṉikki n. A plant; செடிவகை. (பச். மூ.) |
மனிச்சம் | maṉiccam n. <>manu-ja. Individual; ஆள். மனிச்ச மொன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி யிருநாழியும் (T. A. S. vi, 174). |
மனுத்துவம் | maṉu-t-tuvam n. <>manu+tva. Human nature; மனிதசுபாவம். Pond. |
மனுமுறை | maṉu-muṟai n. <>id.+. See மனுத்துவம். Pond. . |
மனுவாறு | maṉu-v-āṟu n. <>id.+. The code of Manu; மனுநீதி. மனுவாறு பெருக (S. I. I. ii, 233). |
மனுஷ்யர் | maṉuṣyar n. <>manuṣya. (Jaina.) Human beings, of five kinds, viz., cu-maṉuṣyar, tivviya-maṉuṣyar, ku-maṉuṣyar, pirakiruti-maṉuṣyar; சுமனுஷ்யர் துர்மனுஷ்யர் திவ்வியமனுஷ்யர் குமனுஷ்யர் பிரகிருதிமனுஷ்யர் என்ற ஐவகை மனுஷ்யர். (நீலகேசி, 82, உரை.) |